scorecardresearch

டி.ஆர்.பி.யில் சறுக்கல்… முக்கிய சீரியலை நிறுத்தும் விஜய் டிவி

தமிழில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற ஹிட் திரைப்படங்களை பெயரைகளை சீரியலுக்கு பயன்படுத்துவதில் விஜய் டிவி முன்னணியில் உள்ளது.

டி.ஆர்.பி.யில் சறுக்கல்… முக்கிய சீரியலை நிறுத்தும் விஜய் டிவி

டிஆர்பி சரியாக இல்லாததால் விஜய் டிவி சில முன்னணி சீரியல்களை நிறுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழில் சீரியல்கள் ஒளிபரப்புவதில் முக்கிய இடம் விஜய் டிவிக்கு உண்டு. இதில் பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், ஏற்கனவே முடிந்த சீரியல்கள் கூட இன்னும் ரசிகர்கள் மனதில் நீங்க இடம் பிடித்துள்ளது என்று சொல்லலாம். இதற்கு முக்கிய காரணமும் உள்ளது.

என்னதான் கதை திரைக்கதை என அனைத்தும் நல்ல விதமாக இருந்தாலும் சீரியலை ரசிகர்களிடம் கொண்டு செல்வதில் அதன் டைட்டிலுக்கு முக்கிய பங்கு உண்டு. அந்த வகையில், ஏற்கனவே தமிழில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற ஹிட் திரைப்படங்களை பெயரைகளை சீரியலுக்கு பயன்படுத்துவதில் விஜய் டிவி முன்னணியில் உள்ளது.

ராஜா ராணி, சின்னத்தம்பி, மௌனராகம், கடைக்குட்டி சிங்கம், பாரதி கண்ணம்மா, நாம் இருவர் நமக்கு இருவர் என படத்தின் தலைப்பில் வெளியான அத்தனை சீரியல்களும விஜய் டிவி டிஆர்பியில் தனி இடத்தை பெற்றுள்ளன. மேலும் ஏற்கனவே வெளியாகி வெற்றி பெற்ற சீரியல்களின் சீசன் 2 ஒளிபரப்பு செய்திலும் விஜய் டிவிக்கு முதலிடம் உள்ளது.

இந்த வரிசையில் சரவணன் மீனாட்சி சீரியல் 4 சீசன்கள் சென்ற நிலையில், நாம் இருவருவர் நமக்கு இருவர் சீரியல் 2 சீசன்கள் ஒளிபரப்பானது. இந்த இரண்டு சீரியல்களும் முடிவுக்கு வந்துவிட்ட நிலையில், தற்போது மௌனராகம் 2, ஈரமான ரோஜாவே 2 ராஜா ராணி 2 என சில சீரியல்கள் அடுத்த சீசனகள் ஒளிபரப்பாகி வருகின்றன.

இதனிடையே சமீப காலமாக விஜய் டிவி சீரியல்கள் டிஆர்பி ரேட்டிங்கில் பலத்த சறுக்களை சந்தித்து வருகிறது. இதை சரி செய்ய பல முயற்சிகளை மேற்கொண்டாலும் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில், சரியான டிஆர்பி இல்லாத சீரியல்களை விஜய் டிவி நிறுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பட்டியலில் நம்ம வீட்டு பொண்ணு, மௌனராகம் 2, காற்றுக்கென்ன வேலி தொடர்கள் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சீரியல் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil serial vijay tv planed stop telecast on low trb serials

Best of Express