New Update
/
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என இந்திய மொழிகளில் 25 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடியுள்ள பிரபல பின்னணி பாடகி பி.சுசீலா, தற்போது திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் முடி காணிக்கை கொடுத்து தரிசனம் செய்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
க்ளாசிக் சினிமாவில் முன்னணி பாடகியாக திகழ்ந்தவர் பி.சுசீலா. 1950 தொடங்கி, தற்போதுவரை பல பாடல்களை பாடியுள்ள இவர், எம்.ஜி.ஆர் முதல் இன்றைய இளம் தலைமுறை நடிகர்கள் வரை பல முன்னணி நடிகர்களுக்கும் தனது குரலின் மூலம் ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார். அதேபோல் பின்னணி பாடகியாக முதல் தேசிய விருதை வென்ற பெண்மணி என்ற பெருமை பி.சுசீலாவுக்கு உண்டு.
தமிழ் மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், உள்ளிட்ட பல மொழிகளில் பல ஹிட் பாடல்களை பாடியுள்ள பி.சுசீலா பல முன்னணி இசையமைப்பாளருகளின் இசையில் ஹிட் பாடல்கள கொடுத்துள்ளார். சினிமாவில் பாடகியாக உச்சத்தில் இருந்த பி.சுசீலா பாடிய பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல், படமும் பெரிய வெற்றியை பெற்றிருந்தது.
இதன் காரணமாக அப்போது முன்னணி நடிகைகளாக இருந்த சாவித்ரி, பத்மினி, சரோஜா தேவி உள்ளிட்ட நடிகைகள் தங்களுக்கு பி.சுசீலா தான் குரல் கொடுக்க வேண்டும் என்று விரும்பியுள்ளனர். கடைசியாக தமிழில் கடந்த 2021ம் ஆண்டு வெளியானக நாற்பது தென்றல் என்ற படத்தில், ‘’வண்ண வண்ண கோமளமே’’ என்ற பாடலை பாடியிருந்த பி.சுசீலா, வயது மூப்பு காரணமாக தற்போது ஓய்வில் இருந்து வருகிறார்.
இதனிடையே பி.சுசீலா தற்போது திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. 2 பேரின் துணையுடன் நடக்க முடியாமல் வந்த பி.சுசீலா, முடி காணிக்கை செலுத்திவிட்டு, சாமி தரிசனம் செய்தார். மேலும் நாராயண மந்திரம் பாடலை மூச்சிறைக்க பாடி அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய சுசீலாவின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.