கொரோனா தொற்று காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவினால், திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், வாரத்தில் 6 நாட்கள் ஒளிப்பரப்பாகி வந்த சிரியல்கள் இனி 4 நாட்கள் மட்டுமே ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் திரைப்படங்களுக்கு இருந்து எதிர்பார்ப்பை விட தற்போது சீரியலுக்கு உண்ணடான எதிர்பார்ப்பு பன்மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் வார நாட்களில் மட்டும் ஒளிபரப்பாகி வந்த சீரியல்கள் ஒரு சில தொலைக்கட்சிகளில் வாரத்தில் இறுதி நாளான சனி கிழமைகளிலும் ஒளிபரப்பாகி வந்தது. அதிலும் ஸ்பெஷல் எபிசோடு என்று ஞாயிற்றுகிழமைகளிலும் சின்னத்திரை ரசிகர்களை குஷிபடுத்த சீரியல்கள் ஒளிபரப்பாகி வந்தது.
ஆனால் தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் சூழ்நிலையில், கடந்த மே 10-ந் தேதி முதல் வரும் 24-ந் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புக்கு மே இறுதிவரை தடை விதிக்கப்பட்டுள்ளதால், சீரியல்களின் ஷூட்டிங் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் நீடித்தால் முக்கிய சீரியல்கள் அனைத்தையும் நிறுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையை சரி செய்யும் வகையில், விஜய் டிவி முக்கிய யோசனையை கையில் எடுத்துள்ளது. அதன்படி வாரத்தில் 6 நாட்கள் ஒளிபரப்பாகி வந்த சீரியல்கள் இனி வாரத்திற்கு 4 நாட்கள் மட்டுமே ஒளிபரப்பாகும் தற்போது வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே ஒளிபரப்பாகும் என அறிவித்து உள்ளது. அதன்படி திங்கள் முதல் வியாழன் வரை தான் சீரியலும், வெள்ளிக்கிழைமை திரைப்படமும் ஒளிபரப்பாகும்.
இதில் வெள்ளிக்கிழமையான இன்று இரவு 7 மணிக்கு சங்கத்தலைவன் திரைப்படத்தை ஒளிபரப்பாகிறது. அதனால் ப்ரைம் டைம் சீரியல்கள் நிறுத்தப்படுகிறது. மேலும் சனி மற்றும் ஞாயிறுகளில் குக் வித் கோமாளி உள்ளிட்ட பழைய நிகழ்ச்சிகளை மீண்டும் ஒளிபரப்ப உள்ளது.
விஜய் டிவி இந்த யுக்தியை கையில் எடுத்துள்ள நிலையில், மற்ற தொலைக்காடசி நிறுவனங்கள், தற்போது அனைத்து சீரியல்களுக்கு முன்பும் அந்த சீரியலில் டைட்டில் பாடலை ஒளிப்பரப்புகிறது. இதில் சில நிமிடங்கள் சென்றபின், கட்சிகள் அனைத்தையும் எவ்வளவு இழுக்க முடியுமே அவ்வளவு நீளம் கட்சிகளை நீட்டி வருகின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil