tamil serial video news, sun tv, sun tv serial, sun tv serial news, sun tv roja serial, sun tv roja serial news, தமிழ் சீரியல், தமிழ் சீரியல் வீடியோ, சன் டிவி சீரியல், ரோஜா
Tamil Serial Video News: ரோஜா சீரியலில் அர்ஜுனின் பாட்டியாக நடிகை வடிவுக்கரசி நடிச்சு இருக்காங்க. பாட்டிதான் அந்த வீட்டுக்கு எல்லாமே...எல்லாருக்கும் புடிச்சவங்க வேற. பேரு அன்னபூரணி. யாரும் பாட்டியை எதிர்த்து பேச மாட்டாங்க...வேலைக்காரி சுமதி மட்டும் பாட்டி ஏதாவது தப்பு செஞ்சா சுட்டிக் காட்டுவாங்க.
Advertisment
பாட்டிக்கு வேலைக்காரி மேல கோவம் வராது... காரணம் என்னன்னு பார்த்தா... பெரியம்மா.. நான் நியாயத்தைத்தான் பேசறேன்... உங்களுக்கு பிடிக்கலைன்னா என்னை வேலை விட்டு அனுப்பிருங்க... எனக்கு என்ன இந்த வீடு இல்லேன்னா வேற வீடு என்று சொல்லி சொல்லியே மிரட்டி வச்சு இருப்பதுதான்.
Advertisment
Advertisements
வடிவுக்கரசி அந்த வீட்டுக்கு எஜமானியா பின்னால கையைக் கட்டிக்கிட்டு கம்பீரமா நடக்கறது... மருமகளே.. மருமகளேன்னு கூப்பிட்டு மருமகளை அதட்டுவது என்று ரொம்ப நல்லா நடிச்சு இருக்காங்க.
மூத்த பேரன் அர்ஜுன், கல்யாணமே பிடிக்காதுன்னு சொல்லிக்கிட்டு இருக்கான். பேத்தின்னு வீட்டுக்குள் நுழைஞ்சு இருக்கும் அணுவை கல்யாணம் செய்துக்க சொல்லி பாட்டி வற்புறுத்தறாங்க. பேத்தி என்று பொய் சொல்லி அந்த வீட்டில் உறவாடிக்கொண்டு இருக்கும் அணுவும் அர்ஜுனை கல்யாணம், செய்துக்கொண்டு இப்படியே இந்த வீட்டில் செட்டில் ஆகிவிடலாம் என்று கனவு கண்டுக்கொண்டு இருக்க, அர்ஜுன், பிரியமானவளே படம் மாதிரி ஒரு வருஷ காண்டிராக்ட் என்று ரோஜாவை கல்யாணம் செய்துக்கொண்டு வந்துடறான். காண்டிராக்ட் விஷயம் பரம ரகசியம்.. யாருக்கும் தெரியாது. இயல்பாகவே அர்ஜுன் வக்கீல் என்றாலும், கிண்டல், கேலி நையாண்டி என்று யாருக்கும் கவலைப்படாமல் பேசும் கேரக்டர்.
பாட்டி அன்னபூரணி அம்மா, வீடியோ காலில் அணுகிட்டே பேசிகிட்டு இருக்காங்க. அணு சொல்றா.. அர்ஜுன் மாமா யாரை கல்யாணம் செய்துகிட்டு இருந்தாலும் நான் கவலைப்பட்டு இருக்க மாட்டேன் பாட்டி... போயும் போயும் இந்த ரோஜாவை கல்யாணம் செய்துகிட்டு வந்துட்டார் பாட்டி.. ரோஜா ரொம்ப மோசமான பொண்ணு பாட்டி இப்படி எல்லாம் சொல்றா. நீ கவலைப்படாத கண்ணு...ஆசை 60 நாள் மோகம் 30 நாள்னு சொல்வாங்க. அது மாதிரி அர்ஜுனும் அவ மேல இருக்கற மோகம் குறைஞ்சு வந்துருவான்... அப்புறம் பாரு நீதான் இந்த வீட்டுக்கு மருமகள்னு சொல்லிட்டு போனை வச்சுட்டு திரும்பிப் பார்த்தா அர்ஜுன் இதை கேட்டுகிட்டு நிக்கறான்.
வா அர்ஜுன்.. எப்போ வந்தேன்னு கேட்கறாங்க. நீங்க ஆசை 60 நாள் மோகம் 30 நாள்னு சொல்லகிட்டு இருந்தீங்களே அப்பவே வந்துட்டேன் பாட்டின்னு சொல்ல... சும்மா பழமொழியை சொல்லி பார்த்துகிட்டு இருந்தேன் அர்ஜுன்னு சொல்றாங்க பாட்டி. ஏன் பாட்டி நீங்களும் தாத்தாவும் எத்தனை வருஷம் சேர்ந்து வாழ்ந்து இருந்தீங்கன்னு கேட்கிறான்... 45 வருஷம் சேர்ந்து வாழ்ந்தோம் அர்ஜுன் என்று பெருமையா சொல்றாங்க பாட்டி. ஏன் பாட்டி.. ஆசை 60 நாள் மோகம் 30 நாள்னு சொல்ற பழமொழி உங்க விஷயத்துல வொர்கவுட் ஆகலையா ன்னு கேட்க, பாட்டி விக்கித்து நிக்கிறாங்க..
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"