/tamil-ie/media/media_files/uploads/2021/08/Yaaradi-Nee-Mohani-1200.jpg)
Yaaradi Nee Mohani Serial Update In tamil : வெள்ளித்திரைக்கு இணையாக சின்னத்திரை சீரியல்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இதில் கொரோனா தொற்று காலத்தில் படங்கள் ஏதும் வெளியாகாத நிலையில், பலரும் சீரியலை ரசிக்க தொடங்கிவிட்டனர். இதனால் சின்னத்திரையில் மாதத்திற்கு ஒரு புது சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. புது சீரியல் களமிறங்கும் அளவுக்கு ஒரு சில பழைய சீரியல்கள் முடிவுக்கு வரும் நிலையில் உள்ளது. அதிலும் ஓரிரு சீரியல்களுக்கு தற்போது எண்ட் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் சமீபத்தில் எண்ட் கார்டு போடப்பட்ட சீரியல் யாரடி நீ மோகினி. சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்றாக ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியலில் ஸ்ரீகுமார், நட்சத்திரா, சைத்ரா ரெட்டி ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்து வந்தனர். தென்னிந்திய சீரியல் வரலாற்றில் அதிக பட்ஜெட் செலவில் எடுக்கப்பட்ட சீரியல்களில் ஒன்றான இந்த சீரியலுக்கு ரசிகர்கள் கூட்டம் ஏராளம்.
இதில் ஸ்ரீகுமார் – நட்சத்திரா தம்பதிக்கு வில்லியாக நடித்த சைத்ரா ரெட்டிக்கு அதிக வரவேற்பு கிடைத்தது. கடந்த சில மாதங்களாகவே இந்த சீரியல் முடிவக்கு வரவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், இந்த சீரியலின் முடிவை ரசிகர்களே தீர்மாளிக்க வாய்ப்பு வழக்கப்பட்டது. சீரியல் வரலாற்றில் முதல்முறையாக இந்த முடிவு அரங்கேற்ப்பட்ட நிலையில், நேற்று முன்தினத்துடன் இந்த சீரியல் நிறைவடைந்தது.
இதனால் ரசிகர்கள் கொஞ்சம் வருத்தத்தில் உள்ள நிலையில், சமீபத்தில் படக்குழுவுடன் எடுத்த புகைப்படங்களை சைத்ரா ரெட்டி தனது சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அனைவருக்கும் நட்சத்திராவுடன் எடுத்த புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ள சைத்ரா, நாங்கள் மூவரும் எடுத்துக்கொண்ட முதல் புகைப்படம் என்றும் அதில் அனைவருக்கும் நன்றி என்றும் பதிவிட்டுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.