scorecardresearch

Zee Tamil Serial: ஆசிரியரால் ஆபத்து; எப்படி சமாளிக்கிறார் வித்யா?

வித்யாவை பிடிக்காமல் திருமணம் செய்து கொண்ட சஞ்சய் தற்போது அவளின் காதலை புரிந்து கொண்டு அவளை ஏற்றுக்கொள்கிறான்.

Zee Tamil Serial: ஆசிரியரால் ஆபத்து; எப்படி சமாளிக்கிறார் வித்யா?

8 திருப்பங்களுடன் தனது ஒளிரப்பபை தொடங்கியுள்ள வித்யா நம்பர் 1 அடுத்த 2 திருப்பங்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

தொடக்கத்திலே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள வித்யா நம்பர் 1சீரியலில, மூன்றாவது திருப்பமாக டுடோரியலில் படிக்க செல்லும் வித்யாவுக்கு ஆசிரியரால் ஆபத்து வர இந்த பிரச்சினையை தீர்க்க சஞ்சய் எடுக்கும் முடிவு பெரும் விறுவிறுப்பை ஏற்படுத்தும் என்கின்றனர் சீரியல் குழுவினர்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல் வித்யா நம்பர் 1. தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில்,வித்யாவை பிடிக்காமல் திருமணம் செய்து கொண்ட சஞ்சய் தற்போது அவளின் காதலை புரிந்து கொண்டு அவளை ஏற்றுக்கொள்கிறான்.  இதன்பிறகு அம்மாவுக்கு பிடித்த பெண்ணாக வித்யாவை மாற்ற முடிவு செய்து அவளை படிக்க அனுப்புகிறான் சஞ்சை.

ஆனால் படிக்க சென்ற இடத்தில், உனக்கு கையெழுத்து சரியாக வரவில்லை என சொல்லி எழுத கற்று கொடுப்பது போல ஆசிரியர் தவறாக நடக்க முயற்சி செய்கிறான். இதை தெரிந்துகொள்ளும் சஞ்சய் ஆசிரியரை அடித்து துவம்சம் செய்கிறான். இதனால் வித்யாவும் சஞ்சயும் சந்திக்க போகும் பிரச்சனைகள் என்ன? வித்யாவின் படிப்பு என்னவாகும் என்ற கோணத்திலும் அடுத்தடுத்த எபிசோடுகள் ஒளிபரப்பாக உள்ளன.

இதற்கிடையே சஞ்சயின் தங்கை மானஸாவுக்கு நிச்சயதார்த்த ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில் பியூட்டி பார்லருக்கு வித்யா சென்றிருக்கும்போது அங்கு மானஸாவுக்கு பார்த்த மாப்பிள்ளை வேறொரு பெண்ணுடன் வந்திருக்கிறான். இந்த விஷயம் வித்யாவுக்கும் சஞ்சய்க்கும் எப்படி தெரிய வருகிறது? மானஸாவின் நிச்சயம் தடுத்து நிறுத்தப்படுமா? இதனால் சகுந்தலா எடுக்க போகும் முடிவு என்ன? என்ற கோணத்தில் வரும் எபிசோடுகள் ஒளிபரப்பாக உள்ளன.

இந்த இரண்டு திருப்பங்களை தொடர்ந்து அடுத்தடுத்த எபிசோடுகளில் மற்ற திருப்பங்கள் என்னென்ன என்பது தெரிய வரும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil serial zee tamil vidhya number 1 next two twist update in tamil