எண்ட்ரி ஆகும் ”தமிழும் சரஸ்வதியும்” : விஜய்டிவியின் முக்கிய சீரியல்கள் நேர மாற்றம்

Vijay TV Serial : விஜய் டிவியில் புதிய சீரியல் ஒளிபரப்பாக உள்ளதால் இரண்டு புதிய சீரியல்கள் ஒளிபரப்பு நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Vijay TV Two Serials Time Change Update : ஹிட் சீரியல்களை ஒளிபரப்பும் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியில் இரண்டு சீரியல்கள் ஒளிபரப்பும் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீரியல் ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில், விஜய் டிவி மாதந்தோறும் புதிய சீரியலை களமிறங்கி வருகிறது. அந்த வகையில் இந்த மாத புதுவரவாக தமிழிழும் சரஸ்வதியும் என்ற சீரியல் வரும் திங்கள் கிழமை (ஜூலை 12) முதல் ஒளிபரப்பாக உள்ளது. தீபக் தினகர் மற்றும் நட்சத்திரா ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் இந்த சீரியல் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு முக்கிய காரணம் இந்த சீரியலின் ப்ரமோ என்று சொல்லாம். கடந்த சில நாட்களாக இந்த சீரியலுக்கான ப்ரமே வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இதில் முதன்மை கதாப்பத்திரங்காள தமிழ் மற்றும் சரஸ்வதி இருவருமே படிக்காதவர்கள். இதில் 8-வது முறையாக 12வது தேர்வு எழுதும் நாயகி சரஸ்வதி வேண்டுதலுக்கான கோவிலக்கு வரும்போது அங்கு நாயகனை சந்திக்கிறார். அப்போது நாயக் சரஸ்வதி கடவுளிடம், தனக்கு ஒரு படித்த பெண் வேண்டும் என கேட்கிறார்.

இதை கவனிக்கும் நாயகி, கடவுள் சரஸ்வதி பேசுவது பொல் அவரை ஏற்மாற்றுகிறார். இந்த ப்ரமோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. தற்போது இந்த சீரியலை சீரியலை ப்ரைம் டைமில் ஒளிபரப்ப விஜய் டிவி முடிவெடுத்துள்ளதாகவும், இதனால் இரவு வார நாட்களில் இரவு 7.30 மணிக்கு இந்த ஒளிபரப்பாக இருக்கிறது. இதனால் ஏற்கனவே 7.30மணிக்கு ஒளிபரப்பாகி வந்த செந்தூரப்பூவே சீரியல் இனி மாலை 6.30 மணிக்கும், காற்றுக்கென்ன வேலி சீரியல் இனி 6 மணிக்கு ஒளிபரப்பாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil serial vijay tv two serials time changed update

Next Story
பாகுபலி-2-வின் அடுத்த சாதனை… உலகளவில் 9,000 திரையரங்குகளில் ரிலீஸ்!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com