ரீமேக் ஆகும் பெங்காலி சீரியல் : முக்கிய வேடத்தில் அபிதா, வனிதா விஜயகுமார்

மாரியின் தாத்தாவாக நடிகர் டெல்லி கணேஷ் நடித்துள்ள நிலையில். வனிதா விஜயகுமார். நடிகர் பாண்டியராஜன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர்

மாரியின் தாத்தாவாக நடிகர் டெல்லி கணேஷ் நடித்துள்ள நிலையில். வனிதா விஜயகுமார். நடிகர் பாண்டியராஜன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர்

author-image
WebDesk
New Update
ரீமேக் ஆகும் பெங்காலி சீரியல் : முக்கிய வேடத்தில் அபிதா, வனிதா விஜயகுமார்

சினிமாவில் ஒரு மொழியில் வெற்றி பெற்ற திரைப்படத்தை மற்ற மொழிகளில் ரீமேக் செய்வது சினிமாவின் ஆரம்ப காலத்தில் இருந்து வழக்கமாக நடைபெற்று வருகிறது. இந்த வகையில் ரீமேக் செய்யப்பட்ட சில திரைப்படங்கள் வரவேற்பை பெறவில்லை என்றாலும் கூட பெரும்பாலான படங்கள் மற்ற மொழிகளிலும் வசூல் சாதனை நிகழ்த்தியுள்ளர்.

Advertisment

இந்த வழக்கத்தை தற்போது சின்னத்திரையும் கடைபிடித்து வருகிறது. மற்ற மொழிகளில் வெற்றி பெற்ற பல சீரியல்கள் தமிழில் ரீமேக் செய்யப்பட்டு வெற்றிகரமாக ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த வரிசையில் தற்போது புதிதாக இணைந்துள்ளது ஜீ தமிழின் மாரி சீரியல்.

பெங்காலியில், வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரணாயினி என்ற சீரியல் தெலுங்கில், ரீமேக் செய்யப்பட்டு அங்கேயும் ரசிகர்களை தன்பக்கம் இழுந்தது. இந்த வெற்றியை தமிழிலும் குவிக்க வேண்டும் என்று கருதி தற்போ மாரி என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது

தெலுங்கில் நாயகியாக நடித்த ஆஷிகா இந்த சீரியல் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமாகிறார். இதில் அவரது அம்மாவாக நடிகை அபிதா நடிக்கிறார். எதிர்காலத்தில் நடப்பதை முன்கூட்டியே தெரிந்துகொள்ளும் மாரிக்கு இந்த சக்தி வரமா அல்லது சாபமா என்பதை சொல்லும் வயைில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த சீரியல் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது.

Advertisment
Advertisements

இதில் மாரியின் தாத்தாவாக நடிகர் டெல்லி கணேஷ் நடித்துள்ள நிலையில். வனிதா விஜயகுமார். நடிகர் பாண்டியராஜன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: