தனம் மற்றும் பாக்யாவின் குடும்பம் மதுரையில் மல்லி வீட்டில் இருக்கின்றனர். அப்போது அனைவரும் பேசிக்கொண்டிருக்கும்போது தனம் வீட்டில் கார் வாங்கி ஏமாந்த விஷயம் பற்றி அனைவர் முன்னிலையிலும் பேசி கிண்டல் செய்கிறாள் மல்லிகா. இதை கேட்டு அனைவரும் சிரிக்கின்றனர், அப்போது ஐஸ்வர்யாவுக்கு போன் செய்யும் கண்ணன், அவர் மதுரைக்கு வந்துகொண்டிருக்கும் விஷயமத்தை கேள்விப்பட்டு அதிர்ச்சியடைகிறான். தொடர்ந்து ஏன் என்னிடம் ஒரு வார்த்தை சொல்லவே இல்லை என கேட்க நீதான் எப்ப பார்த்தாலும் எரிச்சலா பேசுற, உன்கிட்ட என்ன சொல்றது என அவள் கேட்கிறாள்.
இதனைத் தொடர்து பாக்யாவிடம் பேசிக்கொண்டிருக்கும் தனம், கார் வாங்கியது பற்றி பேசுகிறாள் கார் எங்களுக்கு தேவையே இல்லைன்னு இப்போதான் யோசிக்கிறோம் என்று கூறுகிறாள். அதற்கு பாக்யா நாங்களும், கிராமத்துல இருந்த ரெண்டு வீட்டை விற்று, சென்னை போய் பெரிய வீடு வாங்கினது சரியா தப்பான்னு கூட தெரியலை பசங்க படிப்பு வீடு இஎம்ஐ பற்றி அவர் பேசி, டென்ஷன் ஆகும் போது, எனக்கும் பயமா இருக்கும் என சொல்கிறாள்.
இதனடையே கோபியிடம், உங்களுக்கும் எழிலுக்கும் தனி ரூம் கொடுத்து இருக்காங்க என பாக்யா சொல்ல, ஈஸ்வரி எனக்கு தனி ரூம் வேணும் என கேட்கிறாள். ஆனால் உங்களுக்கும் இனியாவுக்கு தனி ரூம் கொடுத்திருக்கிறார்கள் என்று சொல்லும்பாது, மூர்த்தி குடும்பம் கார் வாங்கி ஏமாந்தது பற்றியம், அவர்களுக்கு அப்பா லோன் வாங்கி கொடுப்பார் என்று இனியா சொல்லியதையும் ஈஸ்வரி கோபியிடம் சொல்ல டென்ஷன் ஆகும் கோபி, இதுக்கப்புறம் என்னை கேட்காம எந்த கமிட்மெண்டும் கொடுக்காத என சொல்லிவிட்டு செல்கிறான்.
அப்போது அங்கு வரும் எழில் அவுங்களுக்கு ஒரு ஆறுதலா தான் சொன்னாங்க என சொல்லும்போது,நம்ம குடும்பத்துக்கு எதுவும் வேணும்னா கேளுங்க. மத்தவங்களுக்காக எல்லாம் எதுவும் கேட்காத என்கிறான். அதற்கு எழில், அம்மாவும் பிசினஸ் பிக்கப் பன்னிட்டாங்க அவங்களுக்கு ஒரு கார் வாங்கி கொடுங்க என கூறுகிறான். அதனை தொடர்ந்து பிரசாந்த் அனைவருக்கும் ரூம் ரெடி பண்ணிவிட்டு வந்து கூப்பிடுகிறான்.
இதனிடையே தூங்காமல் இருக்கும் தனத்திடம் வந்து பேசும் பாக்யா, முல்லை மல்லி கதை உன்னோட கல்யாணம் நடந்து முடிஞ்ச கதை எல்லாத்தையும் சொன்னா என கூறுகிறாள். அப்போது மல்லியை பார்த்து உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போனது பற்றி உனக்கு எந்த பயமும் இல்லையா? என பாக்யா கேட்க, இதுல என்ன பயம் அண்ணி. மல்லியை பார்த்ததுல எனக்கு சந்தோசம் தான். அவுங்கள மறுபடியும் பார்த்ததுல மூர்த்தி மாமாவுக்கு நிம்மதி தான் என் கூறுகிறாள்.
அப்போது பாக்யா, இனியா அப்பாவுக்கும் ஒரு லவ் ஸ்டோரி இருக்கு என அதைப்பற்றி கூறுகிறாள். நீங்க அந்த பொண்ணை பார்த்து இருக்கீங்களா என கேட்கிறாள் தனம். நான் பார்த்து இல்லை. ஆனா வயசு வித்தியாசமும் அதிகம் போல. அவ்வளவு தான் எனக்கு தெரியும். அவுங்க அப்பா கட்டாயப்படுத்துனதால, வேற வழியே இல்லாம என்னை கல்யாணம் பண்ணி இருக்காரு என கூறுகிறாள். இதனைத் தொடர்ந்து அடுத்த நாள் அனைவரும் காத்திருக்கும் போது, கஸ்தூரியும், ஐஸ்வர்யாவும் வருகின்றனர். கஸ்தூரியை பார்த்த பாக்யா பேமிலி ஷாக் ஆகின்றனர். அத்துடன் முடிகிறது இன்றைய எபிசோடு.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil