Zee Tamil Thavamai Thavamirunthu Serial Update : சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் டிவி சீரியல்கள் ஒரு பெரிய பொழுதுபோக்கு அம்சமாக மாறிவிட்டது. மக்களின் ரசனையை புரிந்துகொண்ட தொலைக்காட்சிகளும் அவ்வப்போது புதிய சீரியல்களை களமிறங்கி வருகிறது. இதில் சீரியலின் டிஆர்பி ரேட்டிங்கை பொறுத்து அதற்கு விறுவிறுப்பாக திரைக்கதை எழுதும் பணி நடைபெறுவது வழக்கம்.
மேலும் ஒரு புதிய சீரியலை கொண்டு வரும்போது அது மக்களின் மனதில் எளிதில் சென்றடைய ஏதாவது ஒரு யுக்தியை பயன்படுத்த வேண்டியது அவசியம். அதன்படி சீரியல் தொடங்கிய காலத்தில் அனைத்து தொலைக்காட்சிகளும் கையாளும் ஒரே யுக்தி டைட்டில். தமிழில் ஹிட்டடித்த படங்களின் டைட்டிலை சீரியலக்கு பயன்படுத்துவது காலம் காலமாக நடந்து வருகிறது.
அந்த படங்கள் மக்களின் மனதில் ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதால், அதே டைட்டில் சீரியலுக்கு வைக்கும்போது மக்களே எதிர்பாராத ஒரு எதிர்பார்ப்பு இந்த சீரியல் மீது விழுகிறது. இதனால் சீரியலிக் தொடக்கம் சரியாக அமைந்துவிடும் ஆனால் அதன்பிறகு விறுவிறுப்பாக திரைக்கதையினால் மட்டுமே சீரியலை ஹிட் அடிக்க முடியும்.
அந்த வகையில் சினிமா டைட்டிலை பயன்படுத்தி ஜீதமிழில் புதிதான ஒளிபரப்பாகிவரும் சீரியல் தவமாய் தவமிருந்து. வேலையில் இருந்து ஓய்வுபெற்ற ஒரு தம்பதியின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த சீரியல் கடந்த வாரம் முதல் ஜீதமிழின் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வருகிறது.

50 வயதை கடந்த மார்க்கண்டேயன் – சீதா தம்பதியினரே இந்த சீரியலின் முதன்மை கதாப்பாத்திரங்கள். ஒரு தனியார் நிறுவனத்தில் உதவி மேலாளராக வேலை செய்பவர் மார்க்கண்டேயன். நம் குடும்பங்களில் பிள்ளைகளுடன் அதிகம் உரையாடாத அப்பாக்களே அதிகம். குறிப்பாக பிள்ளைகள் வளர வளர அப்பாக்கள் தனித்து விடப்படுகின்றனர். அம்மாக்களின் பிரச்சினை, சிரமங்கள், வலி தெரியும் அளவிற்கு கூட அப்பாக்களின் உழைப்பும் வலியும் பிள்ளைகளுக்கு தெரிவதில்லை.
அன்பை வெளிக்காட்டிக் கொள்ளாவிட்டாலும் மனைவியும், பிள்ளைகளும் மட்டுமே உலகம் என நேசிப்பவராக, அதேசமயம் நண்பர்களுக்கு ஒரு பிரச்சினை எனும்போது உடனடியாக முன்நின்று உதவி செய்பவராக இந்த கதையின் நாயகன் மார்க்கண்டேயன் இருக்கிறார். மார்க்கண்டேயனின் மனைவி சீதா. தமிழ் குடும்பங்களின் அஸ்திவாரமாக, ஆணி வேராக, உறவுகளுக்கிடையிலான இணைப்பு பாலமாக இருப்பவர்கள் பெண்கள். வீட்டில் ஒவ்வொருவரையும் அவரவர் போக்கில் சமாளித்து குடும்பத்தில் ஒற்றுமையும், நிம்மதியும் குறையாமல் இருக்க என்ன செய்ய வேண்டுமோ, அதை அச்சு பிசகாமல் செய்யும் அம்மாக்களின் பிம்பம்.
இப்படி செல்லும் மார்க்கண்டேயன் – சீதா வீட்டுக்குள் பிள்ளைகளின் நடத்தையினால் அடுத்தடுத்த நடக்கும்போகும் எதார்த்தமான சம்பவங்களைக் கொண்டே ‘தவமாய் தவமிருந்து’ நெடுந்தொடர் பின்னப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான சவால்களை காலமும், இந்த சமூகமும் கொடுத்துக்கொண்டேயிருக்க அதை சீதா- மார்க்கண்டேயன் குடும்பம் எப்படி எதிர்கொள்ளப்போகிறது
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil