விஜய் டிவி நடிகைகளின் சம்பள லிஸ்ட்: டாப் யாருன்னு பாருங்க?

Tamil Serial Update : விஜய் டிவியில் பல்வேறு சீரியல்களில் நடித்து வரும் நடிகைகளின் சம்பளம் குறித்து விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

Tamil Tv Serial Actress Salary Update : தற்போது வெள்ளித்திரை நடிகைகளை விட சின்னத்திரை சீரியல் நடிகைகளுக்கே அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. கடந்த காலங்களில் வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைக்காத நாயகிகளே சின்னத்திரையில் நடித்து வந்த நிலையில், தற்போது சின்னத்திரையில் அறிமுகமாகி வெள்ளித்திரையில் தடம்பதித்து வருகின்றனர்.

ஆனால் சம்பளம் கணக்கிட்டு பார்த்தால் வெள்ளித்திரையில் நடிகைகள் ஒரு படத்திற்கு கோடி கணக்கில் சம்பளத்தை பெற்று வருகின்றனர். தற்போது இவர்களுக்கு சவால் விடும் வகையில் சின்னத்திரை நடிகைகளும் அதிக சம்பளம் பெற்று வருகின்றனர். ஆனால் சினிமாவில் நடிகைகள் வாங்கும் மொத்த சம்பளத்தை சீரியல் நடிகைகள் நாள் கணக்கில் பெற்று வருகிறார்கள்.

பொதுவாக சீரியல் ஷூட்டிங் மாதத்திற்கு 15 நாட்கள் நடைபெறுகிறது. அதற்கு ஏற்றார்போல் நடிகைகளுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது. இதில் மற்ற தொலைக்காட்சிகளை விட விஜய்டிவி நடிகைகளுக்கு அதிக சம்பளம் வழங்கப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் விஜய் டிவி சீரியலுக்கு ரசிகர்கள் கொடுக்கும் வரவேற்புதான்.

விஜய் டிவியில் ஒரு சீரியலில் நடித்தால் போதும் அடுத்து வெள்ளித்திரையில் வாய்ப்பு பெற்று விடலாம் என்று கூறுவார்கள். இந்த கருத்தை பல நடிகைகள் நிரூபித்தும் காட்டியுள்ளனர். இதனால் விஜய் டிவி நடிகர் நடிகைகளும் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலம். இதனால் அவர்களுக்கு அதிக சம்பளம் வழங்கப்படுகிறது.

அந்த வகையில், விஜய் டிவி சீரியல் நடிகைகளின் ஒரு நாள் அல்லது ஒரு எபிசோட்டின் சம்பள பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்கும் சுஜிதா-ரூ 12,000, ஹேமா-ரூ 6500, காவியா-ரூ 4,500, சாய் காயத்ரி-ரூ 5000 சம்பளமாக பெறுகின்றனர். ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ ரக்ஷிதா-ரூ 10000, காயத்ரி-ரூ 5,500, ஜனனி-ரூ 4000 சம்பளமாக பெறுகின்றனர்.

‘தென்றல் வந்து என்னை தொடும்’ பவித்ரா-ரூ 8000 சம்பளமும், ‘பாவம் கணேசன்’ நேஹா கௌடா- ரூ 6000, ‘வேலைக்காரன்’ கோமதி பிரியா-ரூ 4000, ‘ராஜபார்வை’ராஷ்மி ஜெயராஜ்-ரூ 6000 சம்பளமும் வாங்குகின்றனர்.

‘மௌன ராகம்’ ரவீனா- ரூ 6,000, ‘ராஜா ராணி 2’ஆலியா மானசா-ரூ 13,000, ‘ராஜா ராணி 2’ அர்ச்சனா- ரூ 4,500, பாரதிகண்ணம்மா சீரியலில் நடிக்கும் ரோஷினி -ரூ 15,000, பரினா-ரூ 10,000, ஸ்ரூ 10,000, 80 ரூ 3500 சம்பளமாக பெறுகின்றனர்.

பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்கும் சுசித்ரா-ரூபாய் 9000, ரித்திகா-ரூபாய் 4,500, திவ்யா- ரூபாய் 4,500, நேஹா- ரூபாய் 3000 சம்பளமாக பெறுகின்றன. இதில் அனைத்து நடிகைகளையும் விட பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து வரும் ரோஷினி ஹரிப்பரியன் நாள் ஒன்றுக்கு ரூ 15000 சம்பளமாக பெறுகிறார். ஆனால் தற்போது அவர் அந்த சீரியலில் இருந்து விலகியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil serial vijay tv serial actress salary update in tamil

Next Story
நிஜ செங்கேணி என்ன செய்கிறார்? வெளிச்சம் பாய்ச்சிய யூ டியூபர்கள்; பேருதவி அறிவித்த லாரன்ஸ்!Jai Bhim movie, surya, jyothika, real Rajakannu wife Sengeni, real Rajakannu wife Sengeni parvathi, rajakannu wife parvathi current conditions, Raghava Lawrence extends help, chandru, ஜெய் பீம், நிஜ செங்கேணி என்ன செய்கிறார், வெளிச்சம் பாய்ச்சிய யூ டியூபர்கள், பேருதவி அறிவித்த ராகவா லாரன்ஸ், tamil cinema, actor surya, valaipechu, bismi, youtubers
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express