தொடர்ந்து முதலிடம் பிடிக்கும் சன் டிவி சீரியல்… பின்னுக்கு தள்ளப்பட்ட விஜய் டிவி சீரியல்கள்!
Latest TRPs of Suntv and vijay tv’s serial in tamil: கடந்த சில மாதங்களாகவே சன் டிவியின் கயல் சீரியல் டாப் - 5 இடத்திற்குள் இருந்து வரும் நிலையில், விஜய் டிவியின் பிரபல சீரியல்கள் தொடர் சரிவை சந்தித்துள்ளன.
Latest TRPs of Suntv and vijay tv’s serial in tamil: கடந்த சில மாதங்களாகவே சன் டிவியின் கயல் சீரியல் டாப் - 5 இடத்திற்குள் இருந்து வரும் நிலையில், விஜய் டிவியின் பிரபல சீரியல்கள் தொடர் சரிவை சந்தித்துள்ளன.
Weekly BARC and TRP Ratings in tamil: சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு மக்கள் தங்களுடைய ஆதாரவை தொடர்ந்து வழங்கி வருகின்றனர். அதிலும் குறிப்பாக சில சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்கள் அதிக வரவேற்பை அளிக்கின்றனர். இதில், அதிகம் ரசிக்கும் மற்றும் ரசிக்கப்பட்ட சீரியல் - நிகழ்ச்சிகளுக்கான டிஆர்பி விபரங்கள் வராந்தோறும் வெளியிடப்பட்டு வருகிறது.
Advertisment
அந்த வகையில், கடந்த வாரத்திற்கான (சனிக்கிழமை - 25 பிப்ரவரி 2022 முதல் வெள்ளி 4 - மார்ச் 2022 வரை) டிஆர்பி விபரங்கள் தற்போது வெளிவந்துள்ளன. இதில் வழக்கம்போல ஒட்டுமொத்த டிஆர்பியில் சன் டிவி முதலிடத்தை பிடித்திருக்கிறது. விஜய் டிவி இரண்டாம் இடத்தையும், ஜீ தமிழ் மற்றும் கேடிவி மூன்றாம் மற்றும் நான்காம் இடத்தையும், விஜய் சூப்பர் 5ம் இடத்தையும் பிடித்துள்ளன.
டிவி சீரியலை பொறுத்தவரை, கடந்த சில மாதங்களாகவே சன் டிவியின் கயல் சீரியல் டாப் - 5 இடத்திற்குள் உள்ளது. மேலும், இந்த சீரியல் கடந்த சில வாரங்களாக முதலிடத்திலும் இருந்து வருகிறது. இந்த நிலையில், தற்போதும் கயல் சீரியல் 10.57 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து முன்னிலையில் இருக்கிறது.
Advertisment
Advertisements
இதேபோல், சன் டிவியின் சுந்தரி சீரியல் (9.63 புள்ளிகள்) 2ம் இடத்தையும், ரோஜா சீரியல் (9.41 புள்ளிகள்) மூன்றாம் இடத்தையும், மற்றும் வானத்தைப் போல சீரியல் நான்காம் இடத்தையும் பிடித்துள்ளன. மேலும், ரேட்டிங்கிலும் நல்ல முன்னேற்றத்தை காட்டியுள்ளன.
ஆனால், சீரியல்களை ஒளிபரப்புவதில் மற்றொரு முன்னணி டிவியாக இருக்கும் விஜய் டிவியின் பிரபல சீரியல்கள் தொடர் சரிவை சந்தித்து வருகின்றன. கடந்த வாரத்தில் 6 வது இடத்தில் இருந்த பாரதி கண்ணம்மா இந்த வாரம் 8வது இடத்திற்கு பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது. 8வது இடத்தில் இருந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு 7வது இடம் தான் கிடைத்துள்ளது. ஒரே ஆறுதல் தரும் விஷயமாக 7வது இடத்தில் இருந்த பாக்கியலட்சுமி சீரியல் 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“