விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், லட்ச கணக்கில் செலவு செய்து பொருட்காட்சிக்காக சமையல் ஆர்டரை வாங்கியுள்ள பாக்யாவுக்கு பொருட்காட்சி கை கொடுக்குமா அல்லது கைவிட்டுவிடுமா என்பது குறித்து பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில் இன்றைய எபிசோட்டில் நடந்தது என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
இன்றைய எபிசோட்டின் தொடங்கத்தில் ஆபீஸ் முடிந்து வீட்டுக்கு வரும் கோபி, வாசலில் என்ன ஒரே வாடையாக இருக்கிறது என்று பார்க்கிறார். அப்போது மழை காரணமாக பொருட்காட்சிக்கு வாங்கிய பொருட்கள் மற்றும் காய்கறிகள் நனைந்து வீணாகிவிட்டது. இதன் பொருட்கள் அங்கே இருப்பதால், வாடை வருகிறது. இதனால் அதிர்ச்சியான கோபி ஈஸ்வரியை கூப்பிட்டு சொல்கிறார்.
அப்போது ராமமூர்த்தியும் ஈஸ்வரியும் வந்து பார்க்கும்போது, பாக்யாவும் அங்கே வந்துவிடுகிறார். அப்போது ராமமூர்த்தி என்ன என்று செக் செய்து பார்க்கும்போது, மழையில் நனைந்து காய்கறிகள் அழுகிப்போயுள்ளது. இதை பார்த்த பாக்யா அதிர்ச்சியாகிறார். இதை பார்த்த ஈஸ்வரி அய்யோ எல்லாம் வீணாய்போச்சே, ஏற்கனவே ஒன்னறை லட்சம், போச்சு இப்போ இதுவுமா என்று சொல்லி பாக்யாவை திட்டுகிறார். இதனால் பாக்யாவுக்கு பெரும் பிரச்சனை ஏற்படுகிறது.
அதேசமயம் அமிர்தா விஷயத்தில் கணேஷ் சொன்னதை நினைத்துக்கொண்டு பாக்யா சமைக்காமல் இருக்கிறார். அப்போது அங்கே வரும் கோபி, காய்கறி எல்லாம் வீணாய் போச்சு இல்ல, இப்போ நீ சமைக்கிறதும் வீணாய் போக போகுது என்ன பண்ண போற என்று கேட்கிறான். அதனை தொடர்ந்து ராதிகாவிடம் சென்று நாம வெளியில போய் சாப்பிடலாம் என்று கூப்பிட உங்க அம்மா கூடவா நான் வரல என்று சொல்கிறார் ராதிகா.
அதன்பிறகு ராதிகாவை சமாதானப்படுத்தி அழைத்துக்கொண்டு ஈஸ்வரியையும் கூட்டிக்கொண்டு போகிறான். அப்போது ராமமூர்த்தி நீ சமைச்சது எல்லாம் வீணாய் போகட்டும் என்று இப்படி செய்கிறான் என்று பாக்யாவிடம் சொல்கிறார். அதுலதான் அவர் தப்பு கணக்கு போட்டுருக்காறா மாமா நான் சமைக்கவே இல்லை என்று பாக்யா சொல்ல, ராமமூர்த்தி ஹேப்பியாகிறார், அதன்பிறகு எழில் எல்லோருக்கும் சாப்பாடு வாங்க போக அத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“