Pandian Stores Serial Today Episode Update : தனம் போன் செய்தவுடன் கதிர் ஜீவாவுடன் வீட்டிற்கு வரும் மூர்த்தி என்னாச்சி எதுக்கு போன் பண்ண என்ன பிரச்சன என்று கேட்கிறான். அதற்கு தனம் முல்லையிடம் எங்களிடம் சொன்னதை மாமாவிடம் சொல் என்று சொல்கிறாள். அப்போது மீனா, நம்ம வீட்ல 15 ஆயிரம் பணம் காணாம போனதுல்ல அதை கண்ணன் தான் எடுத்தான் என்று சொல்கிறாள். இதை கேட்டு மூர்த்தி ஜீவா இருவரும் ஷாக் ஆகின்றனர்.
தொடர்ந்து ஜீவா ஏன்டா பணத்த நீயா எடுத்த என்று கேட்க, 15 ஆயிரத்திற்கு உனக்கு என்னடா செலவு என்று கேட்கிறான் மூர்த்தி. அதன்பிறகு இந்த பணத்தை வச்சது கதிர்தான். ராத்திரி போஸ்டர் ஒட்டி அந்த கடனை அடைச்சிருக்கான் என்று தனம் சொல்கிறாள். இதை கேட்ட மூர்த்தி உன்னால எத்தனை பேருக்கு கஷ்டம் பாரு என்று கண்ணனை அடிக்க, அண்ணா அடிக்காதிங்க அண்ணா என கதிர் சொல்கிறான். ஆனால் மூர்த்தி நீயும் சேர்ந்துதான இந்த விஷயத்தை மறைச்சிட்ட என் சொல்கிறான்.
அதற்கு முல்லை நீங்கெல்லாம் இப்படி கஷ்டப்படுவீங்கனுதா அவர் சொல்லல என்று சொல்கிறாள். அதன்பிறகு கண்ணனை அடிக்கும் மூர்த்தி என் மூஞ்சிலேயே முழிக்காத என்று சொல்லிவிட்டு செல்கிறான். அதன்பிறகு கண்ணன் வீட்டில் இருந்து வெளியில் சொல்ல வீட்டில் உள்ள அனைவரும் சோகமாகின்றனர். இதற்கிடையே ஐஸ்வர்யா வீட்டில் இருக்கிறாள். அப்போது அங்கு வரும் கஸ்தூரி மகாராணி இன்னும் கௌம்பலயோ என்று கேட்கிறாள்.
அதன்பிறகு கஸ்தூரி கேட்கும் அனைத்து கேள்விகளுக்கு அமைதியாக இருக்கும் ஐஸ்வர்யாவிடம், என்ன தைரியம் இருந்த பிரசாந்த்கிட்ட போய் கண்ணன புடிச்சிருக்குனு சொல்லு அசிங்கமா இல்லையா என்று கேட்கிறாள். அதற்கு ஐஸ்வர்யா நான் அப்படி சொல்லியும் இந்த கல்யாணத்தை நடத்தனும்னு முடிவு பன்னிட்டீங்களே உங்களுக்கு அசிங்கமா இல்லையா என்று கேட்கிறாள். இதை கேட்டு கோபப்படும் கஸ்தூரி ஐஸ்வர்யாவை அடிக்கிறாள்.
அப்போது அங்கு வரும் பிரஷாந்த் கஸ்தூரியை அனுப்பிவிட்டு என்ன மதுரை வர மனசே இல்ல போல என்று கேட்கிறான். மேலும் இதுதான் குன்னக்குடியில் உனக்கு கடைசி நாள். இனிமேல் குன்னக்குடிக்கு வருவேன் கனவுல கூட நினைக்காத என்று சொல்கிறான். அடுத்து நான் உன் பின்னலையே சுத்ரேன்னு பெரிய அழகினு நெனப்பா என கேட்டு நீயெல்லாம் ஒன்னுமே இல்ல என் கால் தூசிக்கு சம்ம் என்று சொல்லிவிட்டு செல்கிறான். இதனால் அடுத்து என்ன செய்வது என்று ஐஸ்வர்யா யோசிக்கிறாள்.
இதற்கிடையே மூர்த்தி வீட்டில் அவனது மாமியார் வீட்டில் நடந்த பிரச்சினை குறித்து பேசிக்கொண்டிருக்கிறாள். அப்போது கண்ணன் அங்கே வர அனைவரும் முகத்தை சுழிக்கின்றனர். ஆனால் கண்ணன் அண்ணா அண்ணி என்று கூப்பிட யாரும் எதுவும் கேட்காததால், வீட்டில் இருந்து கிளம்புகிறான். அடுத்து கஸ்தூரி வீட்டில் பிரஷாந்த் டென்ஷனாக சுற்றிக்கொண்டிருக்க, அங்கு வரும் மல்லி அம்மா அப்பாவை பார்க்க அவனை அழைத்து செல்கிறாள்.
அப்போர் பிரஷாந்த் கஸ்தூரியிடம் ஐஸ்வர்யாவை பத்திரமாக பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு செல்கிறான். ஆனால் கஸ்தூரிக்கு போன்வர அவள் வெளியில் சென்று விடுவதால், அந்த நேரத்தில் ஐஸ்வர்யா வீட்டை விட்டு வெளியில் செல்கிறாள். அதன்பிறகு கஸ்தூரி தெருவில் நடந்து வர கண்ணன் அவளை கூப்பிடுகிறான்.அவளும் வேண்டா வெறுப்பாக நிற்க கண்ணன் அவளிடம் எங்கே போற என்று கேட்கிறான். அதற்கு அவள் ஏதோ பதில் சொல்ல கண்ணன் தன் வீட்டில் நடந்ததை கூறுகிறான்.
அதன்பிறகு எங்க போற ஐஸ் என்று கண்ணன் கேட்க யாருக்கும் தெரியாம வீட்டை விட்டு ஓடி வநதுட்டேன். அவர்கள் தேடுரதுக்குள்ள நான் எங்கியாவது போய்டனும் என்று சொல்கிறான் அத்துடன் முடிகிறது இன்றைய எபிசோடு.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil