Magasangamam Serial Today Episode : ஐஸ்வர்யாவை நினைத்து வருத்தப்படும் கண்ணனை அழைத்து எழில் அறிவுரை வழங்கும்போது இனியா அங்கு வருகிறாள். இவர் குன்னக்குடில பார்த்த மாதிரியே இல்லை, வந்ததுல இருந்து சோகமாகவே இருக்காரு என கூறுகிறாள் அப்போது எழில், அவனுக்கு லவ் பெயிலியர் என சொல்ல, எனக்கு அது தெரியும் அந்த பொண்ணு தான் யாருன்னு தெரியலை இனியா சொல்கிறாள். அப்போது கண்ணன் அதெல்லாம் ஒன்னும் இல்லை என சொல்லிவிட்டு செல்கிறான்.
அப்போது இனியா எழிலிடம் அந்த பொண்ணு ஐஸ்வர்யா தான என கேட்கிறாள். இதனால் அதிர்ச்சியடையும் எழில் யார்க்கிட்டயும் இது பற்றி சொல்லாத என சொல்கிறான். இதற்கிடையே தனமும், முல்லையும் பேசி கொண்டிருக்கும் போது அங்கு வரும் மல்லி நிச்சயத்துக்கு மோதிரம் எடுக்க போவோம் என அனைவரையும் அழைக்கிறாள். ஆனால் தனமும் எல்லாரும் போய்ட்டு வாங்க, நான் இங்க இருக்கேன் என சொல்கிறாள்.
இதற்கிடையே ஐஸ்வர்யா, இனியாவிடம் கண்ணன் எங்க என கேட்க அதற்கு இனியா, நீங்க ஏன் அவரை தேடுறீங்க, அவரே பாவம் விட்ருங்க அக்கா என சொல்கிறாள் சொல்ல கடுப்பாகும் ஐஸ்வர்யா, ஏன் நான் கண்ணன் மாமாகிட்ட பேசுனா உனக்கு என்ன என கேட்கிறாள் அப்போது இனியா நீங்க போய் பிரசாந்த் அண்ணனை கல்யாணம் பண்ணிகோங்க. கண்ணன் மாமாவை விட்ருங்க என சொல்லிவிட்டு செல்கிறாள். இதனை கேட்டு ஐஸ்வர்யா குழப்பத்துடன் இருக்கும்போது, கஸ்தூரி கிளம்பு நகைகடைக்கு போகணும் என சொல்கிறாள். எதுக்கு நகைகடைக்கு என அவள் கேட்கும் போது, உனக்கும் பிரசாந்த்க்கும் வர்ற வெள்ளிக்கிழமை நிச்சயம். அதுக்குதான் மோதிரம் எடுக்க போறோம். என சொல்கிறாள். இதை கேட்டு அதிர்ச்சியடையும் ஐஸ்வர்யாவை, வேகமா கிளம்புடி என சொல்லிவிட்டு செல்கிறாள் கஸ்தூரி.
இதற்கிடையில் எழிலும், கண்ணனும் பேசி கொண்டிருக்கும் போது, முல்லை வந்து ஐஸ்வர்யா நிச்சயத்துக்கு மோதிரம் எடுக்க போறோம் கிளம்புடா என சொல்கிறாள். அப்போது இருவருமே நான் வரலை நீங்க போய்ட்டு வாங்க என சொல்கின்றனர். முல்லை சென்றபிறகு எழில் கண்ணனுக்கு அட்வைஸ் பண்ணிவிட்டு செல்கிறான். இதறக்கிடையே நகை வாங்க அனைவரும் கிளம்பும்போது, ஐஸ்வர்யா கண்டிப்பா வரணுமா என கஸ்துரி கேட்க ஆமா நான் அவளுக்காக வாங்குற நகை எல்லாம், அவ தான் செலக்ட் பண்ணனும் என மல்லி சொல்கிறாள். ஆனால் ஐஸ்வர்யா இன்னும் கிளம்பாமல் இருக்கிறாள். இதை பார்த்து கோபப்படும் கஸ்தூரி, ஐஸ்வர்யாவை திட்ட, அவளோ, யாரை கேட்டு நீங்க நிச்சயத்துக்கு முடிவு பண்ணீங்க. எனக்கு பிரசாந்தை பிடிக்கலை என சொல்கிறாள்.
அதற்கு கஸ்தூரி, இப்போ எங்களோட கிளம்பி வா. இல்லைன்னா இப்படியே வீட்டை விட்டு கிளம்பிடு, உன்னை இதுக்கப்புறம் என்னால வைச்சு பார்த்துக்க முடியாது என என சொல்கிறாள். அதன்பின்னர் ஐஸ்வர்யாவும் கிளம்பி வந்த பிறகு அனைவரும் கடைக்கு செல்கின்றனர். இதற்கிடையே வீட்டில் கண்ணன் சோகமாக அமர்ந்திருக்க, என்னடா ஆச்சு உனக்கு. ஏன் வந்ததுல இருந்து ஒரு மாதிரி இருக்க என தனம் கேட்கிறாள். அவன் அதெல்லாம் ஒன்னும் இல்லை. உங்களோட இருக்கணும் போல இருந்துச்சு என சொல்கிறான் அத்துடன் முடிகிறது இன்றைய எபிசோடு.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil