Advertisment

பஞ்சாயத்தில் நோஸ்கட் : காதலியை காப்பாற்றிய ஹீரோ; அம்மாவை காப்பாற்றுவாரா?

ஜீ தமிழின் வீரா சீரியலில் சன்டே ஸ்பெஷல் எபிசோடு குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
Anna Veera

அண்ணா - வீரா

பஞ்சாயத்தில் ட்விஸ்ட் வைத்த சௌந்தரபாண்டி.. தீ குளிக்க தயாரான சூடாமணி, சண்முகம் செய்ய போவது என்ன? அண்ணா சீரியல் வீகெண்ட் எபிசோடு அப்டேட்

Advertisment

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் சௌந்தரபாண்டி பஞ்சாயத்துக்கு மண்ணெண்ணெய் கேனுடன் வந்திருந்த நிலையில் இன்றும் நாளையும் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

சௌந்தரபாண்டி சூடாமணி உத்தமினு நிரூபணம் ஆகலேனா தற்கொலை செய்துப்பேனு சொன்னாலே அதுக்கு தான் மண்ணெண்ணெய் என்று சொல்கிறார். இதையடுத்து சனியனுக்கு போன் செய்ய அவனது போன் ஸ்விட்ச் ஆப் என வருகிறது. இதனால் சண்முகம் அதிர்ச்சி அடைகிறான். சௌந்தரபாண்டி சிரித்து விட்டு என்ன போன் சுவிட்ச் ஆப்னு வருதா? என்று கேட்க பிளாஷ்கட் ஓப்பனாகிறது.

இந்த பிளாஷ்கட்டில் சௌந்தரபாண்டி சனியனை பார்க்க அவனது கண்கள் கலங்கி போய் இருக்க என்னாச்சு? உன் பேரனுக்கு ஒன்னுனா மட்டும் தான் உன் கண்ணு கலங்கும் என்று கேட்க சனியன் நடந்த விஷயத்தை சொல்கிறான். இந்த சம்பவத்தில் சம்மந்தப்பட்டவங்க எல்லாருமே சண்முகம் குடும்பமா இருக்காங்க, இதுல இருந்தே இது அவங்களோட திட்டம் என்பது தெரிய வேணாவா என்று உண்மையை கண்டு பிடித்து விடுகிறார்.

அடுத்து சூடாமணியை தீ குளிக்க வைக்க தூண்டுவது போல் சௌந்தரபாண்டி பேச சூடாமணி நான் செத்து போய்ட்டா என் குடும்பத்தை விட்டுடுவல நான் செத்து போறேன் என்று எண்ணெய்யை மேலே ஊற்றி கொள்கிறாள். கடைசி நொடியில் சண்முகம் தடுத்து நிறுத்தி ஒரே ஒரு நாள் மட்டும் டைம் கேட்க ஒரு நாள்ல என்ன கிழிக்க போறனு பார்க்கலாம் என்று சௌந்தரபாண்டி ஓகே சொல்கிறார். இதையடுத்து சூடாமணியை வீட்டிற்கு அழைத்து வந்து அவளை குளிக்க வைக்கின்றனர்.

இங்கே முத்துப்பாண்டி இரண்டு நாள் கேம்ப் என்று வெளியூருக்கு கிளம்ப பாக்கியமும் இசக்கியும் விடியற்காலையில் எழுந்து சண்முகம் ஜெயிக்கணும் என்று பூஜை செய்ய, சௌந்தரபாண்டி நக்கல் அடித்து விட்டு செல்கிறார். அடுத்து வீட்டில் சாப்பாடுசமைக்கவில்லை என்று இசக்கி சொல்ல சௌந்தரபாண்டி அவளை திட்டி வீட்டை விட்டு வெளியே துரத்துகிறார். 

கூடவே பாக்கியமும் வெளியே வர நேராக இருவரும் சண்முகம் வீட்டிற்கு வந்து விடுகின்றனர், சும்மா இரண்டு நாள் தங்க வந்ததாக சொல்ல சண்முகம் சந்தேகப்பட்டு உண்மையை சொல்ல சொன்னதும் இவர்களும் உண்மையை சொல்லி விடுகின்றனர்.

பிறகு வைகுண்டம் உண்மையை மட்டும் நிரூபிக்கலானா உன் அம்மாவை வீட்டை விட்டு அனுப்பிட வேண்டியது தான் என்று வருத்தப்பட சண்முகம் முத்துப்பாண்டி கேம்ப் போக காரணமே நா தான், அவன் எப்போ ஊருக்குள்ள வரணும் என்பதையும் நான் தான் முடிவு பண்ணுவேன். சௌந்தரபாண்டியை சிக்க வைக்க ஒரு திட்டம் இருப்பதாக சொல்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மாப்பிள்ளையாக ஸ்கோர் செய்த மாறன், வீராவுக்கு ப்ரஜன் கொடுத்த அட்வைஸ் விறுவிறுப்பான திருப்பங்களுடன் வீரா சண்டே ஸ்பெஷல் எபிசோட்

வீரா சீரியலில் அடுத்த அதிரடி திருப்பங்களுடன் சண்டே ஸ்பெஷல் எபிசோட் வரும் ஞாயிறு மதியம் (ஆகஸ்ட் 11) மதியம் 1:30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. இந்த சண்டே ஸ்பெஷல் எபிசோடில் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

அதாவது வீரா மற்றும் அரவிந்த்தனுக்கு மெஹந்தி பங்ஷன் தொடங்குகிறது. அப்போது மாறன் மாப்பிள்ளை கொடுத்ததாக சொல்லி வீராவுக்கு ஒரு டிரஸ் கொடுக்க அவளும் அதை போட்டு கொள்ள கடைசியில் அது மாறன் பொய் சொல்லி கொடுத்தது என்று தெரிய வருகிறது.

மாறன் வீராவிடம் இன்னைக்கு முழுக்க மாப்பிள்ளை செய்ய வேண்டிய சடங்கை எல்லாம் நான் தான் செய்வேன் என்று சொல்ல வீரா உன்னால் அப்படி முடியாது, ஒன்னு செய்ய முடியலைனாலும் நீ என்னை விட்டு போய்டணும் என்று சொல்லி சவால் விடுகிறாள். மாறனும் சவாலை ஏற்று கொள்கிறான். இதற்கிடையில் யாரோ ஒருவன் ஒரு மஞ்ச பையில் பாமை கொண்டு வந்து வீராவுக்கு கொடுக்கும் கிப்ட்களில் கலந்து வைத்து விடுகிறான்.

இந்த பாம் எப்போது வெடிக்கும் என்று பில்டப் ஒரு பக்கம் ஓட இன்னொரு பக்கம் மாறன் சவால் விட்டபடி மாப்பிள்ளை செய்ய வேண்டிய சண்டங்குகள் ஒவ்வொன்றையும் அவனே செய்கிறான். இதனால் வீரா கடுப்பாகிறாள். அதை தொடர்ந்து அரவிந்தன் இதுவரை டி டோட்டலர் என்று சொல்லி இருந்த நிலையில் அவனுக்கு எல்லா வித கெட்ட பழக்கமும் இருக்கிறது என்பது தெரிய வந்து மாறன் அதை வீராவிடம் சொல்ல அவள் நம்ப மறுக்கிறாள். பிறகு கூட்டத்தில் வைத்து வீராவுக்கு ஐ லவ் யூ சொல்ல அனைவரும் அதிர்ச்சியாக அதை சாதுர்யமாக சமாளிக்கிறான்.

இந்த பங்ஷனுக்கு ஸ்பெஷல் கெஸ்ட்டாக வந்த ப்ரஜன் மாறன் நடந்து கொள்வதையும் வீராவையும் தொடர்ந்து கவனித்து வருகிறான், இறுதியாக மண்டபத்திற்குள் கேஸ் லீக்காவதாக எல்லாரையும் வெளியேற சொல்ல வீரா தெரியாமல் பாம் மீது கை வைத்து உள்ளவே மாட்டி கொள்கிறாள். மாறன் வீராவை காப்பாற்ற உள்ளே செல்ல ப்ரஜனும் பாமை செயலிழக்க செய்ய உள்ளே வருகிறான்.

வீரா மாறனை வெளியே போக சொல்ல மாறன் நீ இல்லாமல் நான் எப்படி போவேன் என்று அவனும் பாம் மீது கை வைக்க ப்ரஜன் சாதுர்யமாக செயல்பட்டு இருவரையும் காப்பாற்றுகிறான். இறுதியாக நீங்க ரெண்டு பேர் தான் சரியான ஜோடி.. இன்னொரு முறை யோசித்து முடிவு எடு என்று வீராவுக்கு அட்வைஸ் செய்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment