/tamil-ie/media/media_files/uploads/2023/02/Sita-Raman.jpg)
தமிழில் சீரியல்கள் ஒளிபரப்புவதில் முக்கிய சேனல்களில் ஒன்றான ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இதை தக்கவைத்துக்கொள்ளும் வகையில் ஜீ தமிழ் அவ்வப்போது புதிய சீரியல்களையும் களமிறங்கிய வருகிறது. அந்த வகையில் வரும் பிப்ரவரி 20 முதல் சீதா ராமன் என்ற புதிய சீரியல் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. சன்டிவியின் ரோஜா சீரியல் நாயகி பிரியங்கா நல்காரி இதில் நாயகியாக நடித்து வருகிறார்.
ஜூஜி நாயகனாக நடிக்க நடித்து வரும் இந்த தொடரில் ரேஷ்மா பசுபுலேட்டி நாயகனின் அம்மாவாக நடிக்க பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடிக்க உள்ளனர். அழகு என்றால் வெறும் வெளித்தோற்றம் மட்டும் என உறுதியாக நம்பும் மகாலட்சுமி எதிர்பாராத விதமாக மருமகளாக நுழையும் சீதா உண்மையான அழகு எது என மகாலட்சுமிக்கு புரிய வைப்பாளா? இல்லையா? என்பது தான் இந்த சீரியலின் கதைக்களமாக இருக்க உள்ளது.
தற்போது இந்த சீரியல் வரும் பிப்ரவரி 20 முதல் தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த நேரத்தில் ஒளிப்பரப்பாகி வந்த நினைத்தாலே இனிக்கும் சீரியல் இனி இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாக இருப்பதாக தெரியவந்துள்ளது. மேலும் வரும் திங்கள் முதல் மீனாட்சி பொண்ணுங்க சீரியல் பழைய படி இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் எனவும் தெரிய வந்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.