வீரா சீரியல் ப்ரமோ Photograph: (zee tamil Veera Serial Promo)
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான வீரா சீரியலின் சண்டே ஸ்பெஷல் எபிசோட் வரும் ஞாயிறு மாலை 5 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. இந்த சண்டே ஸ்பெஷல் எபிசோடில், ராமசந்திரன் குடும்பமும் அரவிந்தன் குடும்பமும் ஏற்கவே கோவிலுக்குள் நேருக்கு நேராக சந்தித்து கொண்டனர்.
Advertisment
அடுத்து ஊரில் கோவில் திருவிழா தொடங்க கயிறு இழுக்கும் போட்டி நடக்க உள்ளது, இதில் ராமசந்திரன் குடும்பம் ஒரு பக்கமும் அரவிந்த் குடும்பம் இன்னொரு பக்கமும் போட்டி போட உள்ளனர். மாறனின் நண்பர்கள் அவனை கள் குடிக்க சொல்லி கட்டாயப்படுத்த அவன் வேண்டாம் என்று சொல்லி கொண்டிருக்கிறான். இதை தூரத்தில் இருந்து பார்த்து தவறாக புரிந்து கொண்ட குடும்பத்தினர் மாறனை விட்டு விட்டு போட்டியில் கலந்து கொள்கிறார்.
அரவிந்த் குடும்பம் கயிறை இழுத்து ஜெயிக்க போகும் சமயத்தில் மாறன் என்ட்ரி கொடுத்து தனது குடும்பத்தை ஜெயிக்க வைத்து அரவிந்த் குடும்பத்தை மண்ணை கவ்வ வைக்கிறார். இதற்கிடையில் வள்ளி, மைக் செட் முருகன் காதல் குறித்த விஷயமும் தெரிய வருகிறது. அரவிந்த் குடும்பத்தினர் ராமசந்திரன் குடும்பத்தினரை அவனமானபடுத்தி பேசிய படி இருக்கின்றனர். இதனால் மாறன் அவர்களை அடி வெளுத்தெடுக்க அரவிந்த் குடும்பத்தினர் ஊரை விட்டு கிளம்ப முடிவெடுக்கின்றனர்.
Advertisment
Advertisements
இதை பார்த்த வீரா அவங்க இப்போ போய்ட்டா மாமா பத்தி சொன்ன விஷயங்கள் எல்லாம் உண்மையாகிடும், அவங்க சொன்னதெல்லாம் பொய் என்று நிரூபிக்க வேண்டும் என்று சொல்ல அரவிந்தால் ஏமாற்றப்பட்ட பெண்ணை வர வைத்து அவனின் முகத்திரையை கிழிக்கிறான் மாறன். மேலும் அவர்களை ராமசந்திரன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைக்கிறான். இதனால் அரவிந்த் மாறன் குடும்பத்தை அடியோடு அழிக்க திட்டம் போடுகிறான்,
போதையில் இருக்கும் மாறனை கடத்தி கட்டி வைத்து அதன் மூலமாக வீராவையும் தனது பிடியில் சிக்க வைத்து மாறனை கொல்ல துணிய சரவணன் உடம்பில் பாண்டியன் ஆன்மா இறங்கி மாறனை காக்க வருவது போல் இந்த எபிசோட் ஒளிபரப்பாக இருப்பதாக தெரிய வந்துள்ளது. எனவே வீரா சீரியலின் சண்டே ஸ்பெஷல் எபிசோடு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“