Advertisment

Vijay TV Serial : ஹேமாவுக்காக நன்றி சொல்லும் பாரதி : மறைமுகமாக பேசும் கண்ணம்மா

Bharathi Kannamma Episode : பாரதி கண்ணம்மா சீரியலில் இன்றை எபிசோட்டில் என்ன நடந்தது என்பதை இந்த பதிவில் காணலாம்

author-image
WebDesk
New Update
Vijay TV Serial : ஹேமாவுக்காக நன்றி சொல்லும் பாரதி : மறைமுகமாக பேசும் கண்ணம்மா

Tamil Serial Bharathi Kannamma Episode : அமெரிக்கா செல்லும் முன்பு பாரதி ஹேமா இருவரும் கண்ணம்மாவை சந்திக்க வருகிறார்கள். அப்போது கேசரி கொடுக்கும் கண்ணம்மாவிடம் சுவையான இருப்பதாக ஹேமா கூறுகிறாள். அதன்பிறகு ஹேமா வெளியில் சென்றவுன், அவளை காப்பாற்றியதற்காக கண்ணம்மாவுக்கு நன்றி கூறும் பாரதி, தான் தெரியாமல் அவரை பற்றி போலீசில் தவறாக புகார் அளித்துவிட்டதாக கூறி மன்னிப்பு கேட்கிறார்.

Advertisment

அதற்கு கண்ணம்மா இப்போதாவது நான் நல்லவள் என புரிந்துகொண்டதற்கு நன்றி என கூறுகிறார், அனைத்திற்கும் காரணம் கோபம் தான். இப்படி அளவுக்கு மீறி கோபப்படுவதால் செய்யும் விஷயங்கள் வாழ்க்கை முழுவதும் பலருக்கு கஷ்டத்தை கொடுக்கிறது என கூறும் கண்ணம்மா பாரதி குறித்து மறைமுகமாக பேசுகிறார்.

அப்போது உள்ளே வரும் ஹேமா தான் அப்பாவுடன் அமெரிக்கா செல்ல போவதாக அவர் கூறுகிறார். கண்ணம்மா அப்பா போல நீயும் ஒரு பெரிய டாக்டராக வர வேண்டும் என சொல்கிறார். அதன் பின் கண்ணம்மாவுடன் செல்பி எடுக்கவேண்டும் என ஹேமா கேட்க முதலில் தயக்கம் காட்டும் பாரதி அதன் பின் போனை எடுத்து கண்ணம்மா உடன் செல்பி எடுக்கிறார்.

அதன்பிறகு ஹேமா பாரதி இருவரும் கிளம்பும்போது, வாயிற்படியில் கால் தடுக்கி விழ பார்க்கிறார். கண்ணம்மா அவரை வந்து அமர்ந்துவிட்டு போகும்படி சொல்கிறார். ஆனால் பாரதி நம்பிக்கை இல்லை என்று கூறினாலும், கண்ணம்மா அவனை உள்ளே வந்து அமர வைக்கிறார். அதன் பின் ஹேமா மற்றும் பாரதி இருவரும் கிளம்புகின்றனர்.

இதற்கிடையேவெண்பா துர்காவை அடைத்துவைத்து தண்ணீர், சாப்பாடு இல்லாமல் தள்ளாடுகிறார். அவரை டார்ச்சர் செய்யும் வெண்பாவிடம், இனி உன் வழியில் வரவே மாட்டேன், என்னை விட்டுவிடு என துர்கா கெஞ்சுகிறார். ஆனால் தப்பினால் போதும் என இப்படி பேசுகிறாயா என சொல்லி அவரது வாயில் பிளாஸ்டர் போட்டு ஒட்டிவிட்டு போகிறாள் வெண்பா. அத்துடன் முடிகிறது இன்றைய எபிசோடு

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bharathi Kannamma Serial Tamil Serial Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment