/tamil-ie/media/media_files/uploads/2022/02/Vanathia.jpg)
Tamil Serial Update : அண்ணன் தங்கை பாசத்தை கருவாக வைத்து ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல் வானத்தைப்போல. சன்டிவியின் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் கடந் 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த சீரியல்,டிஆர்பி ரேட்டிங்கிலும் முன்னணியில் இருந்து வருகிறது.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாக இந்த சீரியலில் நடித்து வரும் நடிகர் நடிகைள் சீரியலை விட்டு விலகும் படலம் தொடர்ந்து வருகிறது. அந்த வகையில், இந்த சீரியலின் தங்கை கேரக்டரில் நடித்து வந்த நடிகை ஸ்வேதா இந்த படலத்தை தொடங்கி வைத்தார். தங்கை துளசி கேரக்டரில் நடித்து வந்த ஸ்வேதாக சில தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்த நிலையில், அண்ணன் சின்ராசு கேரக்டரில் நடித்து வந்த நடிகர் தமன் அடுத்த சில எபிசோடுகளில் தானும் சீரியலில் இருந்து விலககுவதாக அறிவித்தார். வானத்தை போல சீரியலில் இவர்களுக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளம் இருந்த நிலையில், அடுத்தடுத்து இருவரும் சீரியலை விட்டு வெளியேறியது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்பாடுத்தியது.
இந்நிலையில், தற்போது துளசி கேரக்டரில், மான்யா ஆனந்த், மற்றும் சின்ராசு கேரக்டரில் நடிகர் ஸ்ரீகுமார் ஆகியோர் நடித்து வரும் நிலையில், சந்தியா கேரக்டரில், தேப்ஜனி, வெற்றி கேரக்டரில் அஸ்வந்த் திலக் நடித்து வரும் நிலையில், முக்கிய கேரக்டரில் மகாநதி சங்கர் நடித்து வரும் நிலையில், வானத்தைப் போல சீரியலில் சரவணன் கேரக்டரில் நடித்து வந்த நடிகர் ஷங்கரேஷ் குமார் தற்போது இந்த சீரியலில் இருந்து விலகியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.