Tamil Serial Update : ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை தரும் சீரியல்களை ஒளிபரப்புவதில் விஜய் டிவிக்கு தனி இடம் உண்டு. இந்த டிவி சீரியல்கள் கதைக்காக வெற்றி பெற்றாலும், வெற்றிக்காக மற்றொரு ரகசியம் ஒன்று உள்ளது. இதுதான் சீரியலின் டைட்டில். ராஜா ராணி, கடைக்குட்டி சிங்கம், ராஜபார்வை பாரதி கண்ணம்மா உள்ளிட்ட பல தொடர்கள் சினிமா டைட்டில்களுடன் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
அந்த வகையில் சமீபத்திய புதுவரவு வைதேகி காத்திருந்தாள். முன்னணி நடிகரான பிரஜின், சரண்யா ஆகியோர் முன்னணி கேரக்டரில் நடித்து வரும் இந்த சீரியலில், பழம்பெரும் நடிகை லதா முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். சிறு வயதில் தொலைந்துபோன் பேத்தி திரும்பவும் வீட்டிற்கு வருகிறாள். அவள் வந்த பிறகு வீட்டிற்குள் என்ன நடந்தது என்பதை சுவாரஸ்யத்துடன் சொல்லும் இந்த சீரியல் தொடக்கத்தில் இருந்தே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
தற்போது வரை 40 எபிசோடுகளை கடந்துள்ள வைதேகி காந்திருந்தாள் சீரியலில் இருந்து நடிகர் பிரஜின் திடீரென விலகியுள்ளார். சின்னத்திரையின் சின்னத்தம்பி என்று ரசிகர்களால் போற்றப்படும் பிரஜின், விஜய் டிவியின் சின்னத்தம்பி, அன்புடன் குஷி உள்ளிட்ட பல தொடர்களில் நடித்துள்ளார். சீரியலில் நடித்துக்கொண்டே பட வாய்ப்புக்காக அலைந்துகொண்டிருந்த பிரஜினுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதனால் தொடர்ந்து சீரியலில் நடித்து வந்தார்.
அன்புடன் குஷி சீரியலுக்கு பிறகு வேறு எந்ந சீரியலிலும் கமிட் ஆகாமல் இருந்து பிரஜின் கடந்த ஆண்டு இறுதியில்தான் வைதேகி காத்திருந்தால் சீரியலில் நடிக்க தொடங்கினார். பிரஜினுக்காகவே இந்த சீரியலுக்கு ரசிகர்கள் பட்டாளம் பெருகிய நிலையில், தற்போது பிரஜினின் திடீர் விலகல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் பல நாட்களாக எதிர்பார்த்தக்கொண்டிருந்த பட வாய்ப்பு தற்போது வந்துள்ளதால் சீரியலில் இருந்து விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் பிரஜினுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த ரசிகர்கள் வைதேகி காந்திருந்தால் சீரியலில் பிரஜினுக்கு பதிலாக யார் நடிக்கப்போகிறார் என்ற எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர். இந்த காத்திருப்புக்கு பதில் சொல்லும் வகையில் இந்த சீரியலில் பிரஜின் கேரக்டரில் நடிக்க நடிகை முன்னா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சன்டிவியின் சந்திரலேகா தொடரில் நடித்த இவர், விஜய் டிவியின் ராஜபார்வை தொடரில் நடித்து வந்தார். சில காரணங்களால் அந்த தொடர் பாதியில் நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் விஜய் டிவி சீரியலில் கமிட் ஆகியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “