/tamil-ie/media/media_files/uploads/2021/06/Baakiya.jpg)
ரசிகர்களுக்கு பிடித்தமான ஹிட் சீரியல்களை ஒளிபரப்பும் தொலைக்காட்சிகளில் ஒன்று விஜய் டிவி. இந்த சேனலில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றனர். மேலும் சில சீரியல்கள் பாகம் 1-க்கு பெரும் வரவேற்பு கிடைத்ததால், 2-ம் பாகமும் ஒளிபரப்பாகி அதுவும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. தடையின்றி ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியலுக்கு கொரோனா ஊரடங்கு தடை போட்டது.
தமிழகத்தில் கொரோனா தொற்றுபாதிப்பு தீவிரமடைந்து வந்ததால், சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிப்டிப்புக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதனால் விஜய்டிவியின் பல சீரியல்க்கள் இடைக்காலமாக நிறுத்தப்பட்ட நிலையில், பாக்கியலட்சுமி, பாரதி கண்ணம்மா, ராஜாராணி 2 ஆகிய சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. இதில் பாரதி கண்ணம்மா மற்றும் ராஜா ராணி 2 ஆகிய சீரியல்கள் ஒன்றாக இணைக்கப்பட்டு மெகா சங்கமம் என்கிற பெயரில் ஒளிபரப்பாகி வருகிறது.
இதில் இந்த மகாசங்கமா எபிசோடு ஒரு ரிசார்ட்டுக்குள் வைத்து படப்பிடிப்பு நடத்தி வந்தனர். ஆனால் இதில் சுவாரஸ்யம் இல்லாத்தால் ரசிகர்களுக்கு சளிப்பை ஏற்படுத்திய நிலையில், டிஆர்பி ரேட்டிங்கிலும், விஜய் டிவி சீரியல்களுக்கு இடம் கிடைக்கவில்லை. இதனால் புதிய எபிசோடுகள் எப்போது ஒளிபரப்பாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் நிலையில், விஜய் டிவியில் நிறுத்தப்பட்ட சீரியல்கள் மீண்டும் ஷூட்டிங் நடத்தப்பட்டு அடுத்த வாரம் திங்கட்கிழமை முதல் புது எபிசோடுகள் ஒளிபரப்பாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் டிவியின் ராஜபார்வை சீரியலில் ஹீரோவாக நடித்து வரும் நடிகர் முன்னா தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள வீடியோவில் இந்த தகவலை பகிர்ந்துள்ளார். ராஜபார்வை மட்டுமின்றி மற்ற சீரியல்களின் புது எபிசோடுகளும் வரும் திங்கள் முதல் ஒளிபரப்பாக உள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)

Follow Us