இந்திய சினிமாவில் பல பாடல்களை பாடியுள்ள, பி.சுசீலா சினிமாவுக்காக தனது முதல் பாடலை பாடியபோது, அங்கிருந்த அனைவரும் கண்ணீர்விட்டு அழுததாக அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
க்ளாசிக் சினிமாவில் முன்னணி பாடகிகளில் ஒருவராக திகழ்ந்த பி.சுசீலா, பல முன்னணி நடிகைகளுக்கும் தனது இனிமையான குரலின் மூலம் வெற்றியை கொடுத்துள்ளார். எம்.ஜி.ஆர், சிவாஜி, முத்துராமன், ஜெமினி கணேசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் பாடல்களை பாடியுள்ள பி.சுசீலா இன்றும் அவரது பாடல்களை ரசிக்க தனி ரசிகர்கள் பட்டாளத்தை ஏற்படுத்தி வைத்துள்ளார் என்று சொல்லலாம்.
தற்போது பாடல்கள் பாடுவதில் இருந்து விலகி இருக்கும் சுசீலா, தனது முதல் சினிமா அனுபவம் குறித்து ஒரு பேட்டியில் கூறியுள்ளார். என் வீட்டில நான் சோம்பேறி, என் தாத்தா வீணை வாசிப்பதில் வித்வான். அதனால் எனக்கும் வீணை சொல்லிக்கொடுத்தார்கள் ஆனால் எனக்கு சரியாக ஏறவில்லை. அதன்பிறகு எனது சகோதரிகளுக்கு வீட்டில் பாட்டு சொல்லிக்கொடுத்தார்கள். அதை பார்த்து நானும் பாடல் கற்றுக்கொண்டு கச்சேரி நடத்தினேன்.
எங்கு எந்த கச்சேரி நடத்தாலும் என்னை என் அப்பா அழைத்து செல்வார். அதேபோல் நாடகம் நடத்தால் அதில் இருக்கும் கலைஞர்களை அழைத்து வந்து என் பாடலை கேட்குமாறு செய்வார். அப்படி ஒருமுறை பாப்பா தமலர் என்பவர் ஒருமுறை என் பாடலை கேட்டார். அவர் என் பாடலை கேட்டுவிட்டு, நல்ல குரல் சினிமாவில் பாட வையுங்கள் என்று சொல்லிவிட்டார். ஆனால் என் அப்பாவுக்கு சினிமாவே பிடிக்காது. அவருக்காக இசை கல்லூரியில் படித்து பட்டம் பெற்றேன்.
ஒருமுறை, ரேடியோவுக்காக பாப்பா மலர் என்னை பாட அழைத்து சென்றார். அப்போது தெலுங்கு மட்டுமே தெரியும் என்பதால் தெலுங்கில் சினிமா பாடல் ஒன்றை பாடடியுள்ளார். ‘காது சும்மா காது சும்மா’ என்ற அந்த பாடலை சுசீலா பாடி முடித்தவுடன், சிறப்பாக இருந்ததாக பாராட்டினர். இது அப்படியே பிரகாஷ் ஸ்டூடியோ வரை சென்றது. அந்த சமயத்தில் பிரகாஷ்ராவ் குழந்தைகள் பற்றி எடுத்த ஒரு படத்திற்கு புது பாடகர்களை தேடிக்கொண்டிருந்தார்.
5 பேருடன் சென்றபோது முதல் 4 பேரும் பாடிவிட்டதை தொடர்ந்து பி.சுசீலா கடைசியாக பாடியுள்ளார். இந்தியில் பிரபல இசையமைப்பாளராக இருக்கும் நவ்ஷத் ஷாவின் இசையில் வெளியான, ‘முஹேபூ தி சாவானி’ என்ற பாடலை பாடியுள்ளார். இந்த பாடலை பாடி முடித்தவுடன் பட்டியால் நாகேஷ்வரராவ் அழுதுகொண்டே இருந்துள்ளார். நவ்ஷத் ஷா அவருக்கு பிடித்தமான இசையமைப்பாளர் என்பதால், இந்த பாடலை அற்புதமாக பாடிய பி.சுசீலாவின் பாடலை கேட்டு அழுதுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“