3-வது முறையாக நடிகை மாற்றம் : வானத்தைப்போல சீரியலில் என்ன நடக்கிறது?

தற்போது வானத்தைப்போல சீரியலில். பொன்னி கேரக்டரில் நடிக்கும் ப்ரீத்தி குமாருக்கு பதிலாக சாந்தினி பிரகாஷ் நடிக்கிறார்.

தமிழ் சின்னத்திரையில் முக்கிய சீரியல்களில் ஒன்று வானத்தைப்போல. அண்ணன் தங்கை பாசத்தை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த சீரியில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில். அடிக்கடி நடிகர் நடிகைகள் மாற்றம் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் தற்போது வானத்தைப்போல சீரியலில். பொன்னி கேரக்டரில் நடிக்கும் ப்ரீத்தி குமாருக்கு பதிலாக சாந்தினி பிரகாஷ் நடிக்கிறார். சீரியல் தொடங்கியது முதல் பொன்னி கேரக்டர் தற்போது 3-வது முறையாக மாற்றப்பட்டுள்ளது. முதலில் சங்கீதா என்பவர் பொன்னி கேரக்டரில் நடித்து வந்தார்.

அதன்பிறகு அவருக்கு பதிலான ப்ரீத்தி குமார் பொன்னியாக நடித்து வந்த நிலையில், தற்போது அவரும் சீரியலில் இருந்து விலகியதால் அவருக்கு பதிலாக சாந்தினி பிரகாஷ் நடித்து வருகிறார். இவரது காட்சிகள் வரும் வாரத்தில் ஒளிபரப்பாக உள்ளது.

விஜய் டிவியின் ராஜா ராணி சரவணன் மீனாட்சி காற்றின் மொழி உள்ளிட்ட தொடர்களில் நடித்து பிரபலமான சாந்தினி பிரகாஷ், பொன்னி கேரக்டரிர் நடிக்க ஆர்வமாக இருப்பாதாகவும் தனது சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். வானத்தைப்போல சீரியலில் நாயகன் சின்ராசு அவரது தங்கை துளசி இருவருக்கும் இடையேயான பாசப்பினைப்பை எடுத் கூறுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil serial vanathaipola again actress change ponni character