Advertisment

அக்காவை வம்பிழுக்கும் தங்கை: சவால் விட்டது என்னாச்சு? வீரா அப்டேட்

ஜீ தமிழின் வீரா சீரியலில், அக்கா தங்கை இருவரும் எதிரிகளாக மாறியுள்ள நிலையில், தங்கை அக்காவை வம்பிழுத்து கலகலப்பை ஏற்படுத்தியுள்ளார்.

author-image
WebDesk
New Update
veera serial

கண்மணியை வம்பிழுக்கும் வீரா.. பயத்தில் நடுங்கும் மாறன், காரணம் என்ன? வீரா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட் 

Advertisment

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் வீரா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் வள்ளி வீரா மாறன் சமைத்து சாப்பிட புது பாத்திரங்களை வாங்கிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அதாவது, மாறன் வந்ததும் அவனிடம் புது பாத்திரங்களை எடுத்துட்டு போய் தனியா சமைத்து சாப்பிடுங்க என்று சொல்கிறாள். பிறகு மேலே வந்த மாறன் சத்தம் போட்டு தூங்கி கொண்டிருந்த வீராவை எழுப்பி விடுகிறான். 

இதை தொடர்ந்து வீராவிடம் வள்ளி அத்தை புதிய பாத்திரங்களை வாங்கி வைத்திருக்கும் விஷயத்தை சொல்ல அவள் கீழே இறங்கி வந்து வள்ளியிடம் எல்லாம் நல்லபடியா போயிட்டு இருக்கு என்று பேசுகிறாள், வள்ளி கண்மணியை திருத்துற வேலையை ஆரம்பித்து விடலாமா என்று கேட்க வீராவும் சம்மதம் சொல்லி கிச்சனுக்குள் வருகிறாள். 

அங்கு கண்மணி மற்றும் வடிவு என இருவரும் சமைத்து கொண்டிருக்க அங்கு வந்து ஒரு கேசில் காபி போட்டு கண்மணியை வம்புக்கு இழுக்கிறாள். இன்னொரு பக்கம் மாறன் அமர்ந்து பேப்பர் படித்து கொண்டிருக்க அதில் எல்லா செய்தியும் தப்பாகவே இருக்க மாறன் வீரா கொண்டு வந்து கொடுத்த காபியை குடிக்க தயங்குகிறான். 

பிறகு வள்ளி பேசி அவனை காபி குடிக்க வைக்கிறாள். பிறகு வீரா மீண்டும் கிச்சனுக்கு வந்து டிபன் செய்ய தயாராக கண்மணி, வடிவு அவளை வெளியே போக சொல்ல வீரா அடம் பிடித்து அங்கேயே சமைக்கிறாள். பிறகு ராமசந்திரன் கீழே வர வீரா கிச்சனில் இருக்க அவளிடம் நீ எதுக்கு இங்கே இருக்க என்று கோபப்படுகிறார். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Tamil Cinema News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment