Advertisment
Presenting Partner
Desktop GIF

மேடையில் உயிரை விட்ட மனைவி: காதலை புரிந்துகொள்வாரா ஹீரோ: ஜீ தமிழ் சீரியலில் இன்று!

ஜீ தமிழின் கார்த்திகை தீபம், அண்ணா மற்றும் வள்ளியின் வேலன் சீரியலின் இன்றைய எபிசோடு குறித்து பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
Deeba Pam

கார்த்தியிடம் சத்தியம் வாங்கி உயிரை விட்ட தீபா.. அதிர்ச்சியில் ஆபிராமி குடும்பம் - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்

Advertisment

கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் தீபாவை பாட வைப்பதற்காக முயற்சிகள் ஒரு பக்கம் நடக்க இன்னொரு பக்கம் தீபா பாடினால் அவளது உயிருக்கே ஆபத்து என்று டாக்டர் கச்சேரி நடக்கும் இடத்தை நோக்கி வந்த நிலையில் இன்று, தீபாவிற்கு சுயநினைவுகள் திரும்பி அவள் கச்சேரியில் பாட தொடங்க அனைவரும் அதை பார்த்து சந்தோசப்படுகின்றனர்.

இதற்கிடையில் கச்சேரி நடக்கும் இடத்திற்கு வரும் டாக்டர் சக்தியை சந்தித்து தீபா பாடினால் அவங்க உயிருக்கே ஆபத்து என்று சொல்ல ஷக்தி என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கிறாள். தீபா பாடி கொண்டிருக்கும் போதே மூக்கில் இருந்து ரத்தம் வடிய தொடங்க தீபா அதை எல்லாம் தாங்கி கொண்டு பாடி முடித்து கீழே விழ அனைவரும் பதற்றம் அடைந்து தீபாவை ஹாஸ்பிடலுக்கு அழைத்து செல்லலாம் என்று முடிவெடுக்கின்றனர்.

ஆனால் தீபா கார்த்தியின் கையை பிடித்து கொண்டு இல்ல வேண்டாம்.. நான் பிழைப்பது கஷ்டம்னு எனக்கு தெரிந்துடுச்சு. நான் இறந்து போனால் நீங்க இன்னொரு கல்யாணம் பண்ணிட்டு சந்தோசமாக வாழனும் என சத்தியம் வாங்குகிறாள். அம்மா ஜானகியை பார்த்து அப்பா எங்கே என்று கேட்க அப்பா இப்போ வந்து விடுவார் என்று பொய் சொல்லி சமாளிக்கின்றனர். அபிராமியை பார்த்து நீங்க அத்தையாக கிடைக்க நான் கொடுத்து வச்சிருக்கனும் என்று சொல்கிறாள்.

இதையடுத்து அங்கு துப்பாக்கியுடன் வந்த ஐஸ்வர்யா தீபாவை சுட முயற்சிக்க துப்பாக்கி கீழே விழுந்து போலீசிடம் சிக்கி கொள்கிறாள். பிறகு மைதிலியிடம் இனிமே நீங்க தான் அம்மா அப்பாவை பார்த்துக்கணும் என்று சொல்லி விட்டு கார்த்தியின் மடியில் உயிரை விடுகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தல தீபாவளி கொண்டாட்டத்தில் சண்முகம் குடும்பம்.. பரணியை நெகிழ வைத்த சண்முகம் - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட் 

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் பாண்டியம்மா போலீசிடம் சிக்கிய நிலையில் இன்று, சண்முகம் தலை தீபாவளியை கொண்டாடுவதற்காக தங்கைகள் எல்லாருக்கும் புடவை எடுத்து வந்து கொடுக்கிறான், பிறகு தனியாக சென்று பரணிக்கும் எடுத்து வந்த புடவையை கொடுக்கிறான்.  அந்த புடவை ரொம்பவே சிம்பிளாக இருக்க ஷண்முகம் இந்த புடவையை எப்படி எடுத்தேன் தெரியுமா? தங்கைகளுக்கு எல்லாம் திருச்செந்தூரில் புடவை எடுத்துட்டு உனக்கு மட்டும் திருநெல்வேலி போய் எடுத்திட்டு வந்தேன் என்று சொல்கிறான்.

பரணி புடவையை எப்படி தேர்ந்தெடுத்த என்று கேட்க சண்முகம் பொம்மைக்கு கட்டி வச்சி இருந்தாங்க.. அதை பார்த்து அதே புடவை தான் வேணும்னு சொல்லி வாங்கிட்டு வந்தேன்.  கடைக்காரன் வேற புடவை தரேன்னு சொன்னான், ஆனால் அந்த பொம்மைக்கு கட்டிய புடவை தான் வேணும்னு சொல்லி வாங்கிட்டு வந்தேன் என்று வெகுளியாக சொல்ல பரணி அந்த புடவையை கட்டி கொள்ள முடிவெடுக்கிறாள். இதையடுத்து பரணி அந்த புடவையை கட்டி கொண்டு வெளியே வர அதை பார்த்த தங்கைகள் என்ன அண்ணி இதை போய் கட்டிட்டு வந்து இருக்கீங்க, அண்ணன் எடுத்து கொடுத்ததை கட்டிட்டு வாங்க என்று சொல்ல பரணி இது தான் உங்க அண்ணன் எடுத்து கொடுத்தது என சொல்கிறாள்.

இதை கேட்டு தங்கைகள் எல்லாரும் உனக்கு ரொமான்ஸே வரல அண்ணே என்று கலாய்த்து விடுகின்றனர். பிறகு உள்ளே வந்த சண்முகம் புடவை பிடிக்கலைன்னா பிடிக்கலைனு சொல்ல வேண்டியது தானே என்று சொல்ல பரணி நீ எனக்காக அவ்வளவு தூரம் போய் எடுத்ததே போதும் என்று சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

லவ் மூடில் வள்ளி.. ரேணுகாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி, பதற்றத்தில் வேலன் குடும்பம் - வள்ளியின் வேலன் இன்றைய எபிசோட் அப்டேட் 

வள்ளியின் வேலன் சீரியலில் நேற்றைய எபிசோடில் வேலன் ரஞ்சித்துக்கு வார்னிங் கொடுத்த நிலையில் இன்று, ரஞ்சித் ரூமில் இருந்து வெளியே வரும் வேலனை வள்ளி உனக்கு மருந்து போட்டு விடுவதாக சொல்லி ரூமுக்கு அழைத்து செல்கிறாள். பிறகு வேலனிடம் சட்டையை கழட்ட சொன்னதும் அவன் அதெல்லாம் முடியாது மேடம்.. நான் வீட்டுக்கு போய் மருந்து போட்டுக்கிறேன் என அங்கிருந்து எஸ்கேப் ஆகி வருகிறான்.

வீட்டில் ஆனந்தி வேலனுக்கு குண்டு பட்ட விஷயத்தை பற்றி சொல்கிறாள். வேலன் மீது பட்டது பிளாஸ்டிக் குண்டு தான் என்று சொன்னாலும் வேலனின் அப்பா மற்றும் அக்கா என இருவரும் பதறுகின்றனர். வேலைன்னு எந்த ஆஸ்பிட்டல்ல சேர்த்து இருக்காங்க என துடிக்கின்றனர். இந்த சமயத்தில் வீட்டுக்கு வரும் வேலன் எனக்கு எதுவும் இல்லை என்று தூங்க சென்று விடுகிறான்.

மறுபக்கம் வீட்டில் தூக்கம் வராமல் தவிக்கும் வள்ளி வேலனுக்கு போன் செய்யலாமா வேண்டாமா என யோசிக்கிறாள். அதைத்தொடர்ந்து ஆனந்திக்கு போன் செய்து உன் அண்ணன் என்ன பண்றான் என்று கேட்க ஆனந்தி தூங்கி விட்டதாக சொல்கிறாள். பிறகு வள்ளி ஆனந்தியிடம் உன் அண்ணன் தூங்குறத வீடியோ எடுத்து அனுப்பு என்று கேட்க ஆனந்தியும் வேலனின் முகம் தெரிவது போல வீடியோ எடுத்து அனுப்புகிறாள். இதைப் பார்த்து ரசித்தபடியே வள்ளி தூங்கி விடுகிறாள்.

அடுத்த நாள் காலையில் ரேணுகா வீட்டில் அவளை பொண்ணு பார்க்க மாப்பிள்ளை வீட்டிலிருந்து வருவதாக அம்மா சொல்ல அதைக்கேட்டு அதிர்ச்சி அடைகிறாள். என்னால ரெடியாக முடியாது என அடம் பிடிக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Tamil Serial News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment