scorecardresearch

Tamil Serial Rating : கோபியை பற்றி தெரிந்துகொள்வாரா ராதிகா…? எதிர்பார்ப்பில் பாக்யலட்சுமி

Tamil Serial Update : பாக்யாவின் கணவர்தான் கோபி என்று தெரிந்தால் ராதிகாவின் ரியாக்ஷன் என்ன என்பதை பார்க்கவே ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்

Tamil Serial Rating Baakiyalakshmi Serial : விஜய்டிவியில் ஒளிபரப்பாகும் முக்கிய சீரியல்களில் ஒன்று பாக்யலட்சுமி. இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள இந்த சீரியல் டிஆர்பி ரேட்ங்கில் முன்ணியில் இருந்து வருகிறது. திருமணமாகி 3 குழந்தைகளுக்கு அப்பாவான கோபி வீட்டிற்கு தெரியாமல் தனது பள்ளி தோழியுடன் நெருங்கி பழங்கி வருகிறார். இதில் பள்ளி தோழியான ராதிகா கோபி மனைவி பாக்யலட்மியின் மனைவியின் நெருங்கிய தோழி.

ஆனாலும் கோபி தனது வீட்டிற்கு தெரியாமல் இந்த ரகசியத்தை பாதுகாத்து வருகிறார். பலமுறை இவர் வீட்டில் மாட்டிக்கொள்வார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. கடந்த சில எபிசோடுகளுக்கு முன்பு ராதிகாவுடன் கோவிலுக்கு சென்ற கோபி அங்கு பாக்யவுடன் வந்திருந்த தனது அப்பாவிடம் மாட்டிக்கொள்கிறார். இதன்பிறகு மகனை கண்டிக்கும் அப்பா அவரது நடவடிக்கைகளை கவனித்து வருகிறார்.

ஒரு கட்டத்தில் சொல்ல சொல்ல கேட்காமல் ராதிகாவுடன் பழகி வரும் போயிடம் அவரது அப்பா ராதிகாவுடன் பழக கூடாது என்று சத்தியம் வாங்கிக்கொள்கிறார். இதனால் கோபி சத்தியத்தை மீறுவாரா அல்லது சத்தியத்தை காப்பாற்றுவாரா என்து ரசிகர்கள்மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே எழில் அமிர்தாக காதல், செழியன் ஜெனி  குடும்பம் என பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத இந்த சீரியல் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

தான் அப்பாவுக்கு கொடுத்த சத்தியத்தையும் மீறி ராதிகாவுடன் பழகி வரும் கோபி, ராதிகாவின் ஆபிஸ் நிகழ்ச்சிக்கு நடிகர் ரஞ்சித் மற்றும் அவரது மனைவி பிரியாராமனை அழைத்து வருவதாக கூறுகிறார். இந்த தகவலை ராதிகா தனது அலுவலகத்தில் கூறிவிடுகிறார். இதற்கிடையே பாக்யா புதிதாக தொடங்க இருக்கும் பிஸினசின் தொடங்க விழாவிற்கு ரஞ்சித் மற்றும் பிரியாராமன் வரவேண்டும் என்று எழில் நேரடியாக சென்று அழைக்கிறார்.

இதனால் ரஞ்சித் பிரியாராமன் யாருடைய நிகழ்ச்சிக்கு செல்வார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மேலோங்கியுள்ளது. மேலும் இன்றைய எபிசோடு தொடர்ந்து 3 மணி நேரம் ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் பலரும் என்ன நடக்கும்என்று எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்த 3 மணி நேர எபிசோடுக்கான ப்ரமோ நேற்று வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.

இந்த சீரியலுக்கு எவ்வளவுதான் எதிர்பார்ப்புகள் இருந்தாலும், கோபி செய்யும் தவறுகள் எப்போது தெரியவரும் என்பது கேள்விக்குறியாகத்தான் உள்ளது. அதிரும் கோபி ராதிகாவுடன் பழகும் பாக்யாவுக்கு தெரிந்தாலும் அவர் அழுது புலம்பம் நிலையில் தான் இருப்பரே தவிர கோபியிடம் எதிர்த்து கேள்வி கேட்பாரா என்பது நிச்சயம் இல்லாத ஒன்று. ஏனென்றால் பாகயாவின் கேரக்டர் எப்படிப்பட்டது என்பது குறித்து வெளியான எபிசோடுகளே இதற்கு சாட்சி.

ஆனால் பாக்யாவின் கணவர்தான் கோபி என்று தெரியந்தால் ராதிகாவின் ரியாக்ஷன் என்ன என்பதை பார்க்கவே ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். ஏற்கனவே எழிலுக்கு அப்பாவின் நடவடிக்கைள் தெரிந்துவிட்டது. ஆனால் அது ராதிகாதான் என்பது தெரியாது. தற்போது எழில் அதுபற்றி சிந்திப்பதாக கூட தெரியவில்லை. அவர் தனது காதலுக்காக அமிர்தா பின் சுற்றிக்கொண்டிருக்கிறார்.

இதில் கோபி ராதிகாவுடன்தான் பழகி வருகிறார் என்பது தெரிந்துகொண்ட கோபியின் அப்பா அதை ராதிகாவிடமோ, இல்லது பாக்யாவிடமோ சொல்லவில்லை. ஏன் கோபி தப்பு செய்ய மாட்டான் என்று அடித்துசொல்லும் ஈஸ்வரியிடமும் சொல்லவில்லை. இப்போது ராதிகாவி்ன் ஆபிஸ் நிகழ்ச்சிக்கு ரஞ்சித் வருதாக கோபி கூறியுள்ளார். அதே சமயம் பாக்யா பிஸினஸ் திறப்பதற்கும் ரஞ்சித்த அவரது மனைவியுடன் வருவார் என்று எழில் கூறியுள்ளார்.

கோபி சொன்னபடி ராதிகா ஆபீஸ் நிகழ்ச்சிக்கு ரஞ்சித் சென்றுவிட்டால் பாக்யா அப்செட் ஆகிவிடுவார் இதனால் கோபியின் அப்பா என்ன செய்வாரே என்றும், மாறாக பாக்ய நிகழ்ச்சிக்கு ரஞ்சித் வந்துவிட்டால், ராதிகா ஏமாற்றம் அடைந்துவிடுவார் இதனால் கோபிக்கு அங்கு என்ன நடக்குமோ என்றும் ரசிகர்களாக நாம் யோசித்துக்கொண்டிருக்க வேண்டியதுதான். இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர்கள் பலரும் பாக்யாவுக்கு ஆதரவாகேவே கருத்தக்களை கூறியுள்ளனர்.     

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil serial vijay tv baakiyalakshmi serial rating update with promo

Best of Express