/tamil-ie/media/media_files/uploads/2021/07/Yaaradi-Nee-Mohani.jpg)
Yaaradi Nee Mohani Serial Climax Twist : தமிழ் சீரியல் வரலாற்றில் ஒரு சீரியலின் க்ளைமேக்ஸை ரசிகர்களே முடிவு செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழில் சீரியலை ஒளிபரப்பும் முக்கிய தொலைக்காட்சிகளில் ஒன்று ஜீ தமிழ். இதில் பல தொடர்கள் ஒளிபரப்பானாலும் யாரடி நீ மோகினி என்ற சீரியல் மக்கள் மத்தியல் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இந்த சீரியலில் பெயருக்கு ஏற்றது போல பேய் கதாப்பாத்திரத்தை கொண்டு வந்து ஒரு அழகான குடும்ப கதையை ஒளிபரப்பியதே இந்த சீரியலின் வெற்றிக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்ட இந்த சீரியல் தற்போது 1225 எபிசோடுகளை கடந்துள்ள நிலையில், கடந்த சில வாரங்களாக இந்த சீரியல முடிவுக்கு உள்ளதாக தகவல் வெளியானது. அதனை உறுதி செய்யும் வகையில் இந்த சீரியல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக சீரியல் குழுவே அறிவித்துள்ளனர். இதனால் இந்த சீரியலின் க்ளைமேக்ஸ் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் தொற்றிக்கொண்ட நிலையில், க்ளைமேக்ஸ்க்கு முன்பே ரசிகர்களுக்கு ட்விஸ்ட் வைக்கப்பட்டுள்ளது.
அது என்னவென்றால், இந்த சீரியலின் கிளைமாக்ஸ் எப்படி இருக்க வேண்டும் என்பதை ரசிகர்களே முடிவு செய்யட்டும் என சீரியலின் தயாரிப்புக் குழு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக வெளியான ப்ரமோ வீடியோவில், சீரியலின் வில்லி கதாபாத்திரமான ஸ்வேதா மன்னித்து ஏற்றுக் கொள்ளப்பட வேண்டுமா? அல்லது வெண்ணிலாவால் பழிவாங்கப்பட வேண்டுமா? அல்லது சித்ராவின் ஆவியினால் பழிவாங்கப்பட வேண்டுமா? என மூன்று ஆப்ஷன்களை ரசிகர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதில் ரசிகர்கள் அதிகமாக வாக்களிக்கும் கிளைமாக்ஸை படமாக்கி ஒளிபரப்ப சீரியல் தயாரிப்பு குழு முடிவு செய்துள்ளது. தயாரிப்பு நிறுவனத்தின் இந்த முடிவு ரசிகர்கள் மத்தியில் ஒரு வித மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், விறுவிறுப்பாக சென்ற தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதை நினைத்து ரசிகர்கள் ஒரு பக்கம் சோகக்கடலில் மூழ்கியுள்ளனர். ஆனாலும் ரசிகர்கள் எந்த முடிவுவை தேர்ந்தெடுப்பார்கள் என்று பல தரப்பினரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.