அடடே, இந்த சீரியல் இன்னும் முடியவில்லையாம்… 2-வது கிளைமாக்ஸ் அறிவிப்பு!

Tamil Serial Update : ஜீ தமிழின் யாராடி நீ மோகினி சீரியலின் 2-வது க்ளைமேக்ஸ் ஒளிபரப்ப உள்ளதாக சீரியல் குழு அறிவித்துள்ளது.

Zee Tamil Yaaradi Nee Mohini Serial Update : ஜீ தமிழின் யாரடி நீ மோகினி சீரியல் கடந்த வாரம் முடிவுற்ற நிலையில், தற்போது இந்த சீரியலின் 2-வது க்ளைமேக்ஸ் காட்சியை ஒளிபரப்ப உள்ளதாக சீரியல் குழு ப்ரமோ வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

சீரியல் ஒளிபரப்பி ரசிகர்கள் மத்தியில் பிரபலமான தொலைக்காட்சிகளில் ஒன்று ஜீ தமிழ். இதில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடியது. ஸ்ரீகுமார், நட்சத்திரா, சைத்ரா ரெட்டி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்த இந்த சீரியல் கடந்த சில வாரங்களாகவே முடிவக்கு வர உள்ளதாக தகவல் வெளியானது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் சீரியல் குழுவும் சீரியல் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளதாகவும். ரசிகர்களே இந்த க்ளைமேக்ஸை தீர்மானிக்கலாம் என்று மூன்று ஆப்ஷன்கள் வழங்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து இந்த சீரியல் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை முடிவுக்கு வந்தது. இதனையடுத்து அந்த சீரியலில் நடித்த நடிகர் நடிகைகள் அனைவரும், கூட்டாக எடுத்தக்கொண்ட புகைப்படங்களை சமூகலைதளங்களில் பகிர்ந்து  ரசிகர்களுடன் உரையாடி தங்களது எமோஷன்களை பகிர்ந்துகொண்ட நிலையில், தற்போது இந்த சீரியல் குழு மீண்டும் ஒரு அதிரடி முடிவை அறிவித்துள்ளது.

யாரடி நீ மோகினி சீரியல் கடந்த வாரமே முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், இப்போது மற்றொரு க்ளைமாக்ஸ் வைத்திருப்பதாக அறிவித்துள்ள சீரியல் குழு அதற்கான ப்ரமோ வீடியோவையும் வெளியிட்டுள்ளது.  தொடரைக்காட்சி சீரியல் வரலாற்றில் கடளைமேக்ஸ் கட்சியை ரசிகர்கள் தேர்வு செய்ய வாய்ப்பு வழங்கி யாரடி நீ மோகினி சீரியல் குழு தற்போது ஒ சீரியலுக்கு 2-வது க்ளைமேக்ஸ் வைத்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சீரியலின் 2-வது க்ளைமாக்ஸ் வரும் ஞாயிறு அன்று மதியம் 1:30 மணி முதல் 2:30 மணி வரை ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil serial yaaradi nee mohani serial 2nd climax

Next Story
புதுச் சேலை… அழகு சிலை… இவங்கதான் சமையல் அம்மான்னு சொன்னா யார் நம்புவாங்க!Roshini haripriyan tamil news: Bharathi kannama roshni’s latest insta video
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com