விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தன்னுடன் வந்துவிட்ட மகள் இனியாவிடம் இனிமேல் உன்னை விட்டு போகமாட்டேன் என்று கோபி சொல்லும் ப்ரமோ தற்போது வைரலாகி வருகிறது.
சின்னத்திரையில் பாக்கியலட்சுமி சீரியலில் கோபி ராதிகாவை திருமணம் செய்துகொண்டு தனியாக சென்றுவிட்ட நிலையில். தற்போது இனியாவும் வீட்டை விட்டு அப்பாவிடம் சென்றுவிடுவது போல் ப்ரமோ வெளியாகியுள்ளது.
தமிழ் சின்னத்திரையில் முக்கிய சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.
தற்போது கோபி தனது குடும்பத்தில் இருந்து பிரிந்து ராதிகாவை திருமணம் செய்துகொண்ட நிலையில், பாக்யா தனி ஆளாக குடும்பத்தை கவனிக்க தொடங்கிவிட்டார். இதனால் சீரியல் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தனது குடும்பத்தின் மத்தியில் சந்தோஷமான வாழ வேண்டும் என்று ராதிகாவை அழைத்துக்கொண்டு தனது வீட்டுக்கு பக்கத்திலேயே குடி வந்த கோபி, தற்போது சந்திக்கும் சிக்கல்கள் பரபரப்பின் உச்சமாக இருக்கிறது.
இதனிடையே கடந்த வாரம் இனியா ஸ்கூலில் செல்போன் பயன்படுத்தியது குறித்து கோபி ஸ்கூலுக்கு சென்றதால் இனியாவை பாக்யா மற்றும் தாத்தா பாட்டி அனைவரும் திட்டினர். இதனால் இனியா கோபியுடன் ராதிகா வீட்டுக்கு வந்துவிட்டார். கூடவே கோபியின் அப்பாவும் இப்போது கோபி வீட்டில் தான் தங்கியுள்ளார்.
இந்நிலையில், சமீபத்தில் வெளியாக ப்ரமோவில், நீ மயூ கூட படுத்துக்கோ என்று கோபி சொல்ல இல்ல டாடி நான் இங்கேயே படுத்துக்கிறேன் என்று இனியா சொல்கிறாள். அதன்பிறகு கோபி தனது கடந்த கால நினைவுகள் குறித்து இனியாவிடம் சொல்லிக்கொண்டிருக்கிறார். இதை கேட்டு கோபியின் அப்பா மகிழ்ச்சியடைகிறார்.

அதன்பிறகு இனியா நான் வீட்டுக்கு போகட்டுமா என்று கோபியிடம் கேட்க, ஏன் இங்க என்ன பிரச்சினை என்று கோபி கேட்கிறார். இங்க பிரச்சனை இல்ல ஆனா அம்மாவும் பாவம் என்று இனியா சொல்ல, அப்போ நான் பாவம் இல்லையா என்று கோபி கேட்கிறார் மேலும் இப்படியெல்லம் இனிமே பேசக்கூடாது யோசிக்க கூடாது என்றும் சொல்கிறார்.
உனக்கு அந்த வீட்டில் இருந்து எதாவது தேவைனா சொல்லு அப்பாட்ட சொல்லி எடுத்துட்டு வர சொல்றேன் என்று கோபி சொல்கிறார். அதற்கு இனியாவும் சரி என்று சொல்கிறார். நீதான் எனக்கு எல்லமே இங்கேயே இரு இனியா. உனக்கு அப்புறம்தான் வாழ்க்கையில் எல்லாமே. நீ இல்லனா ரொம்ப கஷ்டமா இருக்கும்மா தயவு செய்து போகாதடா என்று கோபி சொல்ல போகமாட்டேன் என்று இனியாவும் சத்தியம செய்கிறாள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“