ஐஸ்வர்யா ராய்க்கு போட்டியாக சீரியல் நடிகை : வைரல் வீடியோ

Tamil Serial Update : எழிலுடன் இவர் பழகி வரும் காட்சிகளுக்கு பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. அதிலும் இவரும் எழிலும் சேர வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.

Tamil Serial Update : எழிலுடன் இவர் பழகி வரும் காட்சிகளுக்கு பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. அதிலும் இவரும் எழிலும் சேர வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.

author-image
WebDesk
New Update
ஐஸ்வர்யா ராய்க்கு போட்டியாக சீரியல் நடிகை : வைரல் வீடியோ

Serial Actress Rithika Viral Video Update : விஜய் டிவியின் பாக்யலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய அறிமுகம தேவையில்லை. திருமணத்திற்கு மீறிய உறவு, இல்லத்தரசியின் வாழ்வியல் முன்னேற்றம், பெண் கல்வி, மதமாற்று திருமணம் உள்ளிட்ட இன்றைய காலகட்டத்திற்கு தேவையான அனைத்தையும் உள்ளடக்கியுள்ள இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

Advertisment

அழகான குடும்பம், அன்பான குழந்தைகள், பாசமான அம்மா அப்பா என இருக்கும் கோபி தனது முன்னாள் காதலியை மணமுடிக்க எண்ணி தற்போது பாக்யவிடம் இருந்து விகாரத்து பெற முயற்சித்து வருகிறார். இதனால் அடுத்து என்ன நடக்கும் என்ற அதிரடி திருப்பங்கள் நிறைந்த பாக்யலட்சுமிக்கு இல்லத்தரசிகள் மத்தியில் ஆதரவு பெருகி வருகிறது.

இந்த சீரியலில் அமிர்தா என்ற விதவை கேரக்டரில் நடித்து வருபவர் ரித்திகா. தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வரும் இவருக்கு தனியாக ரசிகர்கள் கூட்டம் உள்ளது. அதுவும் எழிலுடன் இவர் பழகி வரும் காட்சிகளுக்கு பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. அதிலும் இவரும் எழிலும் சேர வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.

இந்நிலையில், சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ரித்திகா அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் நடிகை ஜஸ்வர்யா ராய் வசனத்திற்கு டப்ஸ்மாஷ் செய்துள்ளார். மம்முட்டி ஐஸ்வர்யா ராய், அஜித், அப்பாஸ், தபு உள்ளிட்ட பலர் நடித்த கணடுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படம் பெரிய ஹிட் அடித்தது.

Advertisment
Advertisements

இந்த படத்தில், க்ளைமேக்ஸில் மம்முட்டி மற்றும் ஐஸ்வர்யா ராய் இடையேயான வசத்திற்கு இன்றளவும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தற்போது இந்த வசனத்தை ஐஸ்வர்யா ராய் போன்று ரித்தியாக பேசியுள்ளார். இந்த வீடியோ பதிவு தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோவுக்கு ரசிகர்கள் பலரும தங்களது கருத்துக்களை கூறி வருகினறனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: