Tamil Serial Rating : ராதிகா தான் என் சொத்து எனக்கு எதுக்கு இன்னொரு சொத்து : தலைவன் கோபியின் மைண்ட் வாய்ஸ்

Tamil Serial Update : சுமார் 2 மணி நேரத்தில் முடிவு தெரிந்துவிடும் திரைப்படங்களை போல் இல்லாமல் நாள்தோறும் பல திருப்பங்களுடன் அரங்கேறி வரும் அரைமணி நேர சீரியல் எபிசோடுகளுக்கு ரசிகர்கள் அதிகம்.

Tamil Serial Rating Update : சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் சீரியல் ஒரு இன்றியமையாத பொழுதுபோக்காக மாறிவிட்டது என்று கூறலாம். அந்த அளவிற்கு சீரியல் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம்பிடித்துள்ளது. இதனை தங்கவைத்துக்கொள்ளும் நோக்கில் நாள்தோறும் புதிய சீரியல்கள் களமிறங்கி வருகினறனர். பழைய சீரியல்கள் ஒருசில முடிவுக்கு வந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் சீரியல் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு நாள்தோறும் உயர்ந்து வருகிறது.

சுமார் 2 மணி நேரத்தில் முடிவு தெரிந்துவிடும் திரைப்படங்களை போல் இல்லாமல் நாள்தோறும் பல திருப்பங்களுடன் அரங்கேறி வரும் அரைமணி நேர சீரியல் எபிசோடுகளுக்கு ரசிகர்கள் அதிகம். இதில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில் ஒவ்வொரு சீரியலுக்கும் தினசரி ப்ரமோக்கள் வெளியிடப்பட்டு வருகிறது. இந்த ப்ரமோவை வைத்தே அன்றைய எபிசோடுகளின் கதையை தீர்மானித்து விடலாம். அந்த வகையில் இன்று வெளியாகியுள்ள ப்ரமோக்களை வைத்து எந்த சீரியல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை பார்ப்போம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தமிழும் சரஸ்வதியும்

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் மீனா தான் நம்மள மாதிரி நார்மலா இருப்பாங்க.. தனம் முல்லை லாம் சீரியல் மெட்டீரியல் என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் இந்த அம்மா சந்தியாவை தமிழுக்கு கட்டி வைக்கலாம் என்று கூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் விஜய் டிவியின் உருப்படியான சீரியல் தமிழும் சரஸ்வதியும் மட்டுமே என்று கூறியுள்ளார். சங்கமம் எப்போது முடியும் என்று தெரியவில்லை என ஒரு ரசிகர் கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் தமிழும் சரஸ்வதியும் சூப்பர் என்றே கூறியுள்ளனர்.

பாரதி கண்ணம்மா

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் அஞ்சலி பாவம் என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் இந்த கடத்தல் யார் பண்ணானு பாரதி வீட்ல யாருக்குமே தெரியாத மாதிரிதான் கதை போகும் என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் இந்த வாரம் ஃபுல்லா இதே சீன்தானா என்று கேட்டுள்ளார். மேலும் ஒரு ரசிகர் வெண்பா பற்றிய உண்மை யாருக்குமே தெரிய வராதா டைரக்டர் சார் என்று கேட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் வெண்பா கேரக்டருக்கு விமர்சனங்களை கொடுத்துள்ளனர்.

பாக்யலட்சுமி

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் டேய் அப்பா உன்னால எனக்கு என்னா பண்ண முடியுமோ அத பண்ணிட்ட என கோபி நினைப்பது போல பதிவிட்டுள்ளார். மேலும் ஒரு ரசிகர் எனக்கு சொத்து வேணாம் ராதிகா தான் வேணும் என்று கோபி நினைப்பது போல கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் ராதிகா தான் என் சொத்து எனக்கு எதுக்கு இன்னொரு சொத்து என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் கோபி மனதில் ராதிகாவை நினைப்பது போலவே பதிவிட்டுள்ளனர்.

ராஜா ராணி 2

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் சந்தியா சொல்வது சரிதான் கஷ்டம் இல்லாமல் ஜெயித்துவிட்டால் அது நமக்கு பெரிதாக தெரியாது என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் அர்ச்சனா உளருவதை பார்த்தே கண்டுபிடித்துவிடலாம் ஆனால் உங்களுக்கு ஒன்றும் தெரியவில்லை என்று கூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் இப்படியே போன என்ன அர்த்தம் அர்ச்சனா எத்தனை முறைதான் திருட்டுத்தனம் செய்வார் என்று கூறியுள்ளார்.

ரோஜா

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் பாட்டி மாறிய பிறகு சூப்பரா இருக்கும் என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் அனு வந்தால் ரோஜா வுக்கு கண்டிப்பாக பிரச்சனை தான் வரும் என்று கூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் வில்லங்கம் வந்துருச்சு டா ரெண்டு நாளா சந்தோஷமா போச்சு என்று கூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் வீட்டில் இருந்த இரண்டு பசங்களை யும். காணோமே மேல் படிப்புக்காக வெளிநாடு போனதாக கதை. சொல்ல போறாங்கன்னு நினைக்கிறேன் என்று கூறியுள்ளார். அனு வந்தவுடன் ரோஜாவை டார்ச்சர் பண்ணா ஆரம்பிச்சுடுவா என்று கூறியுள்ளனர்.

நாம் இருவர் நமக்கு இருவர்

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் மாயனின் அடுத்த அதிரடி தொடங்கியாச்சு என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் மாயன் எப்போவுமே மாஸ்தான் என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் சரண்யாவுக்கு வேற வேலையே இருக்காது போல என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் மாயனை புகழ்ந்துள்ளனர்.

இந்த கருத்துக்களை வைத்து பார்க்கும்போது ரோஜா சீரியலுக்கே அதிக எதிர்பார்ப்பு உள்ளது என்று கூறலாம். அண்ணப்பூரணி திருந்தியதும் அனு வீட்டிற்குள் வந்ததும் இனி என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மற்றபடி அனைத்து சீரியல்களும் அந்தந்த ரசிகர்களை திருப்திப்படுத்தும் என்று கூறலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil serial update with promo video in tamil serials

Next Story
பாகுபலி பிரச்சனை… நடிகனாக இருப்பது குற்றமா?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com