Pandian Stores Serial Episode Today Update : குடும்பத்துடன் குட்டி யானை பயணத்தை முடித்துக்கொண்டு வீடு திரும்ப்பும்போது, தனத்திற்கு வளைகாப்பு வைக்க பேசுவதற்காக ஜெகா, அவன் அம்மா, கஸ்தூரி மூவரும் வருகின்றனர். அதற்கு மூர்த்தியின் அம்மா ஒன்பதாவது மாதம் வளைகாப்பு வைச்சுக்கலாம் என சொல்ல முதல் வாரத்துலயே கூட்டிட்டு போறோம் என கூறுகின்றனர். அதன்பிறகு வளைகாப்பிற்கு தேதி பார்த்து குறிக்கின்றனர்.
இதனைத் தொடாந்து தனத்தை நம்ம வீட்டுக்கு அனுப்ப மூர்த்தி அண்ணனுக்கும், இவ மாமியாருக்கும் விருப்பமே இல்லை போல என கஸ்தூரி கேட்க, அதற்கு முல்லை, அவுங்க மட்டுமா எங்களுக்கும் தான். நாங்க எல்லாரும் எப்படி அக்காவை விட்டுட்டு இருப்போம் என சொல்கிறாள். அப்போது தனம் அம்மா, இவளை கல்யாணம் பண்ணி இங்க அனுப்பி 15 வருஷம் ஆச்சு. தத்து கொடுத்த மாதிரி ஆகிருச்சு. ஒரு நல்லது கெட்டதுக்கு இவ எங்க வீட்டுக்கு வந்ததே இல்லை என சொல்கிறாள்.
தொடர்ந்து இவளை வீட்ல வைச்சு ஆறு மாதம் கழிச்சு தான் அனுப்புவேன் என சொல்கிறாள். இதனையடுத்து ஜெகா வீட்டுக்கு கிளம்பும்போது, கஸ்தூரி நான் பார்வதி சித்தியை பார்த்துட்டு வருவதாக சொல்லிவிட்டு செல்கிறாள். இதற்கிடையில் கண்ணனும், ஐஸ்வர்யாவும் சந்தித்து பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது, ஐஸ்வர்யா நம்ம விஷயம் பற்றி வீட்ல பேசிட்டியா இல்லையா? என கேட்கிறாள்.
நானும் அதைப்பற்றி யோசிச்சேன் என கண்ணன்சொல்ல இருவரும் நெருங்கி கொண்டிருக்கும்பொது, அந்த பக்கமாக வரும் கஸ்தூரி பார்த்து விடுகிறாள். அடேய் நாசமா போறவனே என்று கண்ணனையும், அங்க ஒருத்தனுக்கு நிச்சயம் பண்ணிட்டு, இங்க இவன் கூட நின்னு கூத்தடிச்சுட்டு இருக்க என ஐஸ்வர்யாவை திட்டுகிறாள். ஆனால் அவள் வருவதற்குள் இருவரும் கிளம்பி விடுகின்றனர்.
அப்போது கண்ணனிடம் நீ வீட்டுக்கு போ நான் வர்றேன் என சொல்கிறாள். அதற்குள் ஐஸ்வர்யா வீட்டிற்கு வந்துவிட, கஸ்தூரி வந்து ஜெகாவிடம் அந்த வீணா போனவன் கண்ணன் கூட நின்னு இவ பேசிட்டு இருக்காங்க என சொல்கிறாள். அப்போது அவன் ரெண்டு பேரும் ஒன்னா காலேஜ் படிக்குறாங்க. சொந்தகாரங்க வேற. அதுனால பேசிட்டு இருப்பாங்க. இதுல என்ன இருக்கு என சொல்ல, அப்படி பேசுறதா இருந்தா வீட்ல வைச்சு பேச வேண்டியது தான, தனியா சிரிச்சு சிரிச்சு பேச என்ன இருக்கு என கேட்கிறாள் கஸ்தூரி.
அதை கேட்டு ஜெகா அம்மாவும் உனக்கு நல்ல வரன் அமைஞ்சு இருக்கு. இந்த கண்ணன் பயலுக்கு எங்க எப்படி நடந்துக்கணும்னு இங்கிதமே இருக்காது. நீதான்மா ஒழுங்கா நடந்துக்கணும் என சொல்கிறாள். அவர்கள் போன பிறகு கஸ்தூரி ஐஸ்வர்யாவிடம், இனிமேல் உன்னை அவனோட பேசுறதை பார்த்தேன். என்ன பண்ணுவேன் தெரியாது என கத்தும்போது இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil