Advertisment

மருமகளை தள்ளி வைத்த மாமியார்... மகன் மீது பொய் சத்தியம் செய்த அம்மா : ஜீ தமிழ் சீரியலில் இன்று

ஜீ தமிழில் அதிக டி.ஆர்.பி  புள்ளிகளை பெற்றுவரும், அண்ணா,அமுதாவும் அன்னலட்சுமியும், மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

author-image
WebDesk
Nov 18, 2023 16:10 IST
New Update
zee tamil serial

ஜீ தமிழ் அண்ணா, அமுதாவும் அன்னலட்சுமியும், மீனாட்சி பொண்ணுங்க

ஜீ தமிழ் டாப் சீரியல்களின் சுவாரசிய அப்டேட்

Advertisment

புது விதமான கதை காலத்துடன் கூடிய தொடர்களை அறிமுகப்படுத்தி வரும் ஜீ தமில் பல தொடர்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. அதில் அதிக டி.ஆர்.பி  புள்ளிகளை பெற்றுவரும், அண்ணா,அமுதாவும் அன்னலட்சுமியும், மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அண்ணா:

பரணிக்கு ஆப்பு வைத்த பாக்கியம்.. சண்முகம் பற்றி தெரிய வந்த உண்மைகள்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில், சனியன் சௌந்தரபாண்டியிடம் பொண்ணுக்கு முறை செய்யணும் என சம்பளத்துடன் தீபாவளி போனஸ் கேட்க அதான் கல்யாணம் ஆகி 10 வருஷம் ஆகிடுச்சே, இன்னுமா முறை செய்துட்டு இருக்க? போனஸ் எல்லாம் தர முடியாது. ஏன் உன் மாப்ள பிச்சை எடுக்கறானா என்று மோசமாக பேசி செல்ல சனியன் கண் கலங்கி நிற்கிறார்.

அதன் பிறகு அங்கு வந்த பாக்கியம் சனியனுக்கு பணத்தை கொடுத்து உங்க பொண்ணுங்க முறை செய்யுங்க என்று சொல்ல உங்க பொண்ணு பரணிக்கும் இது தல தீபாவளி தான் என்பதை ஞாபகப்படுத்துகிறார். மறுபக்கம் பரணி தனது தோழிகளை எப்படியாவது ஊருக்கு அனுப்பியாக வேண்டும் என திட்டம் போடுகிறாள். பாக்கியம் பரணிக்கு தீபாவளி முறை செய்யணும் என்று சொல்ல சௌந்தரபாண்டி முத்துப்பாண்டி என இருவரும் அதெல்லாம் செய்ய முடியாது என்று மறுப்பு தெரிவிக்கின்றனர்.

சிவபாலன் அண்ணனுக்கு கோவில்ல அடி வாங்குனது மறந்துடுச்சு போல என்று சொல்ல முத்துப்பாண்டி சிவபாலனை அறைந்து விடுகிறான். பாக்கியம் கண்டிப்பா முறை செய்யணும் என சொல்லி விட்டு வருத்தமாக இருக்க சிவபாலன் தன்னிடம் ஒரு ஐடியா இருக்கு என சொல்கிறான். அடுத்து பரணி நானும் என் வீட்டு காரரும் ஹனிமூன் போறோம், நீங்க பொங்கலுக்கு வாங்க அவரை பார்க்கலாம் என்று சொல்லி கொண்டிருக்க சண்முகம் அப்போது அங்கு வந்து விடுகிறான்.

அவனிடம் இவர்களை பஸ் ஏற்றி விட்டு வர சொல்கிறாள். சண்முகம் இவர்களை காரில் அழைத்து வந்து கொண்டிருக்கும் போது பானிபூரி சாப்பிடணும் என்று அடம் பிடிக்க சண்முகம் இவர்களை கடைக்கு அழைத்து செல்கிறான். கடைக்கு போன இடத்தில சண்முகம் போன் பேச போன கேப்பில் ரவுடிகள் சிலர் இந்த பெண்களிடம் தப்பா பேச அவர்களை அடித்து சண்டை போட அந்த பக்கம் வரும் பாக்கியமும் சிவபாலனும் இதை பார்த்து விடுகின்றனர். வேலைக்காரன் பயங்கரமாக சண்டை போடுறான் என்று சொல்ல பாக்கியம் இவன் தான் பரணியின் புருஷன் என்ற உண்மையை உடைக்கிறாள்.

அதோடு தோழிகள் சண்முகம் தான் என் புருஷன் என பரணி வாயால் சொல்ல வைக்கிறோம் என பிளான் போடுகின்றனர். இப்படியான நிலையில் அடுத்தாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அமுதாவும் அன்னலட்சுமியும்

செந்திலுடன் மணமேடை ஏறும் மாயா.. கடத்தப்படும் சார்லஸ், அமுதா செய்ய போவது என்ன?

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். இந்த சீரியலில் கடந்த வாரம் மாயாவின் கணவர் சார்லஸை தேடி மதுரைக்கு வந்த அமுதா சார்லஸ் என்று தெரியாமலேயே அவருடன் ஆட்டோவில் மதுரை முழுவதும் தேடி பார்க்கிறாள். மறுபக்கம் மாயாவுக்கும் செந்திலுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது.

இந்த நேரத்தில் மாயாவின் ஆட்கள் சார்லஸை கடத்தி விடுகின்றனர். அதன் பிறகு அமுதாவும் ஆட்டோ ட்ரைவர் தான் சார்லஸ், அவரை கடத்தியது மாயாவின் ஆட்கள் தான் என்பதை தெரிந்துகொண்டு, சார்லஸை எப்படியாவது கண்டுபிடித்தாக வேண்டும் என்ற முயற்சியில் இறங்குகிறாள். மறுபக்கம் இந்த கல்யாணத்தை நிறுத்த எந்த வழியும் கிடைக்கவில்லை என்றால் மாயாவை கொன்று விடுவது தான் ஒரே வழி என முடிவெடுக்கிறாள் அன்னம்.

அதே போல் மாணிக்கம் ரவுடிகளை ஏற்பாடு செய்து மாயாவை கொல்ல திட்டம் போடுகிறாள். இங்கே அமுதா சிசிடிவி  காட்சிகளை வைத்து சார்லஸை கண்டு பிடிக்கலாம் என முடிவுக்கு வருகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்ற கோணத்தில் சீரியல் கதைக்களம் நகர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மீனாட்சி பொண்ணுங்க :

சக்திக்கு ரங்கநாயகி கொடுத்த தண்டனை.. உண்மையை மறைத்த  வெற்றி

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க.  இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் புஷ்பா மீனாட்சியை கொலை செய்ய திட்டம் போட்டு இருக்க மாட்டாள். அவள் தன் மகன் மீது சத்தியம் செய்து விட்டாள் என்று நீதிமணி சொல்லியும் சக்தி கேட்காமல் நான் போனில் புஷ்பா பேசியதை கேட்டேன் என்று உறுதியாக சொல்லி புஷ்பாவை போலீசில் லாக்கப்பில் வைக்கிறாள்.

இதனால் கோபமடைந்த நீதிமணி சக்தியையும் வெற்றியையும் திட்டி விட்டு போகிறார். கோவம் அடைந்த புஷ்பா நான் வெளியில் வந்தால் உன் குடும்பத்தை பழிவாங்குவேன் என்று சொல்ல, சக்தி முடிந்ததை பார் என்று சொல்லிவிட்டு போகிறாள். சங்கிலி புஷ்பாவிடம் வந்து சண்முகத்தின் மேல் ஏன் பொய் சத்தியம் செய்தீர்கள் என்று கேட்க வேறு வழி இல்லாமல் செய்து விட்டேன் பரிகாரம் செய்து கொள்ளலாம் என்று புஷ்பா கூறுகிறாள்.

வெற்றி சக்தியை சமாதானம் செய்து மீனாட்சியை பார்க்க வீட்டிற்கு வந்து வெற்றி நலம் விசாரிக்கிறான். மீனாட்சி ரங்கநாயகியின் வெள்ளி விழாவை பற்றி கேட்க, வெற்றி சொல்லாமல் மறைத்து விடுகிறான். பிறகு சக்தியை வீட்டிற்கு அழைத்துச் செல்கிறான். ரங்கநாயகி சக்தியை பார்த்ததும் என் வெள்ளி விழாவுக்கு கூட வர முடியாமல் எக்ஸாமிற்கு நீ சென்று விட்டாயா என்று கேட்க ,சக்தி மீனாட்சி ஆபத்தான நிலைமையில் இருந்ததை கூறுகிறாள்.

அதற்கு ரங்கநாயகியோ நீ சொல்வதெல்லாம் நீ எக்ஸாம் போன பிறகு நடந்தது, என சொல்ல,சக்தி எவ்வளவோ விளக்கம் சொல்லியும் ரங்கநாயகி நீ வேண்டுமென்றே என் விழாவை புறக்கணித்து விட்டாய் என்று சக்தியை திட்டி இனி வீட்டுக்குள்ளே வரக்கூடாது என்று சொல்லி விடுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#New Serial Zee Tamil
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment