சின்னத்திரையின் பாக்கியலட்சுமி சீரியல் தற்போது பரபரப்பாக சென்றுகொண்டிருக்கும் நிலையில், கோபி மீண்டும் குடித்துவிட்டு அலப்பறை செய்யும் காட்சிகள் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இல்லத்தரசிகளின் அன்றாட வாழ்வியலை அடிப்படையாக கொண்ட இந்த சீரியலில் பாக்யாவை விவாகரத்து செய்த கோபி தனது முன்னாள் காதலிலும் பாக்யாவின் நெருங்கிய தோழியுமாக ராதிகாவை திருமணம் செய்துகொண்டார். அதன்பிறகு பாக்யா முன் வாழ்ந்து காட்ட ராதிகாவுடன் தனது வீட்டின் அருகே குடியேறிவிட்டார்.
ஆனாலும் இதை கண்டுகொள்ளாத பாக்யா ராதிகாவின் ஆபீஸில் கேண்டின் ஆர்டர் எடுத்து ஒரு பிஸினஸ் வுமனாக வளர்ந்து வருகிறார். மறுப்பக்கம் பாக்யா திட்டியதால் அப்பா கோபியுடன் சென்ற இனியா இப்போது அப்பா திட்டியதால் மீண்டும் பாக்யாவிடம் வந்துவிட்டாள். கோபியின் நடவடிக்கை பார்த்து ராதிகாவின் அம்மாவும் ராதிகா வீட்டுக்கு வந்துவிட்டார்.
கோபி அடிக்கடி குடித்துவிட்டு வருவதால் தான் வீட்டை விட்டு வெளியே போவதாக கூறிய ராதிகாவை கோபி காலில் விழுந்து சமாதாப்படுத்தி இனி குடிக்க மாட்டேன் என்று சத்தியம் செய்து வீட்டில் இருக்க வைத்துள்ளார். இதை பார்த்த கோபியின் அம்மா ராதிகாவை விட்டுவிட்டு வந்துவிடு என்று கோபியிடம் சொல்கிறார். இதை கேட்ட ராதிகா ஷாக் ஆகி நிற்கிறார். இதனால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில் கோபி மீண்டும் குடித்துவிட்டு வருகிறார்.
குடித்துவிட்டு நிதானம் இல்லாமல் இருக்கும் கோபியை பார்க்கும் செழியன் கோபியை தனது காரில் அழைத்து செல்கிறான். அப்போது இனியா என்னை விட்டு போய்விட்டார். அவர் அம்மாவுடன் போய்விட்டால் என்று சொல்கிறார். அதன்பிறகு நீங்க எல்லாம் சரி நான் தான் தவறு ஐ யம் ய பேட் மேன் நான் ராதிகாவை மேரேஜ் பண்ணிருக்கவே கூடாது என்று கோபி புலம்புகிறார். இது தொடர்பான ப்ரமோ தற்போது வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“