![karthigai Deepam And](https://img-cdn.thepublive.com/fit-in/1280x960/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2024/12/11/xTKDxoP4TTBgek4pZQYm.jpg)
காதல் குறித்து சொன்ன ரேவதி.. கார்த்திக் சாமுண்டேஸ்வரிக்கு வைத்த செக்மேட் - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்
கார்த்திகை தீபம், சீரியலின் நேற்றைய எபிசோடில் சாமுண்டீஸ்வரி ரேவதிக்கு கல்யாணம் செய்ய முடிவெடுத்த நிலையில் இன்று, ரேவதி கல்யாணம் குறித்த பேச்சால் அப்செட்டாகி ரூமுக்குள் இருக்க அம்மா கூப்பிட்டதாக சொல்லி சுவாதி ரேவதியை வலுக்கட்டாயமாக அழைத்து வருகிறாள். சாமுண்டீஸ்வரி ரேவதி டல்லாக இருப்பதை பார்த்து என்னாச்சு? என்ன பிரச்சனை? என்று விசாரிக்க ஒன்னும் இல்லை என்று சொல்லி சமாளிக்கிறாள்.
அடுத்து சாமுண்டீஸ்வரி சாப்பிட உட்கார அவளது மகள்கள் யாரும் சாப்பிடவில்லை என்று தெரிய வந்து சாப்பாடு எடுத்து கொண்டு வந்து என் மேலே இருக்க கோபத்தை சாப்பாட்டு மேலே எதுக்கு காட்டுறீங்க என்று கேட்கிறாள். மேலும் திடீரென கல்யாணம் என்று சொன்னால் யாருக்காக இருந்தாலும் பயமும் கோபமும் வர தான் செய்யும். ஒரு நாள் டைம் எடுத்துக்கோ, நாளைக்கு உன்னுடைய முடிவை சொல்லு என்று சொல்ல ரேவதி இதுக்கு என்ன பதில் சொல்வது என தெரியாமல் முழிக்கிறாள்.
அடுத்து கார்த்திக் ரேவதி ரூம் கதவை தட்டி கல்யாணத்தில் உங்களுக்கு என்ன பிரச்சனை என்று கேட்கிறான். ரேவதி என்னுடைய பெர்சனல் விஷயத்தில் நீ எதுக்கு தலையிடுற என்று கோபப்படுகிறாள். காதல் ஏதாவது இருக்கா? அப்படி எதாவது இருந்தா சொல்லுங்க என்று சொல்ல ரேவதி பக்கத்துக்கு ஊரை சேர்ந்த ஒருவனை காதலிப்பதாகவும், அம்மாவுக்கும் அந்த குடும்பத்திற்கும் ஆகாது என்றும் சொல்கிறாள்.
இதை கேட்ட கார்த்திக் இவ்வளவு தானே விஷயம், உங்களுடைய காதலுக்கு நான் உதவுறேன் என்று வாக்கு கொடுக்கிறான். அடுத்த நாள் காலையில் சாமுண்டேஸ்வரி ரேவதி கூப்பிட்டு உன்னுடைய முடிவு என்ன என்று கேட்க கல்யாணத்தில் எனக்கு ஒரு கண்டிஷன் இருக்கு நான் கல்யாணம் பண்ணிக்கணும்னா நீங்க அப்பாவை அவங்க அப்பா அம்மாவை பார்க்க விடணும் என்று சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஸ்கூலை பிடிங்கி ஆட்டத்தை ஆரம்பித்த வெங்கடேஷ்.. ஷண்முகம் செய்ய போவது என்ன? அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்
அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் பரணி முத்துபாண்டியை சந்தித்து பேச அவன் இசக்கியை கூப்பிட முடியாது. அந்த வீட்டிற்கு வந்து வாழ முடியாது என்று சொல்லிய நிலையில் இன்று, பரணி, பாக்கியம் மற்றும் சிவபாலன் ஆகியோர் ஒன்று சேர்ந்து முத்துபாண்டியால் மட்டும் தான் இசக்கி மனசை மாற்ற முடியும். எப்படியாவது முத்துப்பாண்டியை இசக்கியிடம் பேச வைக்க வேண்டும் என்று திட்டம் போடுகின்றனர்.
அடுத்து ரத்னாவிடம் இருந்து வெங்கடேஷ் ஸ்கூலை எழுதி வாங்கிய நிலையில் கரஸ்பாண்டண்ட் ஷீட்டில் வந்து உட்காருகிறான், ரத்னா அவனிடம் வந்து சத்தம் போட இது என்னுடைய ஸ்கூல் இங்க நான் தான் எல்லாம் என்று துரத்தி விடுகிறான். மேலும் கனிக்கு டிசி கொடுத்து ஸ்கூலை விட்டு துரத்தி விடுகிறான். இது பிசினஸ் நடக்க வேண்டிய இடம். இந்த இடத்தில போய் ப்ரீயா பாடம் சொல்லி கொடுத்திட்டு இருக்காங்க என்று ஸ்கூலை வைத்து பிசினஸ் செய்ய திட்டம் போடுகிறான்.
வீட்டிற்கு வந்த ரத்னா விஷயத்தை சொல்ல பரணி இப்போதைக்கு இந்த விஷயம் சண்முகத்திற்கு தெரிய வேண்டாம் என்று சொல்ல சண்முகம் வந்ததும் கனி கட்டிப்பிடித்து அழுது நடந்த விஷயத்தை சொல்லி விடுகிறாள். ஆனால் சண்முகம் கொஞ்சமும் கோபப்படாமல் அவ்வளவு தானே. காலையில பார்த்துக்கலாம் என்று சொல்லி கேசுவலாக உட்கார்ந்து சாப்பிடுகிறான்.
பரணி நீ அருவா எடுக்க கூடாது, கூலா இருக்கனும்னு தான் சொன்னேன்.. அதுக்காக இவ்வளவு கூல் எல்லாம் ரொம்ப ஓவர் என்று சொல்ல சண்முகம் காலையில் பார்த்துக்கலாம் என்று சொல்லி படுத்து விடுகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன? சண்முகம் செய்ய போவது என்ன? என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.