இல்லத்தரசிகள் மத்தியில் வரவேற்பை பெற்று வரும் டிவி சீரியல்கள் தற்போது எல்லை மீறும் படுக்கை அறை காட்சிகள், லிப்லாக் காட்சிகள் என முகம் சுழிக்க வைக்கும் பல காட்கள் இடம் பெறுவதால் நெட்டிசன்கள் மத்தியில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருவது சீரியல். குறிப்பாக இல்லத்தரசிகள் பலரும் இந்த சீரியலை விரும்பி பார்க்கதால் காலையில் தொடங்கி இரவு 10 மணி வரை தொலைக்காட்சிகளில் சீரியல் மயமாக உள்ளது. அதுவும் சன்டிவியில் காலை 9.30 மணிக்கு தொடங்கும் சீரியல்கள் இரவு 11 மணிவரை பல வீடுகளை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.
ஆரம்பத்தில் குடும்பத்திற்குள் நடக்கும் போட்டி, பொறாமை உள்ளிட்ட பல நிகழ்வுகளை திரைக்கதை அமைக்கப்பட்டு வந்த சீரியல் தற்போது தனது ரூட்டை மாற்றியுள்ளது. இப்போதும் குடும்பத்திற்குள் நடக்கும் கதைதான் என்றாலும் கூட தற்போதைய திரைக்கதைகளில் படுக்கை அறை காட்சிகள், லிப்லாக் முத்தங்கள் என சீரியல் ரொமான்ஸ் ரூட்டை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது.
தொடக்கத்தில் சீரியலுக்காக பெயர் பெற்ற சன்.டிவி தற்போதுவரை தனது பழைய பாணியிலான திரைக்கதையையே கடைபிடித்து வரும் நிலையில், சன்.டிவிக்கு போட்டியாக வந்த பல டிவி சேனல்கள் டப்பிங் சீரியல், மற்றும் ரீமேக் சீரியல்களை ஒளிபரப்பி வருகின்றனர். ஆரம்பத்தில் டி.ஆர்.பி-க்காக டப்பிங் சீரியல்களை ஒளிபரப்பி வந்த பல சேனல்கள் தற்போது வேற்று மொழி சீரியலை தமிழில் ரீமேக் செய்வதில் ஆர்வம் காட்டி வருகிறது.
அந்த வகையில் விஜய் டிவியில் சீரியல்களில் பெயர்கள் தான் காப்பி என்றாலும் பல சீரியலிகளின் கதையும் வேறு மொழி சீரியலின் ரீமேக்காக உள்ளது. மேலும் விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்றாக ஈரமான ரோஜாவே 2 சீரியலில், தற்போது ரொமான்ஸ் காட்சிகள் எல்லை மீறி சென்றுகொண்டிருக்கின்றன. வெள்ளித் திரைக்கு நிகராக ரொமான்ஸில் உள்ள இந்த காட்சிகள் இல்லத்தரசிகள் மத்தியில் முக சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனது அம்மா தேவியின் அனுமதி இல்லாமல் ஜே.கே.வை திருமணம் செய்துகொள்ளும் ரம்யாவுக்கு முதலிரவு காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் உட்பட குடும்பத்துடன் அமர்ந்து பார்க்கும் இந்த சீரியலில், இப்படியா முகம் சுழிக்க வைக்கும் காட்சிகளை வைப்பது என்று நெட்டிசன்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“