அமெரிக்க செல்லும் மனைவி: கர்ப்பமாகும் தங்கை: ஹீரோவின் பிரார்த்தனை நடக்குமா?
அமெரிக்கா செல்லும் மனைவியின் முடிவை மாற்ற வேண்டும் என்று கூறி கணவன் முருகனுக்கு தண்ணீர் அபிஷேகம் செய்ய அடுத்து என்ன நடக்கும் என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அண்ணா, சீரியலின் சண்டே ஸ்பெஷல் எபிசோட் வரும் ஞாயிறு மாலை 5 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. வெள்ளிக்கிழமை எபிசோடில் பரணி சண்முகம் அழைத்தும் வர மறுத்ததால் தங்கைகள் அப்படியொரு அண்ணி எங்களுக்கு வேண்டாம் என்று சொல்லிய நிலையில் சண்டே ஸ்பெஷல் எபிசோடில் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
Advertisment
சண்முகம் தங்கைகளிடம் கோபப்பட்டு பரணி ஒவ்வொருத்தருக்கும் தனித்தனியாக என்ன செய்து இருக்கா என்று எடுத்து சொல்லி புரிய வைக்கிறான். இதனால் எல்லார் மனநிலையும் மாறுகிறது. மறுபக்கம் சௌந்தரபாண்டி பேச்சை கேட்டு கொண்டு பாண்டியம்மா பரணி கழுத்தில் இருக்கும் தாலியை கழட்ட முயற்சிக்க, பாக்கியம் யார் தாலி மேல கையை வைக்கிற என்று அறைகிறாள்.
பரணி இப்படியெல்லாம் பண்ணா கிளம்பி போயிட்டே இருப்பேன் என்று சொல்ல சௌந்தரபாண்டி நீ போ மா நான் பார்த்துக்கறேன் என்று சமாதானம் செய்கிறார். பிறகு பாண்டியம்மாவிடம் பரணியை வெளியே அனுப்ப கூடாது.. அவளை இங்க வச்சிக்கிட்டே நம்முடைய காரியத்தை சாதிக்கனும் என்று சொல்கிறார். இதையடுத்து சண்முகத்தின் தங்கைகள் வைகுண்டம் என எல்லாரும் பரணியை பார்க்க வருகின்றனர்.
ஒவ்வொருத்தரும் தனித்தனியாக பரணியிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் பரணி தனது முடிவில் உறுதியாக இருக்கிறாள். அடுத்து இசக்கி கர்ப்பமாக இருப்பது தெரிய வருகிறது, ஆனால் முதலில் பரணி தான் கர்ப்பமாகி இருக்க வேண்டும் என வருத்தப்பட முத்துப்பாண்டி ஆறுதல் சொல்கிறான். சண்முகம் டீ கடையில் டீ குடித்து கொண்டிருக்க சௌந்தரபாண்டி சனியனை வைத்து கொண்டு இனிமே ரத்னாவை யார் கல்யாணம் பண்ணிப்பா? அவ வாழ்க்கை அவ்வளவு தான் என்று நக்கலாக பேசுகிறான்.
Advertisment
Advertisements
இதை கேட்ட சண்முகம் கோபப்பட்டு சௌந்தரபாண்டியை அடி வெளுக்க அந்த வழியாக வந்த பரணி இதை கவனிக்கிறாள். சௌந்தரபாண்டி உனக்காக பேச போய் அடிப்பதாக மாற்றி சொல்ல பரணி சண்முகத்தை தவறாக புரிந்து கொள்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன? பரணி, சண்முகம் மீண்டும் ஒன்று சேர போவது எப்படி என்ற கதைக்களத்தில் அண்ணா சண்டே ஸ்பெஷல் எபிசோட் ஒளிப்பரப்பாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அண்ணா சண்டே ஸ்பெஷல் எபிசோடை வரும் ஞாயிறு மாலை 5 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.