Advertisment
Presenting Partner
Desktop GIF

பிரபல பாடகர் 102 டிகிரி காய்ச்சலில் பாடிய பாட்டு; வழக்கத்தை விட பிரமாதம்: ஏ.ஆர் ரகுமான் கொடுத்த மெகா ஹிட்

ரோஜா படத்தில் இடம் பெற்ற தமிழா தமிழா என்ற பாடலை பாடியர் பாடகர் ஹரிகரன்.

author-image
WebDesk
New Update
AR Rahman Jan 6

இந்திய சினிமாவில், பல மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ள பாடகர் ஹரிகரன் 102 டிகிரி காய்ச்சலுடன் ஒரு பாடலை பாடியுள்ளார். அந்த பாடல் இன்றும் மிகப்பெரிய ஹிட் பாடலாக ரசிகர்கள் மனதில் ஒளித்துக்கொண்டிருக்கிறது என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.

Advertisment

1992-ம் ஆண்டு வெளியான ரோஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக இந்திய சினிமாவில் அறிமுகமானவர் ஏ.ஆர்.ரஹ்மான். இந்த படத்தில் இடம் பெற்ற தமிழா தமிழா என்ற பாடலை பாடியர் பாடகர் ஹரிகரன். ரோஜா படம் வெளியாவதற்கு முன்பே இருவருக்கும் இடையே நெருங்கிய நட்பு இருந்துள்ளது. அதன் காரணமாக ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் பல படங்களில் ஹரிகரன் பாடல் பாடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

இவர்களின் கூட்டணியில் வெளியான பல பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இன்றும் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையிலான ஒரு பாடல் லவ் பேட்ஸ் படத்தில் இடம் பெற்றுள்ளது. 1996-ம் ஆண்டு பி.வாசு இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் பிரபுதேவா, நக்மா, வடிவேலு, மனோரமா, சரத்பாபு, விஜயகுமார், ராஜா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

படத்தில் அனைத்து பாடல்களையும் கவிப்பேரரசு வைரமுத்து எழுதியிருந்தார். இதில் மலர்களே மலர்களே என்ற பாடல் இன்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த பாடல் பதிவின்போது, பாடகர் ஹரிகரனுக்கு 102 டிகிரி காய்ச்சலால் அவதிப்பட்டுள்ளார். ஆனாலும் அப்போது இவரின் குரலை கேட்ட ரஹ்மான், பரவாயில்லை குரல் நன்றாக இருக்கிறது பாடுங்கள் என்று கூறியுள்ளார். அதன்பிறகு கே.எஸ்.சித்ராவுடன் ஹரிகரன் இந்த பாடலை பாடியுள்ளார். இந்த பாடல் இப்போவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment