சின்னத்திரையில் பாக்கியலட்சுமி சீரியலில் கோபி ராதிகாவை திருமணம் செய்துகொண்டு தனியாக சென்றுவிட்ட நிலையில். தற்போது இனியாவும் வீட்டை விட்டு அப்பாவிடம் சென்றுவிடுவது போல் ப்ரமோ வெளியாகியுள்ளது.
தமிழ் சின்னத்திரையில் முக்கிய சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. விஜய் டிவியின் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகும் இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் டிஆர்பி ரேட்டிங்கிலும் முக்கிய இடத்தை பெற்று வருகிறது. தற்போது கோபி தனது குடும்பத்தில் இருந்து பிரிந்து ராதிகாவை திருமணம் செய்துகொண்டார்.
பாக்யா தனி ஆளாக குடும்பத்தை கவனிக்க தொடங்கிவிட்டார். இதனால் சீரியல் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தனது குடும்பத்தின் மத்தியில் சந்தோஷமான வாழ வேண்டும் என்று ராதிகாவை அழைத்துக்கொண்டு தனது வீட்டுக்கு பக்கத்திலேயே குடி வந்த கோபி, இனியா ஸ்கூலில் செய்த தவறுக்காக அவளுக்கு சப்போர்ட் செய்து பாக்யாவிடம் இருந்து இனியாவை அழைத்து சென்றுவிட்டார்.
இதனிடையே இனியா பிக்னிக் சென்ற பள்ளி வேன் ஆக்ஸிடன்ட் ஆகிவிட்டடதாக கோபிக்கு போன் வருகிறது. அதேபோல் இனியாவின் தோழியின் அம்மா பாக்யாவுக்கு போன் செய்து விஷயத்தை சொல்கிறார். இதனால் கோபி பாக்யா இருவரும் பள்ளிக்கு செல்கின்றனர். இதில் முன்னாடியே சென்றுவிடும் கோபி, இனியாவை பார்த்து நலம் விசாரித்து வீட்டுக்கு அழைத்து வருகிறார்.
அப்போது அங்கே பாக்யா எழிலுடன் வர கோபி இனியாவை அவர்களுக்கு காட்டாமல் அழைத்து சென்றுவிடுகிறார். இனியா கோபியுடன் செல்வதை பார்த்த பாக்யா கதறி அழுதுகொண்டு கோபியின் வீட்டு சென்று இனியாவை பார்க்க முயற்சிக்கிறார். ஆனால் இனியா ரூமை விட்டு வெளியில் வராத நிலையில், கோபி பாக்யாவை அசிங்கப்படுத்தி அனுப்பி விடுகிறார்.
வீட்டிற்கு வரும் பாக்யா வீட்டில் மகளை நினைத்து அழுகிறார். இதை பார்த்துவிட்டு தாத்தா கோபியின் வீட்டுக்கு செல்ல, அங்கு இனியா தாத்தாவிடம் பேசுகிறாள். அப்போது அம்மா கூப்பிட்டதுக்கு ஏன் வரவில்லை என்று கேட்க, நான் வந்திருந்தால் டாடி என்மீது கோபப்பட்டிருப்பார். அப்புறம் எப்படி அவரை நான் நம்ம வீட்டுக்கு கூட்டி வர முடியும் என்று கேட்க, இதை கேட்டுக்கொண்டு இருக்கும் ராதிகா கோபிக்கும் உங்க அம்மாவுக்கும் டைவர்ஸ் ஆகிடுச்சி. இப்போ எனக்கும் கோபிக்கும் கல்யாணம் ஆகிடுச்சு அப்புறம் எப்படி அவர் உன்கூட வருவாரு என்று கேட்கிறார்.

அவர் என்மேல் பாசமாக இருக்கிறார் கண்டிப்பா நான் அவரை உங்களிடம் இருந்து பிரித்து எங்க வீட்டுக்கு கூட்டிக்கிட்டு போவேன் என்று சொல்ல ராதிகா அதிர்ச்சியாகிறார். இதனால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர்கள் பலரும் பொண்ணு பாசமா இல்ல 2-வது மனைவி காதலா பார்ப்போம் என்று கூறி வருகின்றனர்.
அதே சமயம் ராதிகா வில்லி என்று சொல்கிறார்கள். ஆனால் இனியா நடவடிக்கையை பார்த்தால்தான் வில்லி மாதிரி தெரிகிறது என்றும், நீங்கள் எவ்வளவுதான் பாசமாக பேசினாலும் இனியாவுக்கு புத்தி வரவே வராது தாத்தா என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“