/tamil-ie/media/media_files/uploads/2021/03/Yaaradi-nee-mohini2.jpg)
Tamil Serial Yaaradi Nee Mohini : கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக ஜீ தமிழ் தொலைக்கட்சியில் ஒளிபரப்பாகி வரும் யாரடி நீ மோகினி சீரியல் விரைவில் முடிவுக்கு வரலாம் என்று எதிரப்பர்க்கப்படுகிறது. .
தமிழகத்தில் சீரியல்கள் ஒளிபரப்பாகும் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்று ஜீ தமிழ். இதில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் சீரியல் யாரடி நீ மோகினி. ஸ்ரீகுமார், நட்சத்திரா, சைத்ரா, பாதிமா பாபு, யமுனா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் இந்த சீரியல் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. காதல் மற்றும் குடும்ப உறவுகளை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல், முத்தரசன், வெண்ணிலா கதாப்பாத்திரங்களின் காதல் காட்சிகள் மிகவும் பிரபலம்.
அதிக பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த சீரியலில், விரைவில் முடிவுக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சீரியலில் வில்லி ஸ்வேதா (சைத்ரா) கதாப்பாத்திரம் இறந்துவிடுவது போல் கட்சி ஸ்வேதா ரோல் இறந்துவிடுவது போல கட்சிகள் வெளியாகியுள்ளதால், இனி இந்த சீரியல் விரைவில் முடிந்துவிடும் என செய்தி பரவி வருகிறது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ள நிலையில், சீரியல் குழுவினரிடம் இருந்து இதுவரை எந்த ஒரு விளக்கமும் வெளிவரவில்லை.
இந்த தொடர் அதிகம் பார்க்கும் தொடர்களில் சிறந்த 5 தொடர்களுக்குள் அடங்கும், அதே தருணம் தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் அதிக மொழிகளில் மறுதயாரிப்பு செய்த தொடரும் இதுவாகும். தமிழிருந்து ஒடியா மொழியில் முதல் முதலில் மறுதயாரிப்பு செய்த தொடர் இது என்பது குறிப்பிடத்தக்கது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.