விஜய் டிவியின் இந்த சீரியல் இன்னும் பல வருஷம் தொடரணுமாம்… சந்தோஷ கொண்டாட்டம்!

Vijay TV Anbudan Kushi Serial : விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்புடன் குஷி சீரியல் தற்போது 300 எபிசோடு என்ற மைல்கல்லை எட்டியுள்ளது.

Anbudan Kushi Serial Tamil News : தமிழில் சீரியல்களுக்கு பெயர்பெற்ற முக்கிய தொலைக்காட்சிகளில் ஒன்று விஜய்டிவி. இதில் ஒளிபரப்பாகும் சீரியலுக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இதனால் விஜய் டிவி சீரியல்களில் இருந்து வரும் ஒரு சிறிய தகவலும் இணையத்தில் பெரும் வைரலாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது விஜய் டிவியின் அன்புடன் குஷி சீரியல் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இறுதியில் தொடங்கப்பட்ட அன்புடன் குஷி சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. பிரஜின், ஸ்ரோயா, லோகேஷ் பாஸ்கரன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் இந்த சீரியலில் சமீபத்தில் இந்த சீரியலில் ஹீரோயின் மாற்றப்பட்டு திருமணம் சீரியல் புகழ் ஸ்ரேயா அஞ்சன் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது இந்த சீரியல் 300 எபிசோடுகளை கடந்து சாதனை படைத்துள்ளது. இதை சீரியல் குழுவினர் பெரிய கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இது குறித்து புகைப்படங்களை நாயகன் ப்ரஜின் மற்றும் நாயகி ஸ்ரேயா இருவரும் இன்ஸ்டாகிராமில் மிகவும் நெகிழ்ச்சியாக பதிவிட்டு இருக்கின்றனர்.

கேக் வெட்டியபோது குழுவினர் உடன் எடுத்த போட்டோக்களை ஸ்ரேயா அஞ்சன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கிறார். தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil serial vijay tv anbudan kushi cross 300 episode celebrate team

Next Story
‘ஆத்தா வாயாட்டத்தை நிப்பாட்டு… மேடையில் வந்து ஆடு..!’ வனிதா டான்ஸ் வீடியோ
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express