Advertisment
Presenting Partner
Desktop GIF

திருநங்கைகள் பங்களிப்பில் விநோதன் நீ : குறும்பட பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

பெண்களின் நம்பிக்கையை சமூக வலைதளம் மற்றும் தொலைபேசியினால் எப்படியெல்லாம் தவறாக பயன்படுத்துகிறார்கள் என்பதை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது

author-image
WebDesk
New Update
திருநங்கைகள் பங்களிப்பில் விநோதன் நீ : குறும்பட பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

கோவையில் திருப்பூர் ஈஷா மீடியா தயாரிப்பில் திருநங்கை வாழ்வில் நடைபெறும் சம்பவத்தை கதை கருவாக வைத்து எடுக்கப்பட்டு வரும் குறும்படம் விநோதன் நீ. பல்வேறு குறும்பட விருதுகளை பெற்ற குறும்பட இயக்குனர் குமார் தங்கவேல் இந்த குறும்படத்தை இயக்கியுள்ளார்.

Advertisment

இதனைத் தொடர்ந்து சியான் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் இயக்குனர் ஜெகதீஸ்வரன் ரகு குமார் இயக்கத்தில் யாசின் நடித்துள்ள 8 வோல்டர்  குறும்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இன்றைய நவீன தொழில் நுட்ப வளர்ச்சியால் தொலைபேசியில் பல்வேறு வசதிகள் உள்ளன. இந்த கலியுகத்தில் பெண்களின் நம்பிக்கையை சமூக வலைதளம் மற்றும் தொலைபேசியினால் எப்படியெல்லாம் தவறாக பயன்படுத்துகிறார்கள் என்பதை மைய கருத்தாக வைத்து இந்த குறும்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

publive-image

கோவையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் இவ்விரு படங்களின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களை முன்னாள் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி அ.முகமது ஜியாவுதின் வெளியிட்டார். படத்தின் கதையை கேட்ட நீதிபதி, பட குழுவினரின் இந்த முயற்ச்சிக்கு பாராட்டுகள் மற்றும் வாழ்த்துக்களை தெரிவித்தார். பர்ஸ்ட் லுக் போஸ்டர்களை வெளியிட்டு பேசிய முன்னாள் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி அ.முகமது ஜியாவுதின் கூறுகையில்,

இன்று சமூகத்தில் நடக்கும் பல்வேறு பிரச்சினைகளை அதன் பாதிப்புகளை அதற்கான தீர்வுகளை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் இதுபோன்ற குறும்படங்கள் முக்கிய பங்காற்றும். இதுபோன்ற சமூக அவலங்களை வெளி கொண்டு வரும் வகையில் பல புதிய படைப்புகளை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் நிறுவனர் தலைவர் ஆர்.கே.குமார்  பட குழுவினருக்கு பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்ததுடன் கடந்த அக்டோபர் மாதம் கோவையில் நடைபெற்ற அமைப்பின் ஜம்பெரும் விழாவில் கலந்து கொண்ட அமைப்பின் கெளரவ தலைவரும் முன்னாள் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியுமான நீதியரசர் எம். கற்பகவிநாயகம் தனது உரையில் கூறியவற்றை நினைவு கூர்ந்தார்.

publive-image

முன்னாள் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி நீதியரசர் எம்.கற்பகவிநாயகம் சொன்னதுபடி, தற்போது தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி மிகவும் பிரமாண்ட வளர்ச்சி பெற்றுள்ளது. இந்த தளங்களை முறையாக மக்களுக்கு பயன் தரும் வகையில், அதை இன்றைய இளைஞர்கள் பயன்படுத்த வேண்டும், வெறும் பொழுதுபோக்கு தளமாக மட்டும் இல்லாமல் பெண்கள் குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு பயன்தரும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இருக்க வேண்டும் என்பதை தற்போது நினைவு கூறுகிறேன்.

முன்னாள் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியுமான நீதியரசர் எம். கற்பகவிநாயகம் கூறிய அறிவுரை மற்றும் ஆலோசனைகளை ஏற்று செயல்படுத்தும் விதத்தில் இப்படக்குழவினர் செய்து வருவது பாரட்டுக்குறியது எனவும் தெரிவித்துள்ளார்.

விநோதன் நீ குறும்படத்தில் நடிகைகள் ஜீலி,  திருநங்கை கோவை மீரா, எஸ்தர் ராணி, வீரலக்ஷ்மி, நடிகர்கள் கார்த்தி, தர்மா, ஆன்டனி, தாமஸ், ஜான், விஜய் முரளிதரன், சாமி மீசை, பால விஜய் ,லோகன், அங்கமுத்து, பழனிசாமி, பரூக், காளிஸ்வரன், சுருள் ராமசாமி, விஜய்காளியப்பன், ஆரோக்கியசாமி ஆகியோர் நடித்துள்ளனர்.

publive-image

இப்பட ஒளிப்பதிவை யாசின், இசையை பேராவூரணி பாலகுமார்  ஆகியோர் செய்கின்றனர். புரொடக்சன் மேனஜராக செந்தில் குமரன் அசோசியேட் மெனேஜராக யோக ராஜ் ஆகியோர் பணியாற்றினர். இப்படத்தின் கதை திரை கதை பாடல் வசனம் எடிட்டிங் பணிகளை இயக்குனர் குமார் தங்கவேல் செய்கிறார்.

இப்படத்தில் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் மாற்றம் அமைப்பின் நிர்வாகியும் நடிகருமான ஆர்.ஏ.தாமஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசோஸியட் இயக்குனராவும் பணியாற்றியுள்ளார். இந்நிகழ்வில் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் இணை செயலாளர் எம்.விஜய்ராவ் மற்றும் பட குழுவினர் திரளாக கலந்து கொண்டனர்.

க.சண்முகவடிவேல்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment