முடிவுக்கு வரும் செம்பருத்தி சீரியல்: கிளைமாக்ஸ் என்ன? | Indian Express Tamil

முடிவுக்கு வரும் செம்பருத்தி சீரியல்: கிளைமாக்ஸ் என்ன?

ஜீ- தமிழில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி சீரியல் தற்போது 1000 எபிசோடுகளை கடந்து ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளது.

முடிவுக்கு வரும் செம்பருத்தி சீரியல்: கிளைமாக்ஸ் என்ன?

சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வரும் செம்பருத்தி சீரியல் விரைவில் முடிவுக்வு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினித்திரையில் பெரும்பாலான சீரியல்கள் ரசிகர்களின் மனம் கவர்ந்த சீரியலாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் ஒரு சில சீரியல்கள் வரவேற்பை பெற்று வந்தாலும் திடீரென முடிவுக்கு வந்துவிடுவது வழக்கமாக நடந்து வருகிறது. ஆனால் சில சீரியல்கள் ரசிகர்களின் ரசனைக்கேற்ப காட்சிகள் அமைத்து தொடர்ச்சியாக ஒளிபரப்பி வருகின்றன.

அந்த வகையில் ரசிகர்களின் மனம் கவர்ந்த சீரியல்களில் முக்கிய இடத்தை பெற்றுள்ளது செம்பருத்தி. முன்னணி சேனல்களுக்கு இணையாக சீரியல் ஒளிபரப்புவதில் ஆர்வம் காட்டி வரும் ஜீ- தமிழில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் தற்போது 1000 எபிசோடுகளை கடந்து நாள்தோறும் பெரிய எதிர்பார்ப்புடன் அரங்கேறி வருகிறது.

பார்வதியாக ஷபானா, ஆதியாக விஜே அக்னி, அகிலாண்டேஸ்வரியாக  பிரியா ராமன் நடித்து வருகின்றனர். இதில் முதலில் ஆதியாக நடித்து வந்த நடிகர் கார்த்திக் ரவி கடந்த சில மாதங்களுக்கு முன்பு சீரியலை விட்டு விலகினார். அதனைத் தொடர்ந்து அவருக்கு பதிலாக விஜே அக்னி ஆதி கேரக்டரில் நடித்து வருகிறார்.

கேரக்டர் மாற்றம் இருந்தாலும் சீரியலுக்கு உண்டான வரவேற்பு குறையவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இப்படி ரசிகர்கள் கொண்டாடும் சீரியல்களில் ஒன்றாக மாறியுள்ள செம்பருத்தி தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 1400 எபிசோடுகளை கடந்துள்ள செம்பருத்தி தனது இறுதிகட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது.

Sembaruthi | Premiere Ep 1403 Preview - Jul 06 2022 | Before ZEE Tamil | Tamil TV Serial

இந்த தகவலை கேட்டு ரசிகர்கள் ஒருபக்கம் அதிர்ச்சியடைந்தாலும், மற்றொரு பக்கம் சீரியலின் முடிவு எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது ரசிகர்கள் மத்தியில் பிரம்மாண்ட சிம்மாசனம அமைத்துள்ள செம்பருத்தி தனது இறுதிக்கட்டத்தையும் பிரம்மாண்டமாகவே அமைத்துக்கொள்ளும் என் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil serial zee tamil sembaruthi end soon climax expectation

Best of Express