Advertisment

அம்மாவை காப்பாற்ற மகனின் மாஸ்டர் ப்ளான்... தங்கைக்காக அண்ணன் கண்ணீர் : ஜீ தமிழ் சீரியலில் இன்று

ஜீ தமிழில் அதிக டி.ஆர்.பி புள்ளிகளை பெற்றுவரும், கார்த்திகை தீபம், அண்ணா, நினைத்தேன் வந்தாய், சீரியல்களில் சமீபமாக நடந்த சுவாரசிய நிகழ்வுகள் குறித்து காணலாம்.

author-image
WebDesk
New Update
zee tamil Serial news

ஜீ தமிழ் சீரியல்கள்

ஜீ தமிழ் டாப் சீரியல்களின் சுவாரசிய அப்டேட்

Advertisment

ஜீ தமிழ் தொடர்ந்து புது விதமான கதை காலத்துடன் கூடிய தொடர்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதில் பல தொடர்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. இந்நிலையில் அவற்றில் அதிக டி.ஆர்.பி புள்ளிகளை பெற்றுவரும், கார்த்திகை தீபம், அண்ணா, நினைத்தேன் வந்தாய், சீரியல்களில் சமீபமாக நடந்த சுவாரசிய நிகழ்வுகள் குறித்து காணலாம்.

கார்த்திகை தீபம்:

கார்த்தி போட்ட மாஸ்டர் பிளான்.. நம்பி வந்து சிக்கிய ரவுடி, அபிராமி நிலை என்ன?

கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் அபிராமியை கடத்திய ரவுடிகளில் மணி என்பவனை தீபா காட்டி கொடுத்த நிலையில் இன்று, போலீஸ் அந்த மணியோட வீடு தெரியும், அங்க போய் விசாரித்தால் ஏதாவது உண்மை தெரிய வரும் என்று சொல்ல மணி வீட்டிற்கு கிளம்பி வருகின்றனர். நிறைமாத கர்ப்பிணியாக மணி மனைவி மட்டும் தனியாக இருக்கிறாள்.

கார்த்திக் அவளிடம் மணி குறித்து விசாரிக்க அவரை பத்தி தெரியாது, வாரத்தில் ஒரு நாள் தான் வீட்டிற்கு வருவார் என்று சொல்லி மழுப்புகிறாள். கார்த்திக் வீட்டில் நடந்த பிரச்சனைகள் அனைத்தையும் சொல்லி புரிய வைக்க முயற்சி செய்கிறான். கடைசியாக அந்த பெண்மணி அவர் எங்க இருக்காருன்னு உண்மையாகவே எனக்கு தெரியாது என்று சொல்கிறாள்.

மேலும் அவரிடம் இருக்கும் போன் நம்பர் என்கிட்ட இருக்கு, அந்த நம்பரை நான் தரேன், அனால் அவருக்கு எந்த ஆபத்தும் வராதுனு எனக்கு சத்தியம் பண்ணி கொடுங்க என்று சொல்ல, கார்த்திக்கும் கண்டிப்பாக உங்க கணவருக்கு எந்த ஆபத்தும் வராது என்று சத்தியம் செய்கிறான். அடுத்ததாக அந்த பெண்மணி போன் நம்பரை கொடுக்க கார்த்திக் நம்ம யாரவது பேசினால் சந்தேகம் வந்து விடும் என்பதால் அந்த வீட்டு ஹவுஸ் ஓனர் பெண்மணி போனில் இருந்து போன் பண்ணி நான் சொல்லுற மாதிரி பேச சொல்கிறான். 

அந்த பெண்மணியும் போன் பண்ண முதலில் மணி எடுக்காமல் இருக்க மீண்டும் போன் பண்ண எடுத்து பேசுகிறான். உன் பொண்டாட்டி பாக்கியத்துக்கு பிரசவவலி வந்துடுச்சி, ஹாஸ்பிடலில் சேர்த்து இருக்கோம். ஆனால் டாக்டர் சீரியஸ்னு சொல்றாங்க. நீ கையெழுத்து போடணும்னு சொல்றாங்க. உடனே கிளம்பி வா என்று கூப்பிட மணி என்னால் இப்போ வர முடியாது என்று சொல்கிறான்.

நீ கையெழுத்து போட்டா தான் உன் பொண்டாட்டிக்கு பிரசவம் பார்ப்பங்களாம் என்று சொல்லி நம்ப வைக்க மணியும் வருவதாக சொல்கிறான். ஹாஸ்பிடலில் எல்லா ஏற்பாடுகளையும் செய்து போலீஸ் மப்டியில் காத்திருக்க மணி ஹாஸ்ப்பிடல் வந்து மனைவி இருக்கும் ரூமுக்குள் செல்ல அவனை உள்ளவே வைத்து லாக் செய்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அண்ணா:

உண்ணாவிரதம் இருந்து உசுப்பேற்றும் பாண்டியம்மா.. சண்முகம் எடுத்த முடிவு

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் வீட்டிற்கு வந்த சண்முகம் இசக்கி போட்டோவை எடுத்து வைத்து கொண்டு கண் கலங்க அதை பார்த்து எல்லாரும் பதறிய நிலையில் இன்று, சண்முகம் அழுவதை பார்த்த தங்கைகள் உனக்காக தான் இந்த போட்டோவை மறைத்து வைத்திருந்தேன் என்று சொல்ல ஏன்லே அப்படி பண்ணீங்க, இசக்கி இந்த குடும்பத்தோட மகாராணி, நமக்காக தான் அவ அங்க போய் கஸ்டப்படுறா என்று கண் கலங்குகிறான்.

மேலும் இனிமே என் தங்கச்சிக்கு எதாவது பிரச்னைனா அந்த வீட்ல இருக்குற ஒருத்தரையும் உசுரோட விட மாட்டேன் என்று சொல்கிறான். மறுபக்கம் பாண்டியம்மா எனக்கு சாப்பாடு வேண்டாம் என்று அடம் பிடித்து கொண்டிருக்க சௌந்தரபாண்டி சாப்பிட சொல்லி கொண்டிருக்கிறார். அந்த சண்முகம் என்ன வந்து மிரட்டிட்டு போறான், உன் பொண்ணு என்னை அறையுற.

உன்ன பார்த்தாலே பயந்திட்டு கிடந்த உன் பொண்டாட்டியும் அந்த இசக்கியும் உன்ன மதிக்க கூட மாற்றாளுங்க இதையெல்லாம் பார்த்துட்டு நீ என்ன பண்ண என்று கோபப்பட சௌந்தரபாண்டி கண்டிப்பா எதாவது பண்றேன் அக்கா என்று சொல்லி சாப்பிட சொல்ல பாண்டியம்மா விடாமல் பேசி கொண்டிருக்கிறாள். உடனே சிவபாலன் அதான் சாப்பாடு வேண்டாம்னு சொல்றாங்களே விட வேண்டியது தானே என்று சொல்ல சௌந்தரபாண்டி இருக்கும் கோபத்தில் சிவபாலனை போட்டு அடித்து துவைத்து எடுக்கிறார்.

பாண்டியம்மா இவனை அடிக்கிறது பெருசு இல்ல இதே மாதிரி அந்த சண்முகத்தை அடிக்கணும் என்று சொல்கிறாள். பிறகு சிவபாலன் அழுது கொண்டிருக்க பாக்கியம் என்னால் நீயும் கஸ்டப்படுற என்று இசக்கியிடம் சொல்ல அவள் அண்ணனே வந்து என்னை கூப்பிட்டு இருந்தாலும் நான் உன்னை விட்டு போய் இருக்க மாட்டேன். என் அத்தை இங்க கஷ்டப்படும் போது நான் எப்படி போவேன் என்று பாக்கியத்துக்கு ஆறுதலாக பேசுகிறாள்.

மறுபக்கம் அசந்து தூங்கி கொண்டிருந்த சண்முகம் திடீரென அலறி அழ பரணி என்னாச்சி என்று கேட்கிறாள். அந்த பாண்டியம்மா வந்த பிறகு தான் இவ்வளவு பிரச்சனை, அவ அந்த வீட்ல இருக்க கூடாது என்று சொல்ல பரணி அவ்வளவு தானே அதுக்கு நான் ஒரு வழி பண்ணுறேன் என்று சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நினைத்தேன் வந்தாய்:

சமையலால் எழிலை கவுத்த சுடர்.. மனோகரி பார்த்தா என்ன ஆகுறது?

நினைத்தேன் வந்தாய் சீரியலின் நேற்றைய எபிசோடில் சுடர் எழில் தன்னை காப்பாற்றிய விஷயம் பற்றி அப்பாவிடம் சொல்லி கொண்டிருந்த நிலையில் இன்று, சுடரும் அப்பாவும் பேசி கொண்டிருக்கும் போது அவளது சித்தி ரேணுகா போனை வாங்கி இவர்கள் பேசுவதை கேட்டு போனை தூக்கி போட்டு உடைக்கிறாள். இதனையடுத்து சுடர் அஞ்சலியிடம் எழிலுக்கு நன்றி சொல்வது போல பேச அவளும் புரியாமல் யாருக்கு சொல்ற என்று கேக்க கடவுளுக்கு என்று சொல்லி சமாளிக்கிறாள்.

எழிலுக்கு எப்படியாவது நன்றி சொல்ல வேண்டும் என்று யோசிக்கும் சுடர் விதவிதமாக சமைத்து அசத்த முடிவெடுக்கிறாள். உடனே சமைத்து டைனிங் டேபிளில் கொண்டு வந்து வைக்க கனகவல்லியும் கணக்கு பிள்ளையையும் யாருக்காக இவ்வளவு சமைக்கிற என்று கேட்க எழில் சாருக்காக தான், பசங்களும் சாப்பிடட்டும் என்று சொல்ல அவன் இதெல்லாம் சாப்பிட மாட்டான். கோபம் தான் படுவான் என்று சொல்கின்றனர். ஆனால் சுடர் நான் சாப்பிட வைக்கிறேன் என்று சொல்கிறாள்.

அடுத்து சாப்பிட வரும் எழில் வெரைட்டி வெரைட்டியாக இருப்பதை பார்த்து எதுக்கு இதெல்லாம் செய்த? இது எல்லாத்தையும் எடுத்துட்டு போ வழக்கமாக சாப்பிடுவதை கொண்டு வா என்று சொல்ல சுடர் இன்னைக்கு ஒரு நாள் மட்டும் நான் சமைத்ததை சாப்பிடுங்க என்று சொல்கிறாள். ஆனால் எழில் வேண்டாம் என்று சொல்லி விட்டு எழுந்து செல்கிறான்.

கீரை எல்லாம் எவ்வளவு ஹெல்த்தி, இதெல்லாம் உங்களுக்கே தெரியும். ஒரே ஒரு நாள் சாப்பிட்டு பாருங்க, பிடிக்கலைன்னா இனிமே நான் சமைக்க மாட்டேன் என்று சொல்ல எழில் சாப்பிட உட்கார எல்லாமே சூப்பராக இருக்க ரசித்து சாப்பிடுகிறான், குழந்தைகள் வாசனை நல்லா வருது எல்லாம் வித்தியாசமா இருக்கு. அப்பாவும் சாப்பிடுறாரு என்று வித்தியாசமாக பார்க்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment