வீழ்ச்சியின் பாதையில் பாக்யலட்சுமி... டாப் 5 இடத்தை மிஸ் செய்த விஜய் டிவி

Tamil Serial Update : பாக்யலட்சுமி மட்டுமல்லாமல், டிஆர்பி ரேட்டிங்கின் டாப் 5 லிஸ்டில் விஜய் டிவி சீரியல்களுக்கு இடமில்லை.

Tamil Serial Update : பாக்யலட்சுமி மட்டுமல்லாமல், டிஆர்பி ரேட்டிங்கின் டாப் 5 லிஸ்டில் விஜய் டிவி சீரியல்களுக்கு இடமில்லை.

author-image
WebDesk
New Update
வீழ்ச்சியின் பாதையில் பாக்யலட்சுமி... டாப் 5 இடத்தை மிஸ் செய்த விஜய் டிவி

Tamil Serial Baakiyalakshmi Down TRB Rating : தமிழில் சீரியலுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விஜய் டிவியில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் சீரியல் பாக்யலட்சுமி. முற்றிலும் புதுமுகங்களை வைத்து தொடங்கப்பட்ட இந்த சீரியல் தொடக்கத்தில் வரவேற்பை பெறவில்லை என்றாலும் போக போக நல்ல வரவேற்பை பெற்றது.  

Advertisment

தற்போது விஜய் டிவியின் ஐகான் சீரியல்களில் ஒன்றாக மாறிவிட்ட பாக்யலட்சுமி சீரியல் சமீபத்தில் நடைபெற்ற விஜய் அவார்ட்ஸ் விருது விழாவில், பல விருதுகளை வாரி குவித்தது. இதனால் சீரியல் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்த நிலையில், டிஆர்பி ரேட்டிங்கிலும் முன்னணி இடத்தை பெற்றது.

ஆனால் கடந்த சில மாதங்களாக பாக்யலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற தவறிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். குடும்பத்திற்கு தெரியாமல் முன்னாள் காதலியை திருமணம் செய்துகொள்ளும் முயற்சியில் இறங்கியுள்ள கோபி வீட்டில் மாட்டிக்கொள்ள மாட்டார் என்று ரசிகர்கள் யூசித்து வருகின்றனர்.

அவர் மாட்டிக்கொள்ள இன்னும் பல எபிசோடுகள் கடக்க வேண்டும் என்று ரசிகர்களுக்கு நன்கு தெரிந்திருந்தாலும் அவர் மாட்டிக்கொள்வது போன்ற ப்ரமோவை போட்டி ரசிகர்களை ஏமாற்றுவதே இந்த சீரியலின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம். அதுமட்டுமல்லாமல் ரகசியம் என்று இருந்தால் எதிர்பார்க்கும்போது அதை உடைத்துவிடுவது நல்லது.

Advertisment
Advertisements

எதிர்பார்ப்பு குறைந்த பிறகு அதை தெரியப்படுத்தி எந்த பயனும் இல்லை. அப்படித்தான் சட்டுபுட்டுனு பாக்யா குடும்பத்திற்கு உண்மையை தெரியபடுத்தி சீரியலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் இயக்குநர் சீரியலை ஜவ்வாக இழுத்துக் கொண்டிருக்கிறார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு டிஆர்பி ரேட்டிங்கில் முன்னணியில் இருந்த பாக்யலட்சுமி, தமிழத்தில் ஒளிபரப்பாகும் டாப் சீரியல்களில் முன்னணியில் இருந்ததது. ஆனால் இப்போது சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் கடும் சரிவை சந்தித்துள்ளது. பாக்யலட்சுமி மட்டுமல்லாமல், டிஆர்பி ரேட்டிங்கின் டாப் 5 லிஸ்டில் விஜய் டிவி சீரியல்களுக்கு இடமில்லை. இதில் பாக்யலட்சுமி சீரியல் 8.9 புள்ளிகள் பெற்று கடைசி இடத்திற்கு சென்றுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Baakiyalakshmi Serial Vijay Tv Serial 2

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: