பாரதி ஷாக் கேள்வி… கண்ணம்மா பெயரை கூறாமல் தவிர்த்த லட்சுமி!

Tamil Serial Update : விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியலில் இன்றைய எபிசோடில் நடந்தது என்ன என்பதை பார்க்கலாம்.

Tamil Serial Update Bharathi Kannamma Serial Today Episode : சின்னத்திரை ரசிகர்களை கட்டிப்போடும் அளவிற்கு புகழ்பெற்ற சீரியல்களை விரல்விட்டு எண்ணி விடலாம். அந்த அளவிற்கு ஒரு சில சீரியல்களே மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்து வருகிறது. அந்த வகையில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் இன்றைய எபிசோடு குறித்து தற்போது பார்க்கலாம்.

ஹேமா படிக்கும் ஸ்கூலிலேயே லட்சுமியை சேர்த்து விடுகிறான் பாரதி. தொடர்ந்து ஹேமாவிற்கு சாப்பாடு ஊட்ட வரும் சௌந்தர்யா, ஸ்கூலில் கண்ணம்மா பாத்திரம் கழுவுவதை பார்த்து வேதனை அடைகிறாள். அடுத்து கண்ணம்மாவிடம் செல்லும் சௌந்தர்யா, எப்படி வாழ வேண்டிய பொண்ணு நீ, ஆனா உன்ன இந்த நிலைக்கு தள்ளிட்டேன்னு குற்றவுணர்ச்சியா இருக்கு என சொல்கிறாள். அப்போது கண்ணம்மா, நீங்க எதுக்கு அத்தை குற்றவுணர்ச்சி அடையனும், இந்த உலகத்துல நான் ஒருத்தி மட்டும் இந்த வேலைய பார்த்து வாழ்க்கைய நடத்தல என சொல்கிறாள்.

அதனை தொடர்ந்து எனக்கு ஒரு உதவி பண்ணனும் என்று கண்ணம்மாவிடம் கேட்கும் சௌந்தர்யா,  வீட்ல மல்லிகா ஒழுங்கா சமைக்குறது இல்லை. அஞ்சலியும் மாசமா இருக்குறா, எனக்கும் நெறையா வேலை இருக்கு. அதுனால ஹேமாவுக்கு சமைச்சு கொடுக்குறியா என கேட்கிறாள். மேலும்  நீ சும்மாலாம் பண்ண வேண்டாம் எல்லார்கிட்டயும் வாங்குற மாதிரி, என்கிட்டயும் சமையலுக்கு பணம் வாங்கிக்கோ என சொல்கிறாள், கண்ணம்மாவும் அதற்கு சரியென ஒப்பு கொள்கிறாள்.

இதனால் மகிழ்ச்சியடையும் சௌந்தர்யா, வீட்டுக்கு தான் வர்ற மாட்ற அட்லீஸ்ட் நான் கொடுக்குற பணத்தையாவது வாங்கிகிறியா என சொல்கிறாள். அதற்கு கண்ணம்மா,எதுக்கு அத்தை தேவை இல்லாமா பேசுறீங்க, நான் உங்ககிட்ட ஒத்த ரூபா வாங்க மாட்டேன் உங்களுக்கு தெரியும் என சொல்கிறாள். அதற்கு சௌந்தர்யா நீ பிடிவாதக்காரிடி என சொல்கிறாள். அதற்கு கண்ணம்மா இந்த பிடிவாதம் மட்டும் இல்லைன்னா எப்பவோ நான் உடைஞ்சு போயிருப்பேன் அத்தை என சொல்கிறாள்.

அதன்பின்னர் ஸ்கூலில் நடந்த விஷயங்களை நினைத்து வருத்தமாக உட்கார்ந்து இருக்கும் சௌந்தர்யாவை சமாதானப்படுத்தும் அகில் அண்ணி யார்கிட்டயும் போய் காசுக்காக நிற்கல, சுயமரியாதையா வாழுறாங்க, அதுக்காக நாம சந்தோஷம் படனும் என சொன்ன பின்னர் சௌந்தர்யா சமாதானம் அடைகிறாள். இதற்கிடையில் ஸ்கூல் முடித்து ஹேமாவும், லட்சுமியும் காத்திருக்கின்றனர். அப்போது அங்கு வரும்  பாரதியிடம்  நம்ம இன்னைக்கு லட்சுமி அம்மாவை பார்த்த பிறகு தான் இங்க இருந்து போறோம் என ஹேமா சொல்கிறாள். பாரதியும் சரி வெயிட் பண்ணி பார்த்துட்டு போவோம் என்கிறான். அதன் பிறகு லட்சுமியை ஹேமா வீட்டிற்கு அழைக்கிறாள், நான் என் அம்மாகிட்ட கேட்டு சொல்றேன் என் லட்சுமி சொல்கிறாள்.

அப்போது பாரதி, உன் அம்மா பெயர் என்ன, இத்தனை நாள் நானும் கேட்காம விட்டுட்டேன் என சொல்கிறான். கண்ணம்மா ஸ்கூலில் யாரிடமும் தன்னை பற்றி கூற கூடாது என்று சொன்னதால், யோசித்து கண்மணி என சொல்கிறாள். இதற்கிடையில் ஆட்டோவில் வரும் கண்ணம்மா, பாரதி நிற்பதை பார்த்து வண்டியை நிறுத்த சொல்லி, ஆட்டோக்காரரை போய் லட்சுமியை கூப்பிட்டு வர்ற சொல்கிறாள். குமாரும் போய் லட்சுமியை அழைத்து வருகிறான்.

ஆட்டோவில் போகும்போது நீ ஏன்மா வரல, உனக்காக டாக்டர் அங்கிள் வெயிட் பண்ணாரு என சொல்லும் லட்சுமி, பாரதி அவளோட பெயரை கேட்டதை பற்றியும் சொல்கிறாள். உன்னால நான் இன்னைக்கு பொய் சொல்லிட்டேன், அதுவும் உன் பேரை மாத்தி சொல்லிட்டேன் என லட்சுமி சொல்கிறாள். இதுஎல்லாமே உன் நல்லதுக்கு தான், ஒருநாள் உனக்கு இதெல்லாம் புரியும் என கண்ணம்மா சொல்கிறாள். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil seril update bharathi kannamma serial today episode

Next Story
காமெடி கதறல்: சிவாங்கிக்கே டஃப் கொடுத்த தங்கதுரை வீடியோ
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express