scorecardresearch

மறக்க முடியாத பாடகி ஜென்சி: ஜேசுதாஸ், இளையராஜா கை கொடுத்தும் கேரளாவில் ஒதுங்கியது ஏன்?

அவரது குரலுக்கு இருக்கும் வரவேற்பை பார்த்து நீ சென்னையில் தங்கிவிடு என்றும் இளையராஜா பாடகி ஜென்சியிடம் கூறியிருக்கிறார்.

Singer Jency
பிரபல பாடகி ஜென்சி

திரைத்துறையில் நடிகர் நடிகைகளின் மார்க்கெட்களில் ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும், பாடகர்கள் மற்றும் பாடகிகளுக்கு எப்போதும் வரவேற்பு அதிகமாக இருப்பது வழக்கமான ஒன்று. அவர்களின் குரலுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் தனி வரவேற்பு இருக்கும். அப்படி இருந்தாலும் ஒரு சில பாடகர்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தாலும் சில வருடங்களில் காணாமல் போய்விடுகிறார்கள்.

இந்த வரிசையில் முதல் இடத்தை பிடித்திருப்பவர் பாடகி ஜென்சி. பிரபல பின்னனி பாடகர் ஜேசுதாஸ் அவர்களால் மலையாள திரையுலகில் பாடகியாக அறிமுகம் செய்யப்பட்ட ஜென்சிக்கு தமிழில் அறிமுகம் கொடுத்தவர் இசைஞானி இளையராஜா. இளையராஜா இசையில் பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ள ஜென்சிக்கு இளையராஜா தொடர்ந்து வாய்ப்பு கொடுத்துள்ளார்.

அதேபோல் அவரது குரலுக்கு இருக்கும் வரவேற்பை பார்த்து நீ சென்னையில் தங்கிவிடு என்றும் இளையராஜா பாடகி ஜென்சியிடம் கூறியிருக்கிறார். ஆனால் பாடகியாக இருப்பதற்கு ஜென்சியின் குடும்பத்தில் அவரது அப்பாவுக்கு விருப்பம் இல்லை என்பதால் பாடுவதையே நிறுத்திவிடலாம் என்று எண்ணியிருந்த ஜென்சி, இளையராஜாவின் பேச்சை கேட்க மறுத்துள்ளார்.

தொடர்ந்து, கேரளாவில் இசை ஆசிரியராக பணியாற்றி வந்த அவர், அத்துடன் தனது திரை பயணத்தை முடித்துக்கொண்டுள்ளார். சமீபத்தில் ஜென்சி குறித்து பேசிய பிரபல இயக்குனர் தயாரிப்பாளர் பத்திரிக்கையாளர் சித்ரா லட்சுமணன் கூறுகையில், 80 காலக்கட்டத்தில் கேரளாவில் தமிழ் படங்கள் திரையிடப்படாத காரணத்தினால் தான் ஜென்சி கேரளாவில் பெரியதாக பிரபலமாகவில்லை என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

ஜென்சி இனிமேல் பாடப்போவதில்லை என்று முடிவு செய்தபோது அவரை எந்த இசையமைப்பாளரும் கேட்கவில்லை. பக்கத்தில் இருக்கும் கேரளா மாநிலம் கொச்சியில் வசித்து வந்த ஜென்சியை அவரின் வளர்ச்சியை பார்த்து ஓரம்கட்டியிருக்கலாம். இது ஜென்சிக்கு புரியாமலும் இருந்திருக்கலாம் என்று கூறியுள்ளார்.

1978-ம் ஆண்டு திரிபுர சுந்திரி படம் தொடங்கி, முள்ளும் மலரும், வட்டத்துக்குள் சதுரம், பிரியா, புதிய வார்ப்புகள், நிறம் மாறாத பூக்கள் உள்ளிட்ட பல படங்களில் ஹிட் பாடல்களை கொடுத்துள்ள ஜென்சி கடைசியாக கடந்த 1982-ம் ஆண்டு வெளியான எச்சில் இரவுகள் படத்தில் பூத்து நிக்குது காடு என்ற பாடலை பாடகர் மலேசியா வாசுதேவனுடன் இணைந்து பாடியிருந்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil singer jency birthday special why her not continue in cine industry

Best of Express