Advertisment

ஒரே வாரத்தில் முடிவுக்கு வரும் 3 முக்கிய சீரியல்: சின்னத்திரை ரசிகர்கள் ஷாக்!

தமிழ் சின்னத்திரையில் ஒரே வாரத்தில் 3 முக்கிய சீரியல்கள் முடிவுக்கு வர உள்ளது சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

author-image
WebDesk
New Update
Sun tv and Zee tamil Serial

சின்னத்திரை ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தும் வகையில் வரும் வாரம் முக்கிய 4 சீரியல்கள் முடிவுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிலும் குறிப்பாக சன்டிவியின் முக்கிய சீரியல் ஒன்று முடிவுக்கு வர உள்ளதும், அதற்கு பதிலாக ஒளிபரப்பாக உள்ள புதிய சீரியல் குறித்தும் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

சின்னத்தரை ரசிகர்கள் மத்தியில் முக்கிய பொழுதுபோக்கு அம்சமாக இருப்பது சீரியில்கள். இதனை பயன்படுத்திக்கொள்ளும் சேனல்கள், பல சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது. இதில் வரவேற்பை பெற்று வரும் சீரியல்கள் தொடர்ந்து ஒளிபரப்பாகி வந்தாலும், வரவேற்பு இல்லாத சீரியல்கள் ஒருசில மாதங்களில் முடிவுக்கு வந்துவிடும். அதற்கு பதிலாக புதிய சீரியல்கள் ஒளிபரப்பாவது, அல்லது நன்றாக ஓடிக்கொண்டிருக்கும் சீரயில்களில் நேரத்தை நீடிப்பது அவ்வப்போது நடந்து வருகிறது.

சில சமயங்களில், நன்றாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்கள் கூட ஒரு கட்டத்தில் முடிவுக்கு வந்துவிடும். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியும் வருத்தமும் அடைவது வழக்கமான ஒன்று அந்த வகையில், இந்த வாரம் 4 சீரியல்கள் முடிவுக்கு வர உள்ளது. அதிலும் குறிப்பாக அண்ணன் தங்கை பாசத்தை அடிப்படையாக வைத்து ஒளிபரப்பாகி வரும் சன்டிவியின் வானத்தைப்போல சீரியல் நாளையுடன் (ஆகஸ்ட் 17) முடிவுக்கு வர உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் ஏற்கனவே ஜீ தமிழின் முக்கிய சீரியல்களில் ஒன்றாக இருந்த மீனாட்சி பொண்ணுங்க சீரியல் கடந்த ஆகஸ்ட் 4-ந் தேதி முடிவுக்கு வந்துவிட்ட நிலையில், தற்போது இந்திரா என்ற சீரியலும் முடிவுக்கு வர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வரும் ஆன்மீக தொடரான சங்கடம் தீர்க்கும் சனீஸ்வரன் சீரியலும் முடிவுக்கு வர உள்ளது. ஜீ தமிழின் இந்திரா சீரியல் முடிவுக்கு வர உள்ளதால், அதற்கு பதிலாக இதயம் சீரியல் ஒரு மணி நேரம் ஒளிபரப்பாக உள்ளது.

சன்டிவியில் வானத்தைப்போல சீரியல் நாளையுடன் முடிவுக்கு வர உள்ளதால், அந்த சீரியலுக்கு பதிலாக மூன்று முடிச்சு என்ற புதிய சீரியல் ஒளிபரப்பாக உள்ளது. இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ள இந்த சீரியலில், ஈரமான ரோஜாவே சீரியலில் நடித்த நடிகை சுவாதி கொண்டே நாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Suntv Serial Vanathai Pola Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment