scorecardresearch

சிட்டி ரோபோவாக மாறிய சிவாங்கி; மேக்கப் சீக்ரெட் தெரிஞ்சுக்கோங்க!

Tamil Reality Show : பல திரைப்படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் சிவாங்கி சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார்.

சிட்டி ரோபோவாக மாறிய சிவாங்கி; மேக்கப் சீக்ரெட் தெரிஞ்சுக்கோங்க!

Cook With Comali Shivangi New Getup : தமிழ் சின்னத்திரையில்முக்கிய நட்சத்திரமாக இருப்பவா சிவாங்கி. விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இவர், தனது குரலை வைத்தே ரசிகர்களின் மனதை கவர்ந்தார். தொடர்ந்து விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக நடித்து வரவேற்பை பெற்றார்.

இந்த நிகழ்ச்சியில் புகழுடன் இவர் செய்யும் செட்டைகள் ரசிகர்கள் மனதில் நீங்க இடம் பிடித்தது. இந்த நிகழ்ச்சி முடிந்த பின்னரும் வலைதளங்களில் இவர்களின் காமெடி வீடியோக்களுக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. தற்போது குக் வித் கோமாளி சீசன் 3-ல் பங்கேற்றுள் சிவாங்கி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்த வகையில் சிவகார்த்திகேயனுடன் இவர் நடித்துள் டான் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. மேலும் பல திரைப்படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் சிவாங்கி சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார். இதில் அவ்வப்போது இவர் வெளியிடும் புகைப்படம் மற்றும் விடியோ பதிவுகள் வைரலாகி வருவது வழக்கம்.

அந்த வகையில் தற்போது சிவாங்கி வெளியிட்டுள்ள சிட்டி ரோபோ வீடியோ வைரலாகி வருகிறது. குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்காக அவ்வப்போது புதிய புதிய வேட்ஙகில் தோன்றும் சிவாங்கிகடந்த சில தினங்களுக்கு முன்பு எந்திரன் படத்தில் வரும் சிட்டி ரோபோ போன்று வெட்மிட்டு வந்தார். இந்த கெட்டப் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரறே்பை பெற்று வருகிறது.

இதில் தற்போது இந்த ரோபோ வேடம் எப்படி போடப்பட்டது என்ற வீடியோவை சிவாங்கி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வரும் நிலையில். சிவாங்கி கெட்டப் சூப்பர் என்று பலரும் கருத்துக்களை கூறி வருகின்றனர்.    

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil singer and actress shivangi new chitty robo getup viral